V29 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ள vivo

தனது முதன்மையான V series சமீபத்திய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் புகழ்பெற்ற தொழில்நுட்ப வர்த்தகநாமமான vivo, அதன் V29 5G ஸ்மார்ட்போனை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தற்போது இலங்கையில் கொள்வனவு செய்யக்கக்கூடிய இந்த ஸ்மார்ட்போன்கள், நவீன வடிவமைப்பு முன்னேற்றம் மற்றும் அதிநவீன கெமரா செயற்பாடுகளுடன் இணைந்த தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளை இணைத்து தொழில்நுட்பத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் V series பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்கின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஒருங்கிணைந்த 120 Hz கொண்ட 3D வளைந்த திரையைக் கொண்டுள்ளது. இது V27 5G இன் அடிச்சுவட்டை பின்பற்றியவாறு, தொழில்துறையில் மெல்லிய ஸ்மார்ட்போன்களுக்கான புதிய தரநிலையை அமைக்கிறது. இதன் வடிவமைப்பானது, குறிப்பிடத்தக்க வகையில் நேர்த்தியான அழகியலை பிரதிபலிக்கிறது. அத்துடன் புகைப்படம் எடுக்கும் திறன்களில் பாரிய மேம்பாடுகளும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Smart Aura Light Portrait, Supermoon Mode, Food Mode ஆகிய அதன் தனித்துவமான அம்சங்களுடன், 50 MP AF Group Selfie அம்சமும் இணைக்கப்பட்டு பூரணத்துவம் அடைகின்றது.

இந்த அறிமுகம் தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட பிரதம நிறைவேற்றதிகாரி Kevin Jiang, “vivo வின் V series ஆனது, புகைப்படம் எடுத்தல், வடிவமைப்பு, செயற்றிறன் ஆகியவற்றின் மூலம் பயனர்களை தொடர்ந்து வசீகரித்து வந்துள்ளது. Benfen இன் அடிப்படைக் கொள்கையின் அடிப்படையில், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் மூலம் நாம் பல எல்லைகளைக் கடந்து செல்கிறோம். V29 5G இந்த அர்ப்பணிப்பை உள்ளடக்கும் வகையில், புகைப்படவியல் மற்றும் வடிவமைப்பில் முன்னேற்றங்களை கொண்டுள்ளது. இந்த கையடக்கத் தொலைபேசியானது, புகைப்படவியலை மீள்வரையறை செய்து, எமது தொழில்துறை தலைமைத்துவத்தை வலுப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.” என்றார்.

vivo V29 5G ஆனது, வடிவமைப்பு, கெமரா மற்றும் செயற்றிறன் ஆகிய ஆற்றல் மிக்க அம்சங்களைக் கொண்டுள்ளது. Peak Blue  வகையானது, புத்தாக்கமான 3D Magnetic Particle நுட்பத்தையும்; Nobel Black வகையானது, Fluorite AG Glass இனையும் பயன்படுத்தி, நேர்த்தியான கவர்ச்சிகரமான மேற்பரப்புகள் மூலம் அழகியல் வடிவமைப்பு மேலும் உயர்வடையச் செய்துள்ளது. இதன் 120 Hz 3D வளைந்த திரையானது, மிகவும் மெல்லிய அழகியல் வடிவமைப்பை சேர்த்து, பயனர்களுக்கு அதிவேகமான மற்றும் கவர்ச்சிகரமான காட்சி அனுபவத்தை உறுதி செய்கிறது. Peak Blue மற்றும் Nobel Black ஆகிய இரண்டு முக்கிய நிறத் தெரிவுகளால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள V29 5G ஆனது, ஸ்மார்ட்போன் உலகில் ஸ்டைல் மற்றும் நுட்பத்தின் உச்சத்தை காண்பிக்கிறது.

இதில் 50 MP HD கெமரா (AF) பொருத்தப்பட்டுள்ளது. இது உங்கள் குழு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மிருதுவானதாகவும், துடிப்பு மிக்கதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. AF Group Selfie மற்றும் Super Group Video ஆகிய அம்சங்களின் மேலதிக நன்மைகளுடன், பிரமிக்க வைக்கும் குழு செல்பிக்களை நீங்கள் எடுக்கலாம் என்பதோடு, உயர்தர வீடியோக்களையும் எளிதாக பதிவு செய்யலாம். 50 MP OIS Ultra-Sensing கெமரா, 8 MP Ultra Wide-Angle கெமரா, 2 MP Monochrome கெமரா ஆகியன, துல்லியமான மற்றும் ஆழமான காட்சிகளைப் படம்பிடிப்பதற்கான பல்துறைத்திறனை வழங்குகிறது. உங்கள் பிரத்தியேக புகைப்பட வடிவமைப்பாளராக செயற்படும் Smart Aura Light Portrait அம்சமானது, ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். குறைந்த ஒளி சூழல்களில், இது வண்ண அளவுகளை புத்திசாலித்தனமாக செயற்பட்டு சரி செய்கிறது. உங்கள் முகத்தை அழகாக ஒளிரச் செய்து, சீரற்ற வண்ண ஒளி கொண்ட புகைப்படங்களை கவர்ச்சி மிக்க ஓவியங்களாக மாற்றுகிறது. இது உருவத்தின் முகத்தின் வண்ண அளவை சூழலின் ஒளியுடன் ஒத்திசைந்து, புகைப்படங்களை அவற்றின் சூழலுடன் தடையின்றி இணைக்கிறது. அத்துடன், V29 5G ஆனது, Supermoon Mode, மற்றும் Food Mode போன்ற வசீகரிக்கும் கெமரா முறைமைகளை அறிமுகப்படுத்துகிறது. இது உங்கள் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்துவதோடு, பிரமிக்கும் வானத்தின் காட்சிகள், மயக்கும் சந்திரனின் காட்சிகள், உணவுகளின் புகைப்படங்களை எளிதாகவும் புத்திசாலித்தனமாகவும் பிடிக்க அனுமதிக்கிறது.

vivo V29 5G கையடக்கத் தொலைபேசியை Qualcomm Snapdragon® 778G processor செயற்படுத்துவதோடு, இது பணிகள் மற்றும் விளையாட்டுகள் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் தடையற்ற செயற்றிறனை உறுதி செய்கிறது. இச்சாதனம் அதன் கணிசமான 4600 mAh மின்கலத்தை விரைவாக சார்ஜ் செய்ய 80W FlashCharge அம்சத்தை கொண்டுள்ளது. Super Charge Pump தொழில்நுட்பமானது, சார்ஜிங் செயற்றிறனை மேலும் அதிகரிப்பதோடு, குறைந்த சார்ஜ் கொண்டிருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. அதிநவீன வன்பொருளின் ஒருங்கிணைப்பானது, V29 5G கையடக்கத் தொலைபேசியை முன்னோக்கிச் செல்வதை உறுதிசெய்வதோடு, ஒரு சக்திவாய்ந்த மற்றும் திறனான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்குகிறது.

vivo V29 5G ஆனது, அழகு மற்றும் புத்தாக்கங்களை தடையின்றி ஒருங்கிணைத்து, அழகியல் நேர்த்தி மற்றும் அதிநவீன அம்சங்களை வெளிப்படுத்துகிறது. பிரமிக்க வைக்கும் வண்ணத்துடன், மிகவும் மெல்லிய தோற்றத்துடன், முதல் பார்வையிலேயே வசீகரிக்கச் செய்யும் இன்பத்தை V29 5G வழங்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *