DIMO Agribusinesses தனது LOVOL ஹார்வெஸ்டருக்கான ஒப்பிட முடியாத விற்பனைக்கு பிந்திய சேவையின் மூலம் உயர் சந்தைப் பங்கைப் பதிவு செய்துள்ளது

DIMO Agribusinesses ஆனது, அதன் LOVOL ஹார்வெஸ்டருக்கு வழங்கப்படும் தனித்துவமான விற்பனைக்குப் பின்னரான சேவையின் மூலம், இலங்கையின் விவசாயிகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளதன் மூலம், கடந்த போகத்தில் LOVOL இன் சந்தைப் பங்கை இரட்டிப்பாக்க முடிந்துள்ளது.

இலங்கையின் விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில், DIMO விவசாயப் பிரிவான DIMO Agribusinesses ஆனது, LOVOL அறுவடை இயந்திரத்தை (LOVOL Harvester) அறிமுகப்படுத்தியுள்ளதன் மூலம், விவசாயிகளுக்கு அவர்களது அறுவடைக் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.

இங்கு, DIMO Agribusinesses ஆனது, LOVOL வாடிக்கையாளர்களுக்கு ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பிந்தைய தனித்துவமான சேவையை வழங்குவதற்காக, அவர்களது வீடுகளுக்கே சென்று பராமரிப்புச் சேவைகளை வழங்கியதோடு, அவர்களுக்கு பராமரிப்புச் சேவைகள் குறித்து தனிப்பட்ட முறையில் தெளிவூட்டி, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன் பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து உச்சபட்ச இயந்திர செயற்றிறனைப் பெறுவதற்கு அவசியமான ஆலோசனைகளையும் அது வழங்கியது. இங்கு, பராமரிப்பு சேவைப் பணிகளுக்குத் தேவையான உதிரிப் பாகங்களை கொள்வனவு செய்யும் போது விசேட தள்ளுபடியும் வழங்கப்பட்டதோடு, ஹாவஸ்டர் பராமரிப்பு சேவைப் பணிகளை குறைந்த விலையில் மேற்கொண்டு, எதிர்வரும் போகத்திற்கு முன்னரே தங்கள் அறுவடை இயந்திரத்தை தயார் செய்து அதிகபட்ச திறனுடன் பயிர்ச் செய்கைப் பணிகளை மேற்கொள்வதற்கான திறனும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வீட்டிற்கே சென்று வழங்கப்படும் இந்த சேவை காரணமாக, வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க நிறுவனத்தினால் முடிந்துள்ளது.

DIMO குழுமத்தின் விவசாய இயந்திர உபகரணப் பிரிவை மேற்பார்வையிடும் DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரஜீவ் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த LOVOL ஹார்வெஸ்டர் இயந்திரத்தின் சந்தைப் பங்கின் அதிகரிப்பின் மூலம், அதிகமான விவசாயிகளுக்கு சாதகமான மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து நுகர்வோரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான சர்வதேச தரத்திலான விவசாய இயந்திரங்களை இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்துள்ளதன் மூலமும், இந்த இயந்திரங்களுக்கு விற்பனைக்குப் பிந்தைய ஒரு தனித்துவமான சேவையை வழங்குவதன் மூலமும், விவசாயிகளின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளை ஊக்குவிப்பதில் நிறுவனம் பங்களிப்பு வழங்குகின்றது. மேலும், இந்த நாட்டிற்கு முதலாவது கம்பைன் ஹார்வெஸ்டர் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், இலங்கையின் விவசாயத் துறையை இயந்திரமயமாக்கும் செயற்பாட்டில் ஒரு முன்னோடி நிறுவனமாக DIMO நிறுவனம் விளங்குகின்றது.” என்றார்.

இலங்கை விவசாயிகள் ஒரு குறுகிய காலத்திற்குள், வறட்சி, உரமின்மை, எரிபொருள் பற்றாக்குறை, அதிக வட்டி வீதங்கள் போன்ற பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்ததோடு, DIMO Agribusinesses ஆனது, இந்த LOVOL ஹார்வெஸ்டர் இயந்திரங்களுக்கு வழங்கிய பராமரிப்பு சேவையானது, இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு ஆறுதலாக அமைந்ததன் காரணமாக, இந்நாட்டு விவசாயிகள் மத்தியில் LOVOL மேலும் பிரபலமடைந்தது. பல்வேறு நிதி நிறுவனங்களுடன் இணைந்து LOVOL ஹார்வெஸ்டர் இயந்திரங்களுக்கு, கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகளை வழங்கியமை, ஒரு வருட உத்தரவாத காலத்தை வழங்கியமை மற்றும் நாடு முழுவதும் காணப்படும் LOVOL விற்பனை முகவர்கள் ஆகிய விடயங்கள், இந்த சந்தைப் பிரிவின் விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்தன.

DIMO Agribusinesses ஆனது, ஹார்வெஸ்டர் இயந்திர உரிமையாளர்கள் மற்றும் அதனை இயக்குபவர்களுக்கு சங்கங்களை உருவாக்கி, அவர்களுக்கு அவசியமான இயந்திர அறிவு, முறையான செயற்பாட்டிற்கான ஆலோசனைகள் மற்றும் சரியான விவசாய நடைமுறைகள் பற்றிய விழிப்புணர்வை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *