CANDY சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளை அறிமுகப்படுத்தும் Singhagiri

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையில் நீடித்த பயன்பாட்டு பொருட்களுக்கான முன்னணி நிறுவனமாக விளங்கும் Singhagiri (Pvt) Ltd. அதன் விற்பனைத் தயாரிப்பு வரிசையில் CANDY உற்பத்திகளை இணைத்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

அதற்கமைய, ஒரு முன்னணி ஐரோப்பிய உபகரண வர்த்தகநாமமான CANDY யின் குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் Singhagiri காட்சியறைகளில் மாத்திரம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படவுள்ளது.

சந்தையில் காணப்படும் ஏனைய வீட்டு பயன்பாட்டு உபகரணங்களைப் போலல்லாமல், உங்களது வீட்டுக்கும், அன்றாட வாழ்க்கை முறையை எளிமையாக்க உதவும் வகையிலும், கட்டுப்படியான விலையில், தனித்துவமான மற்றும் ஸ்மார்ட் அம்சங்களை CANDY வழங்குகிறது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆடம்பரமான இத்தாலிய வர்த்தகநாமமானது, CANDY App (எளிமைப்படுத்தும் செயலி) ஊடாக கையடக்க தொலைபேசி சாதனங்கள் மூலமாகவோ அல்லது டிஜிட்டல் உதவியாளர் மூலமாகவோ அதன் உபகரணங்களை இயக்க வாடிக்கையாளர்களுக்கு வசதி அளிக்கிறது.

Singhagiri (Pvt) Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லசந்த அல்விஸ் இது பற்றித் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் எமது விற்பனைத் தயாரிப்புகளின் வரிசையை மேலும் அதிகரிக்கும் வகையில், CANDY போன்ற புகழ்பெற்ற வர்த்தக நாமத்தை எமது தயாரிப்புகளுடன் இணைப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இது போன்ற கூட்டாண்மைகள் மூலம் எதிர்காலத்திற்காக நாம் வழங்கக்கூடிய தயாரிப்புகளை இணைப்பதன் மூலம், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்குவதில் நாம் மிகவும் உறுதியுடன் உள்ளோம்.

CANDY சலவை இயந்திரங்கள் மிகக் கட்டுப்படியான விலையில் அமைந்துள்ளதோடு, தரத்தை மேம்படுத்தவும் மின்சாரத்தை சேமிக்கவும் உதவும் வகையில் இன்வேட்டர் மோட்டார்கள் போன்ற ஸ்மார்ட் அம்சங்களை கொண்டுள்ளன. வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு சாதனமும் பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. புதிய கட்டுப்படியான விலை கொண்ட, ஆடம்பரமான CANDY குளிர்சாதன பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள எந்தவொரு Singhagiri காட்சியறைகளிலும் கிடைக்கின்றன.

CANDY பற்றி

இத்தாலிய வீட்டு உபயோகப் பொருட்களின் உற்பத்தியாளரான CANDY சீன பன்னாட்டு வீட்டு பயன்பாட்டு பொருட்கள் நிறுவனமான Haier இன் துணை நிறுவனமாகும். Haier Europe நிறுவனமானது, Haier Smart Home இன் ஒரு பகுதியாகும் என்பதுடன், இது Fortune Global 500 நிறுவனங்களில் ஒன்றுமாகும். 1993 ஆம் ஆண்டு முதல், ஷங்காய் பங்குச் சந்தையில் (SHA: 600690) பட்டியலிடப்பட்டுள்ள, 25 தொழில்துறை பூங்காக்கள், 10 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், சுமார் 100,000 பணியாளர்களுடன், 5 கண்டங்களில் Haier Smart Home செயற்பட்டு வருகின்றது. 2019 இல் 25 பில்லியன் யூரோ மதிப்புள்ள செயற்பாட்டு வருமானத்தைக் கொண்ட இந்நிறுவனத்தின் உலகளாவிய விற்பனை வலையமைப்பில் 160 இற்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளடங்குகின்றன.

Singhagiri நிறுவனம் பற்றி

மறைந்த சுகததாச மாரசிங்கவினால் 1972 இல் நிறுவப்பட்ட Singhagiri நிறுவனமானது, Singhagiri Ltd. எனும் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக பிற்காலத்தில் கூட்டிணைக்கப்பட்டது. Singhagiri (Pvt) Limited ஆனது, முதன்முதலில் 1983 இல் இலங்கைக்கு SAMSUNG வர்த்தகநாமத்தை அறிமுகப்படுத்தியதோடு, ஆரம்பத்தில் SAMSUNG தயாரிப்பு வரிசைகளின் இலத்திரனியல் மற்றும் மின்சார தயாரிப்புகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவராக செயற்ப்பட்டது. SGL, Lenovo, HP, Hisense, Bajaj, Havels, Motorola, Realme, Vivo, Karcher, HiFuture ஆகிய வர்த்தகநாமங்களின் விநியோகஸ்தராகவும் Singhagiri நிறுவனம் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *