Clogard Natural Salt: பற்குழி, ஈறு பிரச்சினைகளுக்கு இரட்டை பாதுகாப்புடன், தற்போது மேம்படுத்தப்பட்ட புதினா சுவையுடன்

இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 47% ஆனோர் தற்போது ஈறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பெரும் சவாலை எதிர்கொள்கின்றனர் (இலங்கையின் தேசிய வாய்ச் சுகாதார கணக்கெடுப்பு – 2015/2016 தகவலின் படி). ஆனால் இந்த வருத்தமளிக்கும் புள்ளிவிபரத்திற்கு மத்தியில், க்ளோகார்ட் இயற்கை உப்பு (Clogard Natural Salt) தயாரிப்பானது நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக விளங்கி, இலங்கையின் எதிர்காலத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பை செயற்படுத்துகிறது.

Clogard Natural Salt ஆனது, தற்போதைய சூழ்நிலையின் பாரதூரத்தை புரிந்துகொண்டு, அதற்கான தீர்வை வழங்குவதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. நிறுவனத்தின் இந்த பற்பசையானது, ஈறு பிரச்சினைகள் மற்றும் பற்குழிகளின் அடிப்படைக் காரணங்களுக்கான தனித்துவமான இரட்டைப் பாதுகாப்பு சூத்திரத்தை வழங்குகிறது.  இயற்கை உப்பானது, வலிமிகுந்த ஈறு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கவும், வாய்ப் புண்களைத் தடுக்கவும், பல் ஈறுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. அதே நேரத்தில் செயற்பாட்டு புளோரைட்டானது பற்குழி உருவாவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல் அதனை சீரமைக்கிறது. இதன் மூலம் ஈறு பிரச்சினைகள் மற்றும் பற்குழிகளிலிருந்து இரட்டை பாதுகாப்பை வழங்குகிறது.

Clogard Natural Salt ஆனது, கடந்த 2020 ஓகஸ்ட் மாதத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதோடு, பல இலங்கையர்களின் இதயங்களை வென்று மனதையும் கவர்ந்துள்ளது. இந்த பற்பசை பெருமை மிக்க SLS (இலங்கை தரநிலைகள்) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமையானது, தரம் மற்றும் செயற்றிறனின் பிரகாசத்திற்கான ஒரு சான்றாகும். இந்த தலைசிறந்த தயாரிப்பில் காணப்படும் ஒவ்வொரு மூலப்பொருளும் மிகச் சிறந்ததை மாத்திரம் வழங்கும் வகையில், மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தேசத்தின் வாய்ச்சுகாதார நல்வாழ்வுக்கான க்ளோகார்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Hemas Consumer Brands நிறுவனத்தின் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ரொசெல் பெரேரா இங்கு கருத்துத் தெரிவிக்கையில், “Clogard Natural Salt ஆனது, வெறுமனே பற்பசை மாத்திரமல்ல. இது இலங்கையின் வாய்ச் சுகாதாரத்தின் எதிர்காலத்திற்கான வாக்குறுதியாகும். Clogard Natural Salt ஆனது ஒரு தனித்துவமான சூத்திரத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அது SLS சான்றிதழால் அங்கீகரிக்கப்பட்டு, மிக உயர்ந்த தரத்தை பேணுகின்றது. சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ள எமது செழுமையான பாரம்பரியமானது, இலங்கை முழுவதிலும் உள்ள குடும்பங்களுக்கான இறுதித் தெரிவாக எம்மை ஆக்குகிறது.” என்றார்

Clogard Natural Salt ஆனது, ஈறு பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வைக் கடந்து, இலங்கையர்களின் தினசரி வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக அமைந்து, அவர்களுக்கு உகந்த வாய்ச் சுகாதாரத்தை வழங்குவதோடு, சுகவாழ்வுக்கு பங்களிக்கிறது.

பல நூற்றாண்டுகளாக எம் முன்னோர்கள் வாய்ச் சுகாதார பராமரிப்புக்காக உப்பின் இயற்கையான சக்தியை பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த வகையில் Clogard Natural Salt ஆனது, பெருமையுடன் இந்த பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை பயன்படுத்தி புத்தாக்கங்களை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ள Clogard Natural Salt ஆனது, நாட்டின் வாய்ச் சுகாதாரத்திற்கான சிறந்த தெரிவாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *