ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இலங்கையின் முதன்மையான பணியிடங்களில் ஒன்றாகத் தொடரும் DIMO

பாரிய அளவிலான பணியிட வகைகளின் கீழ், இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடம் எனும், DIMO நிறுவனத்தின் சுட்டிக்காட்டத்தக்க 11 வருட தொடர்ச்சியான வெற்றிப் பயணம், மற்றும் GPTW இனால் ஆசியாவின் சிறந்த 100 பணியிடங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றமை ஆகியன, அது கொண்டுள்ள பணியாளர் மதிப்பு முன்னுரிமைக்கான தெளிவான சான்றாகும். இது பணிகளை சுவாரஸ்யமாகவும் வெகுமதி மிக்கதாகவும் செய்வதை எடுத்துக் காட்டுகிறது.

இந்த மைல்கல்லைப் பற்றி, DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதம மனிதவள அதிகாரியுமான தில்ருக்ஷி குருகுலசூரிய தெரிவிக்கையில், இத்தகைய வெற்றிப் பாதையைப் பேணுவதற்கு சிறந்த மனிதவள நடைமுறைகளைப் பேணுவதை கடந்து, ஊழியர்களின் திருப்தி மற்றும் ஈடுபாட்டிற்கான ஒரு மூலோபாய அணுகுமுறை அவசியமாகும் என்பதோடு, இது நிறுவனத்தின் பணியாளர் மதிப்பு முன்மொழிவை யதார்த்தமாக மாற்றுகிறது.

இந்த சாதனையின் அத்திவாரமாக நிறுவனத்தின் பணியாளர்கள் காணப்படுகின்றனர். துடிப்பான பணிச்சூழலையும், DIMO பழங்குடியினர் என அழைக்கப்படும் பணியாளர்களுக்குள் உள்ள ஆழமான உணர்வையும், அவர்களது பணிக் கலாசாரம் தொடர்பான சான்றுகள் பிரதிபலிக்கின்றன.

DIMO நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி (இரசாயன கலவைகள்) ரக்கித குணசேகர தெரிவிக்கையில், பெறுமதியில் மாற்றம் ஏற்படாமல் தங்களால் இயன்றதைச் செய்ய ஊழியர்களை ஊக்குவிக்கும் சூழலை, ‘வேலை செய்வதற்கு சிறந்த பணியிடம்’ என்பது வலியுறுத்துகிறது. இது ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. DIMO அவ்வாறனதொரு இடமாகும்.” என்றார்.

DIMO நிறுவனத்தில் முகாமைத்துவப் பயிற்சியாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த சந்தைப்படுத்தல் (சில்லறை விற்பனை) பிரதிப் பொது முகாமையாளர் ரவினேஷ் சேனாரத்ன தெரிவிக்கையில், “DIMO என்னை பணிக்கு மாத்திரம் அமர்த்தவில்லை, அது என்னில் முதலீடு செய்து பல்வேறு வர்த்தகநாமங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை என்னிடம் ஒப்படைத்தது. இந்த நிறுவனம், எனது தொழில் வளர்ச்சியை எளிதாக்கிய அதே வேளையில், அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.” என்றார்.

DIMO வாகன உதிரிபாகங்கள் விற்பனை பிரதிப் பொது முகாமையாளர் விராஜ் குணரத்ன, DIMO நிறுவனத்தில், அங்கீகாரம் மற்றும் வெகுமதிகளை வழங்குவதிலான கலாசாரமானது, புத்தாக்கத்திற்கான ஊக்கியாக செயற்படுவதோடு. பணியாளர்களை குறுகிய வட்டத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க தூண்டுகிறது என்பதை சுட்டிக்காட்டினார். நிறுவனத்தில் உள்ள அங்கீகாரம் மற்றும் வெகுமதி வழங்கும் கலாச்சாரமானது, கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைய அவரையும் அவரது குழுவையும் ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாமல், வித்தியாசமாக விடயங்களைச் செய்வதற்கும் அவர்களுக்கு உதவுகிறது.

பன்முகத்தன்மை, உள்ளீர்த்தல் மற்றும் சமபங்கு ஆகிய அம்சங்கள் DIMO நிறுவனத்தின் செயற்றிறன் கலாச்சாரத்தை கணிசமான அளவிற்கு உயர்த்தியுள்ளன. Mercedes-Benz பயணிகள் சேவையின் வாடிக்கையாளர் பராமரிப்பு தலைவர் ஷெஹான் பெனாண்டோ தெரிவிக்கையில், “பல்வேறு முன்னோக்குகள் புத்தாக்கங்களை வளர்க்கும் அதே நேரத்தில், அதிக ஈடுபாடானது, அதிக உற்பத்தித் திறனை மேம்படுத்துவதோடு, வாகன பட்டறை நடவடிக்கைகளின் தரத்தை உறுதிப்படுத்துகிறது. இது பல்வேறுபட்ட வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. அத்துடன், Mercedes-Benz போன்ற வர்த்தகநாமங்கள் தொடர்பான சேவைகளை பூர்த்தி செய்ய சமமான வாய்ப்புகள், சிறந்த திறமையாளர்களை இங்கு ஈர்ப்பதோடு, அவர்களை தக்கவைத்துக்கொள்கின்றன.” என்றார்.

MIS கேள்வி மற்றும் விநியோக திட்டமிடல் நிறைவேற்று அதிகாரி அஜ்லா ஜயகொடி, DIMO நிறுவனத்தில் பணிபுரிவது தொடர்பில் முழுமையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தனிப்பட்ட விடயங்கள் மற்றும் வேலை தொடர்பான விடயங்களிலான மைல்கற்களைக் கொண்டாடுவது தொடர்பில்  அவர் சுட்டிக்காட்டினார். குழு மற்றும் நிர்வாகத்தின் பிறந்தநாள், குழு சாதனைகள், பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்கள் ஆகியன DIMO ஊழியர்களுக்குள் சொந்தங்களையும், தோழமை உணர்வையும் உருவாக்குகின்றன.

பணி-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிப்பதன் மூலம் ஊழியர்களின் நல்வாழ்வுக்கு DIMO முன்னுரிமை அளிக்கிறது. DIMO Got Talent, DIMO Sports Club, DIMO Nature Club போன்ற பணியாளர் ஈடுபாட்டு முயற்சிகள், ஊழியர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதாக செயற்பாட்டு இணக்கப்பாட்டு உதவி முகாமையாளர் சுஜானி வன்னியாராச்சி தெரிவித்தார். DIMO Day மற்றும் Employee Council போன்ற தொடர்பாடும் அமர்வுகள், சாதகமான மற்றும் உள்ளீர்க்கும் பணிச்சூழலை வளர்ப்பதோடு, ஒட்டுமொத்த பணியாளர் திருப்தியையும் மேம்படுத்துகிறது.

DIMO நிறுவனத்தில் 13 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய, முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் குழுமத்தின் CEO விற்கான செயலாளருமான நிலுகா பெர்டினண்ட்ஸ், நிறுவனத்துடனான தனது பிணைப்பை உறுதிப்படுத்துகிறார். ஆரோக்கியமான பணிச்சூழலை அவர் விளக்கியதோடு, அவரது சக நண்பர்களின் நம்பிக்கை அவரை கடினமாக உழைக்க தூண்டியதோடு, தலைமைத்திற்கு நிர்வாக ஆதரவை வழங்கும் பணியில் அவரை பெருமை கொள்ளச் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களை நிர்வகிப்பது முதல் Carl Zeiss போன்ற சர்வதேச வர்த்தகநாமங்களைக் கையாள்வது வரையில் நிறுவனம் தனக்கு வழங்கிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை, மருத்துவப் பொறியியல் தீர்வுகள் பிரதிப் பொது முகாமையாளர் ரிமால் தென்னகோன் எடுத்துக் கூறினார். “நான் பணிபுரிய விரும்பும் வணிகப் பிரிவைத் தெரிவு செய்வதற்கான முழு சுதந்திரம் எனக்கு வழங்கப்பட்டது. உலகெங்கிலும் உள்ள அனைத்து Carl Zeiss தொழிற்சாலைகளிலும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் பல்வேறு சர்வதேச மருத்துவ மாநாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தியமையானது எனது தொழில் வாழ்க்கையை மாற்றியமைத்தது” என்றார்.

அந்த வகையில், DIMO நிறுவனத்தின் அங்கீகாரம் கொண்ட பணிக் கலாசாரமானது, அதன் பணியாளர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளைத் தூண்டுவதிலான, நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

END

Image Caption:  அண்மையில் இடம்பெற்ற ‘பணியாற்றுவதற்கு சிறந்த இடம்’ விருது வழங்கும் விழாவில் DIMO மனிதவள குழு பிரதிநிதிகள்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *