இலங்கையின் முதலாவது தனியாருக்குச் சொந்தமான சர்வதேச விமான சேவையான FitsAir, கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் நாளாந்த விமானங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. குறித்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான புதிய தினசரி சேவை 2023 மார்ச் 28 முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகளின் தேவையின் பிரதிபலிப்பாகவும், எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது இத்தேவை அதிகரிக்கும் எனும் எதிர்பார்ப்புடனும், வாரத்திற்கு 4 ஆக உள்ள விமான சேவைகளின் எண்ணிக்கையை நாளாந்த சேவையாக அதிகரிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து துபாய்க்கு செல்லும் வழியானது, நீண்ட தூரம் பயணிக்கும் விமானங்களுக்கான போக்குவரத்து மையமாக திகழ்வதால் பயணிகளிடையே பிரபலமாக உள்ளது.
Fits Aviation (Pvt) Ltd. நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Ammar Kassim இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “கொழும்பிலிருந்து துபாய்க்கான எமது சேவையின் எண்ணிக்கையை தினசரி சேவையாக அதிகரித்துள்ளமையை அறிவிப்பதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கான தடையற்ற இணைப்பை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பை இந்த மேம்படுத்தல் எடுத்துக்காட்டுகிறது.” என்றார்.
இப்புதிய தினசரி விமான சேவையின் மூலம், உலகின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மற்றும் வணிகப் பயணிகளுக்கான மையமாகவும் விளங்கும் துபாயை பார்வையிடுவதற்கான சிறந்ததொரு வாய்ப்பை பெற முடியும். உலகத் தரம் வாய்ந்த பொருட்கள் கொள்வனவு செய்யும் அனுபவம், ஆடம்பரமான தங்குமிடங்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் சாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு கண்கவர் விடயங்களை அனைவருக்கும் வழங்கக்கூடிய இடமாக துபாய் விளங்குகிறது.
அண்மையில் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையேயான விமான சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் FitsAir அதன் மற்றுமொரு புதிய நகருக்கான சேவையை இணைத்திருந்தது. 2022 ஒக்டோபரில் விமானப் பயண சேவைகளை நிறுவனம் ஆரம்பித்ததிலிருந்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அத்துடன் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவான பயணத் தெரிவுகள் மற்றும் சிறந்த இணைப்பை ஏற்படுத்துவதற்கான அதன் சான்றையும் அர்ப்பணிப்பையும் இதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
போட்டித் தன்மையான விலையில், நடைமுறை ரீதியான பயண தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் FitsAir நிறுவனம், நட்புறவான, குறைந்த கட்டணத்திலா, இலங்கை விமான சேவையாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் காலாண்டில், FitsAir நிறுவனம் 3 புதிய சர்வதேச நகரங்களுக்கான சேவைகளையும் அறிவிக்க திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அல்லது மேலதிக தகவலுக்கு www.fitsair.com எனும் FitsAir உத்தியோகபூர்வ இணையத்தளத்தை பார்வையிடலாம் அல்லது (+94) 117 940 940 எனும் தொலைபேசி இலக்கம் அல்லது WhatsApp (+94) 777 811 118 இலக்கம் ஆகியன ஊடாக, வாடிக்கையாளர் சேவை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.