Dornier Medilas H140 மூலம் இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான வசதியை மேம்படுத்தும் Hayleys Lifesciences

நாட்டிலுள்ள அதிநவீன பகுப்பாய்வு, அறுவை சிகிச்சை, கதிரியக்க உபகரணங்கள் மற்றும் பாவனைப் பொருட்களின் முன்னணி விநியோகஸ்தரான Hayleys Lifesciences (Pvt) Ltd நிறுவனம், சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான (urological stone treatment) அணுகலை மேம்படுத்துவதற்காக அதிநவீன Dornier Medilas H140 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளிகள் அதிக அளவில் காணப்படுகின்றதும், அதற்கான மேம்பட்ட சிகிச்சை வசதிகள் பற்றாக்குறை உள்ள வேளையிலும் ஏற்பட்டுள்ள சமூக தேவையை இந்த தொழில்நுட்பம் நிவர்த்தி செய்கிறது.

Dornier MedTech நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Medilas H140 இயந்திரம், ஒரு அதிநவீன Holmium: YAG Laser ஆகும். இது சிறுநீரகக் கல் பிரச்சினை கொண்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், துல்லியத் தன்மையையும் பாதுகாப்பு அம்சத்தையும் ஒருங்கிணைப்பதன் மூலம், இலங்கையில் சிறுநீரகக் கல் சிகிச்சைக்கான புதிய தரநிலையை அமைக்கிறது. தற்போதைய சந்தையில் காணப்படும் அதிக ஆற்றல் கொண்ட ஒரு Holmium: YAG Laser ஆக இது காணப்படுகின்றது. ஒரே சாதனத்தில் லேசர் மற்றும் morcellator ஆகியவற்றை திறனாக இணைப்பதன் மூலம், இந்த இயந்திரம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் சிறுநீரகக் கற்களை அகற்றுகிறது.

Dornier Medilas H140 இயந்திரமானது அநுராதபுரம் மற்றும் களுத்துறை போதனா வைத்தியசாலைகளில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட, Hayleys Lifesciences பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் அத்துல விஜயானந்த “நாட்டின் சுகாதாரத் துறையை சிறந்து விளங்கக் செய்வதே எமது தூரநோக்கமாகும். Medilas H140 இயந்திரமானது, இலங்கையில் சிறுநீரகக் கல் நோயாளிகள் தங்களது சிகிச்சைக்கான அணுகலை கணிசமாக மேம்படுத்துகிறது. இதன் மூலம் மிக அவசியமான சமூகத் தேவையை நிவர்த்தி செய்யப்படுகிறது. இந்த தொழில்நுட்பமானது, நோயாளிகளுக்கு தனித்துவமான, துல்லியமான, பாதுகாப்பான மற்றும் வழக்கமான shockwave (அதிர்ச்சி அலைக) சிகிச்சைக்கு மாற்றாக சிறிய துளை மூலமான சிகிச்சையை வழங்குகிறது.” என்றார்.

கடந்த காலங்களில், உடலுக்கு வெளிப்புறமான shockwave சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அத்துடன் அதன் செயற்றிறனாது பயன்படுத்தப்படும் shockwave இன் வலிமையைப் பொறுத்தாக அமைந்திருந்தது. ஆயினும், இந்த முறையானது சில வேளைகளில் குறிப்பிட்டு கூற முடியாத விளைவுகளுக்கு வழிவகுத்தது. காரணம் shockwave இனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது காலப்போக்கில் நோயாளிகளின் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். அந்த வகையில் Medilas H140 லேசர் சிகிச்சையானது அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களின் சாத்தியத்தையும் ஆபத்தையும் கணிசமான அளவில் குறைக்கிறது.

லேசர் சிகிச்சை, குறிப்பாக PCNL (Percutaneous Nephro Lithotripsy) அணுகுமுறையானது, சிறுநீரகக் கல் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுகிறது. சிறிய துளை மூலமான இந்த செயன்முறையில், சிறுநீரகக் கற்களை அணுகவும் அதனை அவதானிக்கவுமான ஒரு nephroscope இனை செலுத்துவதற்காக, 2 முதல் 4 மி.மீ. வரையிலான துளையை ஏற்படுத்தும் சத்திரசிகிச்சையாக இது அமைகிறது. சிறுநீரகக் கற்களை திறமையாகவும் பாதுகாப்பாகவும் அகற்றும் பொருட்டு, இங்கு மேம்பட்ட தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் லேசர் பயன்படுத்தப்படுகிறது.

Dornier MedTech நிறுவனமானது, அது கொண்டுள்ள முன்னோடியான தொழில்நுட்பம் மற்றும் சிறுநீரக சிகிச்சைகள் தொடர்பான துறையில் புரட்சிகரமான சிகிச்சைகளை வழங்குவதில் புகழ்பெற்று விளங்குகிறது. Medilas H140 ஆனது, சுமார் 1-phase மின் விநியோகத்துடனான இணக்கத்தன்மையுடன், மின்சக்திக்கான நெகிழ்வுத்தன்மையையும், திறமையான திரவ முகாமைத்துவம் மற்றும் பல்வேறுபட்ட நோயாளிகளுக்கு ஏற்ற வகையிலான உயர்தர லேசர் இழைகளை உறுதி செய்யும் வகையிலான விரிவான பைபர் (Fibre) வகைகளை கொண்டிருத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. சிகிச்சை முறைகளுக்கு இடையில் எளிதாக மாறும் வகையிலான, மூன்று இதழ் (three-pedal) வடிவமைப்புடன் கூடிய smart foot switch பகுதியை இது கொண்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் சிறுநீரகக்  கல் சிகிச்சைகளில் நோயாளிகளுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *