Diva பவர் வொஷிங் விப்லவய மூலம் சலவை இயந்திர வெற்றியாளர்கள்

ஹேமாஸ் நிறுவனத்தின் முன்னணி வீட்டுப் பாவனை சலவை வர்த்தகநாமமான தீவா, அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட தீவா பவர் வாஷிங் விப்லவய போட்டியை அண்மையில் நிறைவு செய்தது. இந்த முயற்சியின் நோக்கமானது, மக்கள் தினசரி சலவை செய்வதற்கு உதவும் வகையில், 7.5 கி.கி. எடை, முழுமையான தன்னியக்க சலவை இயந்திரத்தை (7.5kg, fully automatic washing machine) வெற்றி பெறும் போட்டியில் பங்குபற்றி வெல்லுவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும். இப்போட்டி 4 மாகாணங்களை உள்ளடக்கியதாக இரண்டு மாதங்கள் இடம்பெற்றது.

வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, போட்டியின் முடிவில், முழுமையான தன்னியக்க சலவை இயந்திரங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர நவீன வர்த்தக (SMMT) விற்பனை நிலையங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Diva Power Germ Guard மற்றும் Colour Guard தயாரிப்புகள் இரண்டின் பலன்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், முழுமையான தன்னியக்க சலவை இயந்திரத்தை வெல்வதற்கான வாய்ப்பையும் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில், விளம்பரதாரர்களால் அது தொடர்பான விபரங்கள் பகிரப்பட்டன. 1கி.கி. அல்லது 1 லீற்றர் அல்லது 600ml தீவா பவர் ஜேர்ம் கார்ட் அல்லது கலர் கார்டை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்கள், இந்த குலுக்கலில் உடனடியாக உள்நுழையும் வாய்ப்பை பெற்றனர்.

முதன் முதலில் 2003இல் சலவை சவர்க்காரத்திற்கான ஒரு வசதியான மாற்றீடாக தீவா வெளியிடப்பட்டதோடு, சலவைத் தூளின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வையும் அது ஏற்படுத்தியது. ஒக்டோபர் 2020 இல், தீவா பவர் ஜேர்ம் கார்ட் மற்றும் கலர் கார்ட் ஆகிய தயாரிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதே வருடத்தில் தீவா தனது தயாரிப்பு வகைகளை திரவ வகையாக விரிவுபடுத்தியது. அத்துடன் சலவைப் பிரவில் திரவ மீள் நிரப்பலை முதன்முதலில் அது கொண்டு வந்தது.

இயற்கையான பொருட்களான எலுமிச்சை மற்றும் வேம்பு கொண்டு தயாரிக்கப்படும் தீவா பவர் ஜேர்ம் கார்ட், 99.9% கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுவதுடன், ஆடைகளுக்கு சிறந்த சுத்தம் மற்றும் நீண்ட கால பாதுகாப்பை வழங்குகிறது. தீவா பவர் ஜேர்ம் கார்டை கைகளை கழுவவோ அல்லது top loader சலவை இயந்திரங்களிலோ, கவரும் நறுமணத்தை ஏற்படுத்தவோ பயன்படுத்தலாம்.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த சலவை தொடர்பான நிபுணர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்ட தீவா பவர் கலர் கார்ட், ஆடைகளின் வண்ணங்களைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் சிறந்த வகையில் துப்புரவு செய்வதையும் உறுதிப்படுத்துவதுடன், நீடித்த நறுமணத்தை வழங்க இளஞ்சிவப்பு நிற பூவான carnation இன் வாசனையையும் அது கொண்டுள்ளது. தீவா பவர் கலர் கார்ட் கைகளை கழுவவோ அல்லது top loader சலவை இயந்திரங்களிலோ பயன்படுத்தலாம்.

பல வருடங்களாக சிறந்த சலவை தீர்வுகளை வழங்கும் தீவா, இலங்கையர்களிடையே மிகப் பிரபலமான வீட்டுப் பாவனை பெயராகும். இவ்வர்த்தக நாமமானது அனைத்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை தொடர்ந்து உயர்த்துவதுடன், சலவை பராமரிப்புப் பிரிவின் அதிகரித்துவரும் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

This image has an empty alt attribute; its file name is rsz_1diva_ww_winners.jpg
Photo Captions
‘தீவா பவர் வொஷிங் விப்லவய’ குலுக்கல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
மாபெரும் பரிசு வழங்கி வைக்கப்பட்ட போது…


Hemas Consumer பற்றி

வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது வென்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *