HUAWEI CLOUD, Pangu 3.0-ஐ வெளியிடுகிறது: சாட்போட்களுக்கு அப்பால் எதிர்காலத்தை வடிவமைக்கிறோம்: தொழில்துறை மாற்றத்தில் AI ஏற்படும் தாக்கத்தில் Huawei கவனம் செலுத்துகிறது

AI அலையால் உந்தப்படும் புதிய தொழில்துறை வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை Huawei முன்னெடுக்கிறது. HUAWEI CLOUD-இன் Huawei நிர்வாக இயக்குநரும் CEOவுமான ஜாங் பிங்கன் அவர்கள் Huawei-இன் டெவலப்பர் மாநாட்டில் தனது மைய உரையின்போது, Pangu Model 3.0 மற்றும் Ascend AI கிளவுட் சேவைகளை வெளியிட்டார். இந்தக் கண்டுபிடிப்புகள் தொழில்துறை வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும் பல்வேறு துறைகளில் மாற்றத்தக்க வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவின் திறனைத் திறக்கின்றன.

Pangu Models 3.0 என்பது முன் பயிற்சி பெற்ற மாதிரிகளின் அமைப்பாகும், இது சூழ்நிலை சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பல தொழில்துறைகளில் உள்ள சிக்கலான சவால்களை எதிர்கொள்ளவும் விரைவாக மாற்றியமைக்கப்படலாம். பெரிய அளவிலான தரவுத் தொகுப்புகள் மற்றும் எந்திரக் கற்றல் நெறிமுறைகளை மேம்படுத்துவதன் மூலம், வானிலை முன்னறிவிப்பு, மருந்து மேம்பாடு, ரயில்களில் தவறுகளைக் கண்டறிதல் மற்றும் சுரங்கத் தொழில் போன்ற பல்வேறு பகுதிகளில் AI-இன் தொழில்துறைப் பயன்பாட்டில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் Pangu 3.0 அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் திரு. ஜாங் கூறியதாவது: “Huawei Cloud Pangu மாதிரிகள், ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைவருக்கும் ஓர் அறிவார்ந்த உதவியாளராக ஆற்றலை அளிக்கும், இதன் மூலம் அவர்களின் உற்பத்தியும் திறனும் மேம்படும். “தொழில்துறைகளுக்கான AI” என்ற எங்கள் நோக்கத்தை நாங்கள் தாங்கிப்பிடித்து, AI உடன் அனைத்துத் தொழில்துறைகளையும் மாற்றியமைக்க Pangu மாதிரிகளைப் பயன்படுத்துவோம்.

புகழ்பெற்ற அறிவியல் இதழான Nature சமீபத்தில் வானிலை முன்னறிவிப்புக்குச் செயற்கை நுண்ணறிவு கொண்டுள்ள மகத்தான திறனை விவரிக்கும் ஒரு கட்டுரையை வெளியிட்டது. 43 வருடத் தரவைப் பயன்படுத்தி ஆழ்ந்த கற்றலின் அடிப்படையில், Huawei-இன் Pangu வானிலையியல் மாதிரிக் குழு எவ்வாறு சரியான மற்றும் துல்லியமான உலகளாவிய AI வானிலை முன்னறிவிப்பு அமைப்பை உருவாக்கியது என்பதைப் பேப்பர் விவரித்தது

உலக வானிலையைச் சில வினாடிகளில் கணிக்கும் திறனுடன், இந்த AI அடிப்படையிலான தீர்வு பாரம்பரிய எண்ணியல் முன்னறிவிப்பு மாதிரிகளின் துல்லியத்தை 20% விஞ்சி 10,000 மடங்கு வேகமாக முடிவுகளை வழங்குகிறது. மாதிரியானது முக்கியக் கூறுகள் மற்றும் பொதுவான நேர வரம்புகளில் கவனம் செலுத்துகிறது, மேலும் துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளை அனுமதிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு மே மாதம் ஏற்பட்ட சமீபத்திய மாவார் கடும் புயல் உட்பட, கடும் புயல்களின் பாதைகள் மற்றும் கரையைக் கடக்கும் நேரங்களை இது துல்லியமாகக் கணித்துள்ளது, இது அதன் விதிவிலக்கான திறன்களை நிரூபிக்கிறது.

ஜூலை 18 அன்று, Huawei மற்றும் Shandong Energy Group இணைந்து, ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஜினானில் Pangu சுரங்க மாதிரியின் முதல் வணிகச் செயல்பாட்டைத் தொடங்கும். இது பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் ஒரு சிறந்த தீர்வாகும். பாரம்பரியச் சுரங்க செயல்பாடுகள் இயல்பாகவே ஆபத்தானவை, விரிவான மனிதவளம் தேவைப்படுபவை மற்றும் குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புச் சவால்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், Pangu சுரந்த மாதிரி மூலம் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் செயல்படுத்தி, இந்தத் தொழில்துறையானது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண்கிறது. மாதிரியின் முன் பயிற்சிக்காகப் பெரிய அளவிலான தரவை இறக்குமதி செய்வதன் மூலம், நிலக்கரிச் சுரங்கச் செயல்பாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட துணை காட்சிகளை உள்ளடக்கிய Pangu சுரங்க மாதிரியானது மேற்பார்வை செய்யப்படாத சுய கற்றலைச் செயல்படுத்துகிறது. சுரங்கம் தோண்டுதல் மற்றும் துளைத்தல் முதல் இயந்திரங்கள், போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்பு வரை பலதரப்பட்ட நிலக்கரிச் சுரங்க காட்சிகளில் AI பயன்பாடுகளை இந்த மாதிரி நெறிப்படுத்துகிறது.

நிலக்கரிச் சுரங்கங்களில் போக்குவரத்து அமைப்பு தோல்விகள் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும், இதன் விளைவாக நிலக்கரி உற்பத்தி குறைந்து நிதி இழப்பு ஏற்படுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளும் வகையில், Huawei-இன் Pangu சுரங்க மாதிரியானது, 98% வரையிலான விதிவிலக்கான துல்லிய விகிதத்துடன், பெரிய நிலக்கரித் தொகுதிகள் மற்றும் நங்கூரங்கள் போன்ற போக்குவரத்து அமைப்பில் உள்ள விதிவிலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியும் AI அடிப்படையிலான அறிவார்ந்த கண்காணிப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. Pangu சுரங்க மாதிரியானது சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி மீட்பு விகிதங்களை 0.1% அதிகரிக்கலாம். 10 மில்லியன் டன் நிலக்கரியைச் செயலாக்கும் ஒரு கோக்கிங் நிலக்கரி தயாரிப்பு ஆலையில், சுத்திகரிக்கப்பட்ட நிலக்கரி உற்பத்தியில் 0.1% அதிகரிப்பு என்பது USD1m-கும் அதிகமாக வருடாந்திர லாபத்தை அதிகரிக்கும்.

Huawei-இன் AI முன்னேற்றங்களிலிருந்து ரயில்வே துறையும் பெரிதும் பயனடைகிறது. Pangu ரயில் மாதிரியைச் செயல்படுத்துவதன் மூலம், சரக்கு ரயில்களின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ரயில் சரக்கு கண்டறிதல் அமைப்புகளில் (TFDS) முந்தைய தவறுகளை அடையாளம் காணும் செயல்முறைகள் உழைப்பு மிகுந்ததாகவும், திறமையற்றதாகவும் மற்றும் விலை உயர்ந்ததாகவும் இருந்தன. இருப்பினும், Pangu ரயில்வே மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், செயல்முறையானது புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. 442 வகையான தவறுகளைத் துல்லியமாகக் கண்டறிதல், பெரிய தவறுகளுக்கு 99.99%-க்கும் அதிகமாகவும், பொதுவான தவறுகளுக்கு 98%-க்கு அதிகமாகவும் துல்லியமாகக் கண்டறிவது இதைச் சாத்தியமாக்கியுள்ளது.


இந்த ஆய்வுகள் தொழில்துறைப் பயன்பாடுகளில் AI-இன் பரிமாற்றும் சக்தியை எடுத்துக்காட்டுகின்றன. Huawei-இன் Pangu 3.0 மற்றும் Ascend AI கிளவுட் சேவைகளின் திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம், வணிகங்கள் புதிய அளவிலான பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனைக் கண்டடையலாம், அந்தந்த தொழில்துறைகளில் கணிசமான வளர்ச்சி மற்றும் போட்டி நன்மைகளை உருவாக்கலாம். புதுமைக்கான Huawei-இன் அர்ப்பணிப்பும் மேம்பட்ட AI தீர்வுகளை மேம்படுத்துவதும் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 


—முடிவு—

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *