DIMO Healthcare மற்றும் Varian இணைந்து இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புத்தாக்கமான மாற்றத்தை உருவாக்குகின்றன

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare ஆனது, Siemens Healthineers இன் Varian நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து, இலங்கையில் புற்றுநோய் தொடர்பான கதிர்வீச்சு (Radiation Oncology) நடவடிக்கை மருத்துவ நிபுணர்களுக்காக அதிநவீன சிகிச்சை தீர்வுகளை அறிமுகப்படுத்துகின்றன.

புற்றுநோயியல் (Oncology) துறையில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள Varian நிறுவனம், தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, புத்தாக்கமான புற்றுநோய் சிகிச்சைத் தீர்வுகளை வழங்குகிறது. மஹரகம அபேக்‌ஷா, ஆசிரி சேர்ஜிகல் (கொழும்பு 05), செலிங்கோ புற்றுநோய் மையம் (கொழும்பு 02) ஆகிய வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் Varian இன் தொழில்நுட்பங்கள், ஏற்கனவே இலங்கையில் கணிசமான வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த கூட்டாண்மையானது, நாடு முழுவதும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், DIMO Healthcare பிரிவைக் கண்காணிப்பவருமான விஜித் புஷ்பவெல இது பற்றி தனது கருத்தைத் தெரிவிக்கையில். “மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலானது, ஒரு விசேட உரிமையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு இலங்கையரும் மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். Varian உடனான இந்த கூட்டாண்மையானது, அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவது மட்டுமல்லாது, ஆரோக்கியமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான கனவுகள் மற்றும் அபிலாஷைகளை வலுவூட்டும் நடவடிக்கையாகும்.” என்றார்.

Varian’s Intelligent Cancer Care தீர்வுகளானது, நோயறிதல், சிகிச்சை, பின்தொடர்தல் பராமரிப்பை மேம்படுத்துவதன் மூலம் நோயாளிகளுக்கு உரிய பெறுபேறுகளை வழங்குகின்றன. மேலும், Siemens Healthineers’s MedTech நிபுணத்துவமானது, இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு முன்னெப்போதுமில்லாத செயற்றிறன் மற்றும் பிரதிபலன்களைக் கொண்டுவருகிறது.

Varian உடனான DIMO Healthcare இன் இந்த கூட்டாண்மையானது, விரைவான நோயறிதல் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள், ஒவ்வொரு நபர்களுக்கும் அவசியமான தனித்தனியான கதிர்வீச்சு சிகிச்சைத் திட்டங்கள் வரை விரிவான அளவிலான புற்றுநோய் சிகிச்சைக்கான அணுகலை நோயாளிகளுக்கு வழங்குகிறது. இந்தச் சேவைகள் மற்றும் செயன்முறைகளை நெறிப்படுத்தவும், மருத்துவர்களுக்கு அவசியமான செயற்றிறன் மிக்க செயற்பாட்டை உருவாக்கவும் உதவுவதோடு, இதன் மூலம் அதிகளவிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்தப்படுகின்றது.

உயர் பயிற்சி பெற்ற பொறியியல் சேவைக் குழுவைக் கொண்டுள்ள DIMO Healthcare ஆனது, உடனடி இயந்திர நிறுவல்கள், குறைந்தபட்ச பராமரிப்பு சேவைகள் மற்றும் துல்லியமான தரக் கட்டுப்பாடு ஆகியவற்றை உறுதி செய்கிறது. Varian இன் அதிநவீன தொழில்நுட்பத்தை தடையின்றி ஒருங்கிணைப்பதோடு, தனது தொடர்ச்சியான பராமரிப்பை DIMO Healthcare உறுதி செய்கிறது.

DIMO Healthcare மற்றும் Varian இடையேயான இந்த கூட்டாண்மையானது, இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு தனித்துவமான மைல்கல் ஆகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *