தனது டிஜிட்டல் வெளிப்படுத்தலை புதிய பயனர் நட்பு இணையத்தளமாக மேம்படுத்தியுள்ள DIMO

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது புதிய இணையத்தளமான www.dimolanka.com யினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது, தனது டிஜிட்டல் வெளிப்பாட்டை மேம்படுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் விரிவான மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விவசாயம், கட்டட சேவைகள், கட்டுமானம், டிஜிட்டல், கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் தோட்டம், தொழில்துறை, வாகனம், மின்சக்தி, வலுசக்தி மற்றும் நீர் உள்ளிட்ட DIMO வின் 10 முக்கிய துறைகளை இந்த இணையத்தளம் காட்சிப்படுத்துகிறது.

பயனர் நட்பு வடிவமைப்பு, எந்தவொரு இணைய சாதனத்திலிருந்தும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, DIMO மற்றும் அதன் சலுகைகள் பற்றிய விரிவான தகவல்கள், செய்தி வெளியீடுகளை பெறும் வசதி, பயோடேட்டாக்களை அனுப்புவதற்கான வசதி, விபரங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு போன்ற பெறுமதி சேர் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது, இந்த இணையத்தளத்தின் முக்கிய அம்சங்களாகும்.

DIMO வின் கலாசாரம் மற்றும் மதிப்புகளை வெளிப்படுத்துகின்ற, நிறுவனத்துடன் எதிர்காலத்தில் இணையும் சாத்தியம் கொண்ட பணியாளர்களை இணைக்கும் தளமாகவும் இந்த இணையத்தளம் செயற்படுகிறது. நிலைபேறானதன்மை மற்றும் முதலீட்டாளர் உறவுகள் பற்றிய பகுதிகள், திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் பற்றிய சமீபத்திய தகவல்களை வழங்குகின்றன. குறிப்பாக முதலீட்டாளர்கள் மற்றும் சாத்தியமான வணிகப் பங்காளிகளுக்காக இது உதவியாக இருக்கும்.

DIMO வின் பெருநிறுவன தொடர்பாடல் பொது முகாமையாளர் யொஹான் திலகரத்ன இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “பயனர்களுக்கு ஏற்ற, பார்ப்பதற்கு ஈர்க்கும் வகையிலான, விரிவான இப்புதிய

இணையத்தளமானது ஒரு சாதகமான தாக்கத்தை உருவாக்கும் என்பதோடு, பயனர்களின் ஒட்டுமொத்த அனுபவத்தையும் மேம்படுத்தும். மேம்படுத்தப்பட்ட SEO (தேடு பொறி மேம்படுத்தல்) மற்றும் இணைய பகுப்பாய்வுக்கான சமீபத்திய ஒருங்கிணைப்புகள் யாவும், எமது பயனர் நடத்தையை பகுப்பாய்வு செய்வதற்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப எமது தயாரிப்பு வழங்கல்களை சீரமைக்கவும் எமக்கு உதவும்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புதிதாக தொடங்கப்பட்ட நிறுவன இணையத்தளமானது, நாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிக்கின்ற, எமது நிறுவனத்தின் நோக்கத்தை ஆதரிப்பதன் மூலம், எமது பங்குதாரர்களுக்கு தரமான தகவலை வழங்கி, நாம் ஒரு ‘சரியான பங்குதாரர்’ எனும் எமது வர்த்தகநாம வாக்குறுதியை, மிக உறுதியான முறையில் வழங்கும் என நாம் ஆழமாக நம்புகிறோம்.” என்றார்.

DIMO வின் புதிய இணையத்தளமானது, இன்றைய டிஜிட்டல் உலகில் முன்னோக்கிய ஒரு பாரிய படியாகும். அதன் நவீன வடிவமைப்பு மற்றும் பயனர் நட்பு அம்சங்கள் யாவும், வசதியை உறுதி செய்து, நிறுவனத்தின் தகவல்களை எளிதாக அணுக உதவுகிறது. இது DIMO வர்த்தகநாமம் மற்றும் அதன் மதிப்பின் உண்மையான டிஜிட்டல் பிரதிநிதித்துவமாகும்.

ஆக்கபூர்வமான சேவைகள், தொழில்நுட்ப புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தீர்வுகளை வழங்கி வரும் Antyra Solutions எனும் முன்னணி ஒருங்கிணைந்த நிறுவனத்தால் இந்த இணைத்யதளம் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்து.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *