இலங்கையின் முன்னணியிலுள்ள பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனம், தமது விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஊடாக 2023 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் அறிமுகப்படுத்தியிருந்த Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம், 2024 பெரும் போகத்தில் மிகவும் பிரபலமாகியுள்ளதோடு, அதற்கான சிறந்த கேள்வியும் உருவாகியுள்ளது. இலங்கை விவசாயிகள், விவசாய இயந்திரமயமாக்கலுக்கு மாறுவதை விரைவுபடுத்தவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ (பெரும் போகத்திற்கு பெய்யும் பரிசு மழை) திட்டமும் வெற்றிகரமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
DIMO நிறுவனத்தின் நீண்டகால கூட்டாளரான Mahindra Tractors நிறுவனத்தின் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Mahindra Yuvo Tech+ 585 4WD உழவு இயந்திரத்தின் தனித்துவமான புதிய அம்சங்கள் காரணமாக, அது குறுகிய காலத்தில் பிரபலமடைந்துள்ளதோடு, விவசாய நடவடிக்கைகளுக்கான செயற்றிறனை அதிகரிக்க சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு சரியான தெரிவாகும். இந்த உழவு இயந்திரத்தின் சிறந்த எரிபொருள் திறனானது, எமது விவசாயிகளுக்கு அதிக பொருளாதார நன்மைகளை வழங்குகும் அதே நேரத்தில், சின்க்ரோஷட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய முன்னோக்கிய 12 கியர்கள் மற்றும் பின்னோக்கிய 12 கியர்களைக் கொண்ட Fully Constant Mesh கியர் தொகுதி காரணமாக, எரிபொருள் சேமிப்பை மேலும் அதிகரிக்கிறது. இந்த உழவு இயந்திரம் 50HP (குதிரை வலு) வகையைச் சேர்ந்தது என்பதால், மிகக் குறுகிய காலத்தில் அதிகளவான வேலையை எளிதாகச் செய்து முடிக்க உதவுகின்றது. எஞ்சினின் முறுக்குவிசையானது, (Engine Torque) 179Nm எனும் மிக அதிக பெறுமானத்தைக் கொண்டுள்ளதால், இது அதிக சுமைகளையும் (load) பரந்த அளவிலான இணைப்பு உபகரணங்களையும், சாதாரண நிலம் மற்றும் சேற்று நிலம் ஆகிய இரு வகையான நிலப்பரப்புகளிலும் எளிதாகவும் அதிக எரிபொருள் செயற்றிறனுடனும் பயன்படுத்த அனுமதிக்கிறது. அது மாத்திரமன்றி, இது சுமார் 1,700kg எடையைத் தூக்கும் திறனைக் கொண்டுள்ளதால், அதிக எடையைத் தூக்க முடிதல் மற்றும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு வகையான இணைப்பு உகரணங்களை எளிதாக இணைத்து பயன்படுத்த அனுமதிக்கிறது. இந்த உழவு இயந்திரத்தின் மற்றுமொரு தனித்துவமான நன்மை யாதெனில், 45.5HP குதிரை வலு எனும் அதிக சக்தி கொண்ட PTO தொகுதியானது CRPTO தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால், அதிக சக்தி கொண்ட இணைப்பு உபகரணங்களை அதிக செயற்றிறனுடன் கையாள முடிகின்றமை மற்றுமொரு சிறந்த நன்மையாகும். முன்புறமாக 9.5×20 மற்றும் பின்புறமாக 14.9×28 எனும் அளவுள்ள தவாளிப்பு இடுக்குகளைக் கொண்ட பாரிய அளவிலான டயர் தொகுதியானது, சேற்று நிலங்களில் கூட செலுத்துவதை எளிதாக்குவதால், இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திற்கும் ஏற்ற சிறந்த உழவு இயந்திரமாக தற்போது விவசாயிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.
இது குறித்து DIMO நிறுவனத்தின் விவசாய இயந்திரப் பிரிவுக்குப் பொறுப்பான நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜீவ் பண்டிதகே கருத்துத் தெரிவிக்கையில், “உள்ளூர் சந்தையில் சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் விவசாய இயந்திரமயமாக்கலை அதிகரிப்பதில் DIMO Agribusinesses எப்போதும் உறுதிபூண்டுள்ளது. உள்ளூர் விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கும் அவர்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்க முடிகின்றமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.“ என்றார்.
DIMO நிறுவனம் பெரும் போகத்தில் ஆரம்பித்த ‘மஹட்ட வஹின வாசி வெஸ்ஸ’ திட்டத்தின் மூலம், Mahindra உழவு இயந்திரங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகளுக்கு மடிகணனிகள், டெப்லட் கணனிகள், மின்சார சைக்கிள்கள், மலேசிய வெளிநாட்டு பயணம், சேறு சக்கரங்கள் போன்ற பரிசுகளில் இருந்து தங்களுக்கு விருப்பமான பரிசைப் பெறும் வாய்ப்பு வழங்கப்பட்டது. விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையை அதிக பலன் கொண்டதாகவும், திறனானதாகவும் மாற்றுவதற்காக நவீன தொழில்நுட்பத்தை அவர்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். இங்கு, விவசாயிகள் பெரும்பாலும் மின்சார சைக்கிள்களை தங்கள் விருப்பமான தெரிவாக தேர்ந்தெடுத்திருந்தனர். மடிகணனிகள் மற்றும் டெப்லட் கணனிகள் அவர்களின் இரண்டாவது மிகவும் பிரபலமான தெரிவாக அமைந்திருந்தன. விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான DIMO நிறுவனத்தின் முயற்சிகளுக்கு இந்தத் திட்டம் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பரந்து வாழும் விவசாயிகளிடையே மின்சார சைக்கிள்கள் பரிசுகளாக விநியோகிக்கப்பட்டதோடு, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் மடிகணனி, டெப்லட் கணனிகளுக்கு அதிக கேள்வி இருந்தது. அநுராதபுரம் மற்றும் திருகோணமலைப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சேறு சக்கரங்கள் மற்றும் டெப் கணனிகளைப் பெறுவதில் மிகுந்த ஆர்வம் செலுத்தியிருந்தனர்.
நாட்டிற்கு மிக உயர்ந்த தொழில்நுட்பத் திறன்களைக் கொண்ட உயர்தர இயந்திரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையில் விவசாயத்தின் முன்னேற்றத்திற்கு DIMO எப்போதும் தனது உச்ச ஆதரவை வழங்கும் அதேவேளை, இவ்வாறான முயற்சிகள் மூலம் நாட்டின் விவசாய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது.