DIMO 800 நிலையத்தில் அதி நவீன Jeep Performance Centre இனை அறிமுகப்படுத்தும் DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமாகவும், நாட்டில் Jeep வாகனத்திற்கான ஒரே அங்கீகரிக்கப்பட்ட பொது விநியோகஸ்தராகவும் உள்ள DIMO நிறுவனம், புதிய Jeep செயற்றிறன் மையத்தை (Jeep Performance Centre) அண்மையில் திறந்து வைத்துள்ளது. இந்த அதிநவீன விற்பனைக்குப் பின்னரான வசதியானது, Jeep உரிமையாளர்களுக்கு அவர்களது வாகனங்களுக்கான விரிவான கவனிப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் பல Jeep உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு 14 இல் உள்ள DIMO 800, Centre for Excellence மையத்தில் அமைந்துள்ள Jeep Performance Centre ஆனது, மிகவும் நம்பகமான, விற்பனைக்குப் பின்னரான பராமரிப்பைத் தேடும் Jeep உரிமையாளர்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து சேவையையும் வழங்குகிறது.

DIMO விற்பனைக்கு பிந்தைய சேவையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி மஹேஷ் கருணாரத்ன இது தொடர்பில் கருத்துத் வெளியிடுகையில், “Jeep Performance Centre ஆனது எமது விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவைகளுக்கு புத்துயிர் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய முயற்சியாகும். நாம் சேவை வழங்கும் சமூகங்களின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதற்கான பாரிய அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு நிறுவனம் எனும் வகையில், இந்த புதிய எண்ணக்கரு மூலம் வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்துவதும் எமது நோக்கமாகும்.” என்றார்.

Jeep Performance Centre ஆனது, நாடு முழுவதும் 24 மணி நேர வீதிப் பயணத்தின் போது அவசியமான உதவி, மோட்டார் மற்றும் உதிரிப்பாகங்கள் வல்லுனர்களான Mopar நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட மென்பொருட்கள், தொகுதிகள், விசேட கருவிகள் மற்றும் உபகரணங்களை முழுமையாக கொண்டுள்ள, Mopar பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம், Jeep உரிமையாளர்களுக்குப் பல்வேறுபட்ட பிரத்தியேகமான விற்பனைக்குப் பிந்தைய தீர்வுகளை வழங்குகிறது. அத்துடன் அனைத்து பழுதுபார்ப்புகள் மற்றும் மாற்றங்களும் மிகுந்த கவனத்துடனும் Mopar பழுதுபார்ப்பு வழிகாட்டலுக்கமையவும் மேற்கொள்ளப்படுகின்றன. Jeep Performance

Centre ஆனது, பரிந்துரைக்கப்பட்ட Jeep பாகங்களையும் பயன்படுத்துவதனால், அவை Jeep வாகனங்களில் தங்கு தடையின்றி இயங்குகின்றன.

இந்த சேவைகளுக்கு மேலதிகமாக, Jeep Performance Centre பல்வேறு வகையான Jeep உதிரிப்பாகங்களையும் வழங்குகிறது. அவை குறிப்பாக வாகனங்களின் செயற்றிறன் மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. அனைத்து உதிரிப்பாகங்களும், உலகெங்கிலும் உள்ள Jeep வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விற்பனைக்குப் பின்னரான வழங்குநரான Mopar இனால் பரிந்துரைக்கப்பட்டவையாகும்.

Jeep Performance Centre இனது மீள் ஆரம்பமானது, DIMO நிறுவனத்தின் விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவைகளுக்கான ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கிறது. உலகப் புகழ்பெற்ற சேவைகள் மற்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்குரித்தான பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் ஆதரவை வழங்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது உறுதிப்படுத்துகிறது. இலங்கையின் வாகனத் துறையில் விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவையில் புதிய தரத்தை அமைக்க இந்த மத்திய நிலையம் தயாராக உள்ளது. Jeep வாகனங்களுக்கான இல்லம் எனும் வகையில் DIMO நிறுவனத்தில், விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் ஆதரவை வழங்குவதில் பாரிய அர்ப்பணிப்புடன் உள்ள DIMO நிறுவனத்திலுள்ள Mopar-பயிற்சி பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்களால், தமது வாகனங்கள் கவனித்துக் கொள்ளப்படுகின்றன என்பதையிட்டு, Jeep உரிமையாளர்கள் இப்போது முழுமையான மன நிம்மதியைப் பெற முடியும்.

END

Caption

DIMO 800 இல் உள்ள அதிநவீன Jeep Performance Centre

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *