FentonsIT உடன் இணைந்து ஐரோப்பிய புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழங்கி, இலங்கைக்குள் விரிவடையும் IceWarp

வணிகத் தொடர்பாடல் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான IceWarp, இலங்கையில் தனது அதிநவீன தளத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் வளர்ந்து வரும் வணிகத் துறையை ஆதரிக்கும் வகையிலான மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தீர்வுகளில் ஐரோப்பிய நிபுணத்துவத்தைக் கொண்டுவருகிறது.

இந்த விரிவாக்கம் Hayleys Fentons நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவான Fentons Information Technology (FIT) உடனான ஒரு மூலோபாய கூட்டாண்மை மூலம் முன்னெடுக்கப்படுகிறது.

2025 ஏப்ரல் 04ஆம் திகதி கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற பிரமாண்டமான அறிமுக நிகழ்வில், Hayleys PLC தலைவரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹான் பண்டிதகே உள்ளிட்ட பல விசேட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

IceWarp இன் உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரியான Adam Paclt மற்றும் IceWarp நிறுவனத்தின் இந்தியா மற்றும் மத்திய கிழக்குக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி Pramod Sharda மற்றும் அவர்களது உலகளாவிய குழுவின் பங்குபற்றுதலுடன் கூடிய இந்நிகழ்வானது, இந்த விரிவாக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. வங்கி, நிதிச் சேவைகள், காப்புறுதித் துறைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள், அரச அதிகாரிகள், பெருநிறுவனத் தலைவர்கள் மற்றும் CIO க்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமையானது, IceWarp இன் ஐரோப்பிய நிபுணத்துவம் தொடர்பான வலுவான உள்ளூர் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.

இந்த அறிமுகத்தின் மூலம், இலங்கை வணிகங்கள் தற்போது Microsoft 365 மற்றும் Google Workspace இற்கு மாற்றீடான, மலிவு விலையிலான, அளவிடப்படக்கூடிய மற்றும் பாதுகாப்பான ஒரு மென்பொருளை அணுக முடியும். IceWarp இன் மேம்பட்ட Collaboration Suite ஆனது, தகவல்தொடர்பாடல்களை நெறிப்படுத்தவும் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒற்றை, ஒருங்கிணைந்த தளமாக இயங்கி பரந்த அளவிலான கருவிகளை ஒருங்கிணைக்கிறது. நெகிழ்வான ஹைபிரிட் ஈடுபடுத்தல் தெரிவுகள் மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்கும் IceWarp, நிறுவனங்கள் பாதுகாப்பு அல்லது செயல்பாட்டில் எவ்வித சமரசமும் மேற்கொள்ளாமல் தமது செயற்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.

இந்த முக்கிய மைல்கல் குறித்து IceWarp உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரி Adam Paclt கருத்துத் தெரிவிக்கையில்: “எமது உலகளாவிய விரிவாக்கத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் IceWarp தொழில்நுட்பத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். FentonsIT உடனான எமது நம்பிக்கைக்குரிய கூட்டாண்மை மூலம், இலங்கை வணிகங்களுக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகின்ற மற்றும் வணிக சுறுசுறுப்பை செயற்படுத்தும் ஒரு பாதுகாப்பான, புத்தாக்கமான தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

IceWarp இன் பயனர் நட்பு இடைமுகமானது, பணிச் செயற்பாட்டு முகாமைத்துவத்தை எவ்வாறு எளிதாக்குகிறது என்பது தொடர்பிலும் அது ஒத்துழைப்பு தொடர்புகளை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது தொடர்பிலும், இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்றவர்கள் நேரடி அனுபவத்தை பெற்றனர். இந்த தளமானது அதற்குள் தடையற்ற வகையில் மாறுவதற்கும், 24/7 உள்ளூர் மொழி ஆதரவுடனான அர்ப்பணிப்புள்ள வாடிக்கையாளர் சேவைச் குழுக்களை கொண்டுள்ளது. இதனால் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் சுமூகமாக மாற முடியும் என்பது உறுதியளிக்கப்படுறது.

இலங்கையின் பெருநிறுவனத் துறையில் IceWarp இன் அர்ப்பணிப்பானது, அதன் தொழில்நுட்ப உதவி மூலம் மேலும் பிரதிபலிப்பதோடு, உள்ளூர் நிறுவனங்களில் அதன் நீண்டகால முதலீட்டை வலுப்படுத்துகிறது. இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சம் யாதெனில், ChatGPT உள்ளிட்ட AI மூலம் இயங்கும் கருவிகளை ஒருங்கிணைத்து, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் GDPR, HIPPA, ISO உள்ளிட்ட ஏனைய உலகளாவிய தரவுப் பாதுகாப்பு தரநிலைகளுடன் இணங்குவதை உறுதிசெய்கிறது. இது தரவுப் பாதுகாப்பு மற்றும் செயற்பாட்டுத் திறன் மற்றும் குழு ரீதியான உற்பத்தித்திறனை முன்னுரிமைப்படுத்தும் வணிகங்களுக்கு IceWarp இனை ஒரு நம்பகமான கூட்டாளியாக அடையாளப்பபடுத்துகிறது.

இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட Hayleys Fentons முகாமைத்துவ பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக: “FentonsIT ஆகிய நாம், இலங்கைக்கு உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப தீர்வுகளை கொண்டு வருவதற்காக அர்ப்பணிப்புடன் இருந்து வருகிறோம். IceWarp உடனான எமது கூட்டாண்மையானது, வணிகங்களுக்கு ஒத்துழைப்பு மற்றும் செயற்திறனை மேம்படுத்துகின்ற, செலவு குறைந்த, புத்தாக்கமான தகவல் தொடர்பாடல் தளத்தை வழங்க உதவுகிறது.” என்றார்.

இந்த ஒத்துழைப்புக்கு தனது வலுவான ஆதரவைத் தெரிவித்து கருத்து வௌியிட்ட FentonsIT பொது முகாமையாளர் யூசூப் இஹ்திஷாம்,: “IceWarp  உடனான எமது மூலோபாய கூட்டாண்மை மூலம், இலங்கை வணிகங்களுக்கு மேம்பட்ட, செலவு குறைந்த தகவல் தொடர்பாடல் தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்வதோடு உள்ளூர் நேரடி ஆதரவின் நன்மையையும் வழங்குகிறோம். இந்த ஒத்துழைப்பானது, வணிகங்கள் எமது அர்ப்பணிப்புள்ள குழுவினரின் ஆதரவுடன் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை நம்ப முடியும் என்பதை உறுதி செய்கிறது. இது தடையற்ற செயற்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான உதவியை வழங்குகிறது.” என்றார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை, Fentons IT குழுவினரை 0112 102 102 எனும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பெறலாம்.

Hayleys Fentons Limited பற்றி

1919 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Hayleys Fentons Limited நிறுவனம், இலங்கையின் ஆரம்பகால பொறியியல் நிறுவனங்களில் ஒன்றாகும். நாட்டின் நம்பர்.1 Solar EPC நிறுவனம் எனும் வகையிலும் MEP ஒப்பந்ததாரர் எனும் வகையிலும், இந்த நிறுவனம் 100 ஆண்டுகளுக்கும் மேலான தொழில்துறை விசேடத்துவத்தைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய விசேட பிரிவுகளில் சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்புகள், மின்சாரம் மற்றும் மின்விளக்குகள், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கி மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் பொருத்தல் மற்றும் எரிவாயு, பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஓடியோ மற்றும் காட்சி ஒருங்கிணைப்பு, தடையில்லா மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், வசதியளிப்பு முகாமைத்துவம், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் 3D காட்சிப்படுத்தல் ஆகியன அடங்குகின்றன. புத்தாக்கம் மற்றும் ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவைக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம், சிறந்த வாழ்க்கைக்கு நிலைபேறான மற்றும் புத்தாக்கமான பொறியியல் சேவைகளை வழங்குவதாகும்.

Fentons Information Technology (FIT) பற்றி

Fentons Information Technology ஆனது இலங்கையின் முன்னணி ICT கட்டமைப்பு ஒருங்கிணைப்பாளராக தனித்து விளங்குவதோடு, அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்துள்ளது. மாற்றமடைந்து வரும் வணிகத் துறையில் வாடிக்கையாளர்களை முன்னோக்கி வழிநடத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நம்பகமான தொழில்நுட்பம் – திறமையான குழுவினர் ஆகியவற்றின் அடித்தளத்தில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விரிவான நிபுணத்துவம் மற்றும் தொடர்ச்சியான ஆராய்ச்சியைப் பயன்படுத்தி பயனுள்ள மற்றும் திறனானன தீர்வுகளை வழங்குவதோடு, நம்பகமான ICT கூட்டாளராக இருந்து தனது நற்பெயரை மேலும் வலுப்படுத்துகிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடனான FIT, சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு, நிறுவன வலையமைப்பு, ஒத்துழைப்பு தொகுப்புகள் மற்றும் மென்பொருட்கள், ஆலோசனை சேவைகள் மற்றும் அடுத்த தலைமுறையிலான நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று விளங்குகின்றது. பெருமையுடன் புதிய அளவுகோல்களை அமைத்து, உயர்மட்ட 24/7 IT உட்கட்டமைப்பு கண்காணிப்பு, நிகழ்வு அறிக்கையிடல், விரிவாக்கம் மற்றும் IT மூலம் நிர்வகிக்கப்பட்ட சேவைகளை உறுதி செய்யும் ISO/IEC 27001:2022 சான்றிதழை FIT பெற்றுள்ளது.

IceWarp பற்றி

IceWarp ஆனது Microsoft 365 மற்றும் Google Workspace இற்கான செலவு குறைந்ததும் சக்திவாய்ந்ததுமான மாற்றீட்டைத் தேடும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்ட உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாடல் தளமாகும். இது email, chat, video conferencing, document collaboration, cloud storage ஆகியவற்றிற்காக தடையற்ற, அனைத்தும் ஒன்றாக ஒரேயிடத்தில் ஒருங்கிணைத்த தீர்வை வழங்குகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *