இலங்கையின் முதன்மையான ஆடவருக்கான ஆடை வர்த்தக நாமமான Emerald International, “Re-Imagine Emerald” எனும் தனது வர்த்தகநாம மீள் பெயரிடல் மூலம் தமது பாரம்பரியத்தை மீள்வரையறை செய்துள்ளது. அந்த வகையில் நிறுவனம் தமது வர்த்தகநாமத்திற்கு ஒரு நவீன புதிய இலச்சினையை (Logo) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆடவரும் ஒவ்வொரு கணத்திற்கும் ஏற்ற ஸ்டைலை வழங்கும் ஒரு வர்த்தகநாமமாக Emerald தன்னை நிலைநிறுத்துகிறது.
மிக நீண்ட காலமாக போர்மல்வெயார்களுக்கான (சம்பிரதாய/ அலுவலக) ஒரு பெயராக Emerald இருந்து வருகின்ற போதிலும், வர்த்தகநாமத்தின் வெளியீடுகளை மீளமைக்க வேண்டிய நேரம் இதுவாகுமென அறிவித்துள்ளது. Emerald என்பது இனிமேலும் ஒரு போர்மல்வெயராக அன்றி, இன்றைய ஆடவர்கள் அனைவரினதும் பல்வேறு தேவைகளுக்கு ஏற்றவாறான பல்துறை ஆடவர் ஆடைகளாக மாறுகின்றது.
Emerald International பிரதம வணிக அதிகாரியான அஹ்மத் இக்ரம் இது பற்றித் தெரிவிக்கையில், “Emerald வர்த்தகநாம மீள் பெயரிடல் நிகழ்வானது, வெறுமனே அதற்கு ஒரு புதிய தோற்றத்தை வழங்குவதற்கு அப்பால், எமது எல்லைகளின் விரிவுபடுத்தலாகும். Emerald என்பது சம்பிரதாயபூர்வ ஆடைகள் மாத்திரமல்ல என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என நாம் விரும்புகிறோம். அவை ஒரு ஆடை அலுமாரியில் காணப்பட வேண்டிய அனைத்து ஆடைகளையும் முழுமையாக வழங்கும் ஒரு வர்த்தகநாமமாகும். அலுவலகத்திற்கான போர்மல் ஆடைகள் முதல் சற்று சுதந்திரமான கெஷுவல் ஆடைகள், திரும்பிப் பார்க்க வைக்கும் மாலை நேர ஆடைகள் வரை, சேர்ட்கள், Polos, Crewnecks, Denim, Utilitech Chinos, and Cotton Chinos உள்ளிட்ட ஒவ்வொரு ஆடவருக்கும் ஏற்ற ஆடைகள் எம்மிடம் உள்ளது.” என்றார்.
Emerald இன் நவீனமயமாக்கப்பட்ட இலச்சினையானது, வர்த்தகநாமத்தின் நேர்த்தி, உறுதி, காலத்தால் அழியாத மாற்றத்தை உள்ளடக்கியுள்ளது. இது புதிய தலைமுறையினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உருவாகி வரும் வர்த்தகநாமத்தின் தோற்ற பிரதிநிதித்துவமாக இருக்கும் அதே வேளையில், தமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான பெயராகவும் அமைகின்றது.
Emerald இன் பல்துறைத்திறன் மற்றும் நேர்த்தியைக் கண்டறிய உங்கள் அருகாமையில் உள்ள காட்சியறைக்கு விஜயம் செய்வதோடு, ஒவ்வொரு ஆடவருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் ஏற்ற உண்மையாக மீள்வடிவமைக்கப்பட்டுள்ள இவ்வர்த்தகநாமத்தை ஆராயுங்கள்.