DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட குத்தகை தீர்வுகளை வழங்க HNB உடனான நீண்டகால பங்குடமையை DIMO விரிவுபடுத்துகிறது

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதற்கான தனது வலுவான உறுதிப்பாட்டை மீண்டும் நிரூபிக்கும் வகையில்  DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களை கொள்வனவு செய்ய எதிர்பார்த்திருப்போருக்கு விரைவான, எளிதான மற்றும் மிகவும் அணுகக்கூடிய குத்தகை தெரிவுகளை வழங்குவதற்காக Hatton National Bank (HNB) உடன் பங்குடமையில் இணைந்துள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது.

DIMOவினால் விற்பனை செய்யப்படும் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான Mercedes-Benz, Jeep மற்றும் ஐரோப்பிய வாகனங்களுக்கு இந்த HNB DIMO குத்தகை ஊக்குவிப்பு செல்லுபடியாகும். இந்த பிரத்தியேக பங்குடமையானது DIMOவின் வாடிக்கையாளர்களுக்கு எளிதான குத்தகை முறைகள் மூலம் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களை வாங்குவதற்கான ஆடம்பரமான தெரிவுகள் பலவற்றுக்கான அணுகலைப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன், ஏனைய ஆடம்பர ஐரோப்பிய வாகன வர்த்தகநாமங்களும் மொடல்களும் கிடைக்கின்றன.

இந்த ஒப்பந்தம் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத் திட்டத்தை (PCP) வழங்குகிறது. இது வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நெகிழ்வான கட்டண முறைகளை வழங்குவதுடன்,  குறைந்த மாதாந்த தவணைக் கட்டணமும் வாடிக்கையாளருக்கு பயனளிக்கும். ஐந்து ஆண்டுகள் வரையில் திருப்பிச் செலுத்தும் கால அடிப்படையில் 50% வரை மீதமுள்ள பெறுமதியை சமமான மாதாந்த தவணைகளாக ஏற்பாடு செய்யும் நெகிழ்வுத்தன்மையுடன் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கான சிறப்பு வட்டி விகிதங்கள் இதில் அடங்கும். இதற்கு மேலதிகமாக, DIMO அனைத்து DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கும் HNB வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேக விலையையும், DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவெ சொந்தமான வாகனங்கள் பிரிவால் விற்கப்படும் மற்ற அனைத்து மொடல்களுக்கும் தள்ளுபடியையும் வழங்கும்.

DIMOவின் மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஜீப் கிளஸ்டரின் பிரதான செயற்பாட்டு அதிகாரி ராஜீவ் பண்டிதகே கருத்து தெரிவிக்கையில், “வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட தீர்வுகளை வழங்குவதில் முன்னணியில் இருப்பதில் DIMO ஒரு உறுதியான நற்பெயரை உருவாக்கியுள்ளது. இதன் பொருள், புதுமையான தீர்வுகள் மற்றும் பங்குடமைகள் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்தவற்றை வழங்குவதற்கான வழிகளை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்பதாகும். கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் செய்ததைப் போல, மீண்டும் HNB உடன் பாங்காளராக இணைவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குறிப்பாக DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கு கவர்ச்சிகரமான பெக்கேஜ்களை வழங்குவதுடன், மிகவும் விரும்பப்படும் தீர்வுகளை வழங்குகின்றது.  HNBயுடனான இந்த நீண்டகால பங்குடமையின் நீட்டிப்பு, விரைவாக மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளை அடையாளம் காண்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுவதனால் அவர்கள் தமது கனவு வாகனத்தை அணுக முடியும்,” என்றார்.

DIMO மற்றும் HNB இடையேயான உறவு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடிக்கிறது மற்றும் முன்னுதாரணமான வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்துள்ளது. பல்வேறு வணிக மற்றும் ஆதரவு செயல்பாடுகளில் சிறந்து விளங்குவதற்காக HNB பல சர்வதேச மற்றும் உள்ளூர் நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்த குத்தகை தெரிவுகளில் இருந்து பயனடைய விரும்பும் DIMO வாடிக்கையாளர்களுக்கு HNBஇன் பரந்த வாடிக்கையாளர் மையங்களின் வலையமைப்பானது வசதியான அணுகலை வழங்குகிறது.

HNBஇன் விற்பனை மற்றும் SME வங்கியில் பிரதி பொது முகாமையாளர்,  சஞ்சே விஜேமான்ன கருத்து தெரிவிக்கையில்,”HNB மற்றும் DIMO இடையேயான நன்கு ஸ்தாபிக்கப்பட்ட உறவானது சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட வாகன வர்த்தகநாமங்களுக்கு சந்தையில் மிகக் குறைந்த கட்டணத்தில் அணுகலை வழங்கும் வரலாற்றைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு, HNB மற்றும் DIMO வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான மற்றும் நெகிழ்வான குத்தகை தெரிவுகள், ஒப்பிடமுடியாத சலுகையுடனான வட்டி விகிதங்கள் மற்றும் சிறப்பு காப்புறுதி பொதிகளை வழங்குவதன் பல்வேறு நன்மைகளை வழங்கி வருகின்றது. கார் பிரியர்களுக்கு அவர்களின் கனவு வாகனத்தை வாங்குவதற்கான திறனை நாங்கள் வழங்குகிறோம்.”

இலங்கையில் 80 ஆண்டுகளாக ஆடம்பர வாகனங்களை முதன்மையாக விநியோகிக்கும் DIMO, ஈடிணையற்ற அதன் சேவையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள வாகன பிரியர்களுடன் மிகச் சிறந்த  நீண்டகால உறவை வளர்த்துள்ளது. ஒவ்வொரு விவரத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம், தனிப்பட்ட வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களில் கவனம் செலுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை DIMO தொடர்ந்து நிரூபித்துள்ளதுடன்,  ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான  ஆடம்பர வாகனங்களின் தொந்தரவில்லாத கொள்முதல் மற்றும் விற்பனை அனுபவத்தை பெறுவதை உறுதிசெய்கிறது. இது தவிர, DIMO ஈடிணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவைகளை வழங்குகிறது. அனைத்து DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்கள் என் ஜின் மற்றும் கியர்பொக்ஸிற்கு ஓராண்டு  DIMO உத்தரவாதத்தைப் பெறுகின்றன.

DIMO சான்றளிக்கப்பட்ட ஏற்கனவே சொந்தமான வாகனங்களுக்கான HNB DIMO குத்தகை ஊக்குவிப்பு பற்றிய மேலதிக தகவல்களை எந்தவொரு HNB கிளையிலிருந்தும் அல்லது Mercedes-Benz Centre ‘DIMO 800’ இலிருந்து 011 244 9797 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமும் பெறலாம்.

பட விபரம்:

DIMO மற்றும் HNB அதிகாரிகள் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *