Dell Partner Business Conference இல் ஆசியாவின் வளர்ந்து வரும் நிறுவனங்களில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ள Softlogic Information Technologies

நிறுவனங்களுக்கான இலங்கையின் முன்னணி தீர்வு வழங்குநரான Softlogic Information Technologies (Pvt) Ltd (Softlogic IT), சமீபத்தில் Dell Technologies FY23 Partner Business Conference Asia Emerging Markets விருது வழங்கும் விழாவில் இரண்டு பெறுமதியான விருதுகளை வென்றுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான ‘Tier 1 Partner of the Year – Sri Lanka and Maldives’ மற்றும் ‘Asia Emerging Markets Solution Provider of the Year Client Solutions Group’ ஆகிய விருதுகளையே அது வென்றுள்ளது. இவ்விருதுகள் யாவும் ஒரு முழுமையான ஆய்வுச் செயன்முறைகளின் பின்னரே Softlogic IT இற்கு வழங்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் பிராந்திய ரீதியில் DELL உடனான சிறந்த பங்குதாரர்களை தெரிவு செய்வதற்கான காரணிகளான சிறந்த வாடிக்கையாளர் சேவை, புத்தாக்கமான சந்தை உத்திகள், வருடாந்த ரீதியிலான வணிக வளர்ச்சி மற்றும் இலக்குகளைக் கொண்ட சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நிலை ஆகியவற்றின் அடிப்படையில், இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 14 நாடுகளைச் சேர்ந்த 100இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள், ‘Asia Emerging Markets Solution Provider of the Year Client Solutions Group’ எனும் பிரிவில் போட்டியிட்டிருந்தன. இதில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், மங்கோலியா, மாலைதீவு, நேபாளம், பூட்டான், புருணை, திமோர்-லெஸ்டே, பிஜி, கம்போடியா, மியன்மார், லாவோஸ், பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன

இந்த சாதனைகள் குறித்து Softlogic Information Technologies நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான ரொஷான் ரசூல் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நிதியாண்டில் இரண்டு விருதுகளை நாம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இரண்டு விருதுகளும் எமக்கு பெரும் மதிப்பை வழங்கியுள்ளன. நாட்டில் உள்ள வர்த்தகத்திலிருந்து வர்த்தகத்திற்கான (B2B) தொடர்பில்  DELL இற்கு நாம் சிறந்த பங்குதாரராக உள்ளோம். அத்துடன், ஆசியாவின் வளர்ந்து வரும் பங்குச்சந்தைகளில் சிறந்த பங்குதாரராகவும் உள்ளோம். கொவிட்-19 பாதிப்புகள் மற்றும் தொடர்ந்தும் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகள், எமக்கு மிகப்பெரும் சவால்களாக இருந்தன. ஆயினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், DELL இன் வணிக வருமானத்தை 80% இலும் அதிகமாக அதிகரிக்க முடிந்துள்ளது. இது தனித்துமான அடைவு என்பதுடன் இறுதிப் கணனி பயனர் தீர்வு, நிறுவன வணிக தீர்வுகள், இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட உட்கட்டமைப்பு தீர்வுகள் ஆகியவற்றில் ICT துறையில் வளர்ந்து வரும் மாற்றங்களுக்கு ஏற்ற விதத்தில் எமது குழுவினர் உரிய தீர்வுகளை வழங்கிதன் மூலமே இந்நிலையை அடைந்துள்ளதால், இவ்வெற்றி அவர்களையே சென்றடைய வேண்டும். உட்கட்டமைப்பு நவீனமயமாக்கலில் முன்னணியில் இருப்பதே 2 வருடங்களுக்கு முன்னர் எமது இலக்காக இருந்தது. நாம் எதிர்பார்த்த காலத்தை விட குறைவான காலகட்டத்தில் இந்நிலையை அடைந்துவிட்டோம் என்பதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.

DELL தயாரிப்பு வகைகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத் தீர்வுகளை வழங்கும் சிறந்த பங்காளியாக Softlogic IT தெரிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் ‘Tier 1 Partner of the Year – Sri Lanka and Maldives’ எனும் விருதை அது பெற்றுள்ளது.

Softlogic IT ஆனது, அனைத்து போட்டி நிறுவனங்களையும் குறித்த இரு பிரிவுகளிலும் தோற்கடித்து இந்த இரண்டு விருதுகளை வென்றுள்ளமையானது, நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதனை நிரூபித்துள்ளது.

இவ்விருதுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த Softlogic IT இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சிரந்த பீரிஸ், “இந்த மதிப்புமிக்க விருதுகளை பெற்றமை தொடர்பில் நாம் உண்மையிலேயே பெருமையடைகிறோம். பல்வேறு துறைகளில் மிகவும் திறமையான வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட எமது குழுவிற்கு இதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். Softlogic IT ஆகிய நாம், எமது குழுவினர் அவர்களது சிறந்த பணியை வெளிக்காட்டுவதற்கு நாம் உதவுகிறோம். இது எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க உதவுகிறது. அத்துடன், எமது வாடிக்கையாளர்கள் எம் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து, அவர்களின் விருப்பமான ICT விநியோகத்தர்களில் ஒருவராக எம்மை தெரிவு செய்துள்ளமை தொடர்பிலும், சந்தைக்கு புத்தாக்கம் கொண்ட தீர்வுகளை கொண்டு சேர்க்க எமக்கு உதவிய அவர்களின் தொடர்ச்சியான கருத்துகள் தொடர்பிலும் நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவர்கள் இல்லாமல், இவை எதையும் எம்மால் சாதித்திருக்க முடியாது. இவ்விருதுகள் எமது  சேவைகளை மேலும் வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் உதவுமென நாம் நம்புகிறோம்.” என்றார்.

Softlogic IT ஆனது, மிகத் திறமையான குழுவிற்கு மேலதிகமாக, உலகளாவிய ரீதியிலான பங்காளிகள் மற்றும் சேவை வழங்குநர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. இவை அனைத்தின் மூலமும் உலகத் தரம் வாய்ந்த தீர்வு வழங்குனராக Softlogic IT யினை திகழச் செய்வதோடு, அது தனது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும், அதைத் தாண்டிய சேவையை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் நிலையான பெருமதிப்பை உருவாக்கவும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.

Softlogic IT பற்றி

Softlogic Information Technologies (Pvt) Ltd ஆனது இப்பிராந்தியத்தில் உள்ள ICT துறையில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட முன்னணி கணனித் தொகுதி ஒருங்கிணைப்பு நிறுவனமாகும். இது 200 இற்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவைக் கொண்டுள்ளதுடன், அவர்கள் உள்நாட்டிலும் பிராந்தியத்திலுள்ள நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் மாற்றத்தை வழங்குவதற்கான உந்துசக்திகளாக உள்ளனர். விற்பனைக்கு முந்தைய மற்றும் பிந்தைய விற்பனைப் பொறியாளர்களின் ஆதரவுடன், Softlogic IT ஆனது அரச மற்றும் தனியார் clouds, Big data analytics, IoT, Digital identity and cyber security solutions, Digital signage and board room solutions, Software defined data centers, business continuity solutions, intelligent building management solutions, digital classroom solutions போன்ற பலவிதமான தீர்வுகளை வழங்குவதற்கும் அது தொடர்பில் ஆதரவளிப்பதற்கும் தொழில்முறை ரீதியிலான சேவைகளை வழங்குகிறது. அரசாங்கம் மற்றும் பாரிய பெருநிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல மட்டத்திலான தொழில் துறைகளுக்கு Softlogic IT அதன் சேவைகளை வழங்குகின்றது. Softlogic IT தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.softlogicit.lk இணையதளத்தை பார்வையிடவும்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *