EDEX Expo கொவிட் தொற்றுக்குப் பின் EDEX Hybrid Expo 2022 ஆக வெளிவருகிறது

இலங்கையின் முதன்மையான, மிகப் பெரும் கல்விக் கண்காட்சியும் வேலைவாய்ப்புக் கண்காட்சியுமான EDEX Expo, கொவிட் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பின்னர், புதிய மற்றும் சமகால வடிவில், Hybrid Expo (கலப்பு கண்காட்சியாக), 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் கொழும்பு 07 இல் உள்ள Royal MAS அரங்கில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில், Virtual Expo (மெய்நிகர் எக்ஸ்போ) ஆக இடம்பெறுகின்றது. இவ்விழாவின் பிரதம அதிதியாக, தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன  கலந்து கொண்டு, 18ஆவது முறையாக இடம்பெறும் இந்நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைப்பார்.

2004ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட EDEX Expo ஆனது, பாடசாலை வாழ்க்கைச் சந்தை எனும் நிலையிலிருந்து, கல்வித் துறையில் புகழ்பெற்ற உலகளாவிய பெயராக மாறியுள்ளதுடன், இலங்கை இளைஞர்களை உலகளாவிய ரீதியில் போட்டித் தன்மையுள்ளவர்களாகவும் சாதனைகளின் உச்சத்தை எட்டுவதற்கும் வலுவூட்டும் அதன் நோக்கத்தைத் அது தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறது. சமீபத்திய தொழில்நுட்பத்தை உள்ளடக்கி, நேரம் மற்றும் நடைமுறையில் உள்ள சமூக தேவைகளுக்கு ஏற்ப EDEX Hybrid Expo அதை ஒரு படி மேலே கொண்டு செல்கின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடம்பெறும் Virtual Expo நிகழ்வானது, மாணவர்கள் தங்கள் வீடுகளில் வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தவாறு, அவர்களின் கல்வி மற்றும் தொழில் தெரிவுகளை ஆராயும் எதிர்கால அனுபவத்தை வழங்கும். இதற்காக, உலகெங்கிலும் பல வெற்றிகரமான மெய்நிகர் நிகழ்வுகளை நடத்திய பிரபல இந்தியாவை மையமாகக் கொண்ட தொழில்நுட்ப சேவை வழங்குநரான ‘Floor’ உடன் EDEX கூட்டுச் சேர்ந்துள்ளது.

அதிநவீன மென்பொருளானது, ஒரு சேவைத் தளத்தில் கட்டமைக்கப்பட்டு, ‘Floor’ இனது மெய்நிகர் தீர்வானது, ஒருவருடன் ஒருவர், ஒருவருடன் பலர், பலருடன் பலர் போன்ற  தொடர்பு இணைப்புகளை செயல்படுத்துவதுடன், எந்த செயலியையும் பதிவிறக்க வேண்டிய அவசியமின்றி, தனிநபர் கணனிகள், மடிகணனிகள், டெப் கணனிகள், கையடக்க சாதனங்கள் ஆகியவற்றில் இலகுவாக இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. EDEX virtual stall (மெய்நிகர் கூடங்களை) கொண்டிருப்பவர்கள் மாணவர்களுடன் இணைவதற்கு 3 ஓடியோ மற்றும்  வீடியோ அறைகளுக்கான அணுகலைப் பெறுவார்கள். அதே நேரத்தில் virtual stall தளத்திலிருந்தவாறு வீடியோக்கள், நிலையான விளம்பரங்கள், பாடநெறி உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் விடயங்களை அவர்களால் வெளியிட முடியும்.

EDEX Hybrid Expo 2022 ஆனது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 47 இற்கும் மேற்பட்ட கல்விக் கண்காட்சி அரங்குகளை உள்ளடக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச முக்கிய இரண்டாம் நிலை கல்வி பங்குதாரர்களை உள்ளடக்கியதாக அமையும். கனடா, பிரான்ஸ், ஜப்பான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பல புகழ்பெற்ற நிறுவனங்களின் பங்கேற்பு மூலம் அதன் சர்வதேச பங்கேற்பு அமைந்திருக்கும்.

EDEX Nenapahana மற்றும் EDEX Sithuwam பிரிவின் கீழ், தொழில் வாய்ப்புக் கண்காட்சி, தொழில்துறைகள், தொழில்முனைவோர் வலயம், சமூகம் சார்ந்த திட்டங்களும் இக்காண்சியில் வழமை போன்று இடம்பெறும். EDEX தொழில் வாய்ப்பு கண்காட்சியானது வேலை வழங்குநர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இடையே ஒரு இணைப்பை உருவாக்குவதுடன், பொருளாதாரத்தில் பல முக்கிய பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற மற்றும் முன்னணி நிறுவனங்களின் கூடங்களை உள்ளடக்கியதாக அமையும். EDEX Careers ஆனது, முன்னணி தொழில் வல்லுநர்களால் கருத்தரங்குகள், உளவியல் சோதனைகள், தொழில் வழிகாட்டல் மற்றும் நேர்முகத் தெரிவை எதிர்கொள்வது போன்றவற்றில் ஒருவருடன் ஒருவர் பங்குபற்றும் தனித்தனியான ஆலோசனை அமர்வுகளையும் நடாத்தும்.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, தொழில் அமைச்சு ஆகியன அனுமதியளித்துள்ளன.

இந்நிகழ்வின் மூலோபாய பங்காளிகளாக, இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) மற்றும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம் (EFC) ஆகியன அங்கம் வகிக்கின்றன.

மூன்றாவது முறையாகவும் பிளாட்டினம் பிரிவில் நிகழ்வின் பெருமைக்குரிய அனுசரணையாளராக Sri Lanka Technological Campus (SLTC) திகழ்வதுடன், கண்காட்சியின் தங்க (Gold) அனுசரணையாளர்களாக CINEC வளாகம், Nawaloka College of Higher Studies, Java Institute for Advanced Technology, Imperial College of Business Studies, UTS College of Sri Lanka ஆகியன உள்ளன. வெள்ளி அனுசரணையாளர்களாக, ACBT Middlesex University, IMC Education / AIC Campus, Sri Lanka Institute of Marketing ஆகியன அங்கம் வகிக்கின்றன. இவ்வேலைவாய்ப்புக் கண்காட்சியின் பிரதான அனுசரணையாளராக 360 careers.lk உள்ளது. தொலைத்தொடர்பாடல் கூட்டாளராக ஸ்ரீ லங்கா டெலிகாம் பிஎல்சி நிறுவனமும் மக்கள் தொடர்பாடல் கூட்டாளராக PR Wire நிறுவனமும் உள்ளன.

EDEX Expo விற்கு வருகை தந்து, தங்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்சார் முன்னேற்றத்திற்கா, EDEX Expo வைப் பார்வையிட, அடுத்த தலைமுறை தலைவர்களான அனைத்து ஆர்வமுள்ள இளைஞர்களையும் EDEX வரவேற்கிறது.

இக்கண்காட்சியானது, 2022 மார்ச் 26 மற்றும் 27ஆம் திகதிகளில், முற்பகல் 9.30 முதல் பிற்பகல் 6.00 மணி வரை கொழும்பு றோயல் கல்லூரியின் MAS Arena மண்டபத்தில் இடம்பெறுவதுடன், ஒன்லைனில் http://edexonline.floor.bz/ தளத்தின் ஊடாகவும் இடம்பெறும். நிகழ்வுக்கான முன்பதிவை https://registration.edex.lk/ ஊடாக மேற்கொண்டு, விரைவாகவும் வசதியாகவும் நுழையலாம். பெளதிக ரீதியான கண்காட்சியானது, அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பின்பற்றி சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இடம்பெறவுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *