Huawei சேவைத் திருவிழா: உங்கள் சாதனங்களை எப்போதும் புதிதாக வைத்திருக்க அற்புதமான சலுகைகளை வழங்குகிறது

உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீடான Huawei, அதன் சேவைத் திருவிழாவை (Huawei Service Carnival) 2021 ஜூலை 19 முதல் செப்டம்பர் 30 வரை நாடளாவிய சேவை மையங்களில் நடைமுறைப்படுத்தியுள்ளது. Huawei தனது விஸ்வாசமான வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சாதனங்களுக்கு புதிய தோற்றத்தை வழங்கும் வகையிலான், பிரத்தியேக சலுகைகள் மற்றும் ஊக்குவிப்புகளை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வெகுமதிகளை வழங்குகின்றது. Huawei சேவைத் திருவிழாவானது, உதிரிப் பாகங்களை மாற்றீடு செய்ய 50% வரையான தள்ளுபடி, ஒரே விலையில் அமைந்த மின்கல மாற்றீடு, இலவச தூய்மையாக்கல் சேவைகள் உள்ளிட்ட தனித்துவமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை கொண்டு வருவதுடன், Share-to-Win போன்ற செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்துகிறது.

தெரிவு செய்யப்பட்ட உதிரிப் பாகங்களை மாற்றுவதற்கு Huawei 50% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளதுடன், 90 நாட்கள் உத்தியோகப்பூர்வ உத்தரவாதத்துடன் அசல் உதிரிப் பாகங்களை பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. ஒரே விலையில் அமைந்த மின்கல மாற்றீட்டை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாள் உத்தரவாதத்துடன் குறைந்த விலையில் தங்களது சாதனத்திற்கான மின்கலத்தை மாற்ற முடியும். வாடிக்கையாளர்கள் தங்கள் Huawei ஸ்மார்ட்போன்கள், டெப்லட்டுகள் உள்ளிட்ட அனைத்து  Huawei சாதனங்களையும் கிருமியழித்தல், சுத்தம் செய்தல் மற்றும் ஆய்வு செய்தல் சேவைகளுக்காக, Huawei சேவை திருவிழாவின் போது எந்தவொரு சேவை மையத்திற்கும் எடுத்துச் சென்று இலவசமாக அச்சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இத்திருவிழாவின் மிகவும் உற்சாகமான அம்சம் யாதெனில், வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான பரிசுகளை வழங்கும் Share-to-Win செயல்பாடு ஆகும். அவர்கள் செய்ய வேண்டியது, பேஸ்புக்கில் உத்தியோகபூர்வ Huawei Service Carnival இடுகையை #HuaweiServiceCarnivalLK எனும் ஹேஷ்டேக் உடன், அவர்களின் பின்னூட்டங்களை பகிர்ந்து லைக் செய்து செயார் செய்வது மாத்திரமேயாகும். இடுகைகள் குறைந்தபட்சம் 100 லைக்குகளை எட்டினால், வாடிக்கையாளர்கள் அதனை ஸ்கிரீன் ஷொட் எடுத்து, பரிசுகளைப் பெறுவதற்காக, சேவை மையங்களில் உள்ள ஊழியரிடம் காட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (இதன்போது, பரிசுகளின் வகைகள் மற்றும் அவை கையிருப்பில் உள்ளதற்கு இணங்க, முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் வழங்கப்படும்)

Huawei சாதனங்களுக்கான இலங்கைக்கான தலைவர் பீட்டர் லியு இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், உற்சாகமான பல சலுகைகளுடன் Huawei சேவைத் திருவிழாவை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். சேவைத் திருவிழாவில் பல்வேறு செயல்பாடுகள், உத்தரவாதங்கள் மற்றும் தள்ளுபடிகள் போன்ற விசேட நன்மைகளை வழங்கப்படுகின்றன. Huawei சேவை மையங்களின் நம்பிக்கை மற்றும் உத்தரவாதத்தின் அடிப்படையில், அசல் உதிரிப் பாகங்கள் மூலம் தங்கள் சாதனங்களை பழுது பார்க்க இது ஒரு அருமையான வாய்ப்பாக அமைகின்றது.” என்றார்.

Huawei தயாரிப்புகள், உதிரிப் பாகங்கள் மற்றும் மின்கலங்களை மாற்றீடு செய்தல், சேவைகள் மற்றும் அது தொடர்புடைய தகவல்கள் பற்றிய மேலதிக தகவல்களைப் பெற, https://consumer.huawei.com/lk/support/huawei-service-carnival-campaign/ எனும் முகவரிக்கு செல்லவும் அல்லது 0112423017 இனை தொடர்பு கொள்ளவும்.

தகவல் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் (ICT) உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி உலகளாவிய வழங்குநரான Huawei நிறுவனம், முழுமையாக இணைக்கப்பட்ட, புத்திசாலித்தனமான உலகிற்காக, ஒவ்வொரு நபருக்கும், வீட்டுக்கும், நிறுவனத்திற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் உறுதியாக உள்ளது. உலகளாவிய மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Huawei, புகழ்பெற்ற விருது விழாக்களில் முறையாக கௌரவிக்கப்பட்டு, உலகளாவிய தரக்குறியீடுகளின் தரவரிசையில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய தரக்குறியீடுகள் தொடர்பான, BrandZ Top 100 பட்டியலில் Huawei 45ஆவது இடத்தையும், Forbes உலகின் மிக மதிப்புமிக்க தரக்குறியீடகள் பட்டியலில் 79ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. அத்துடன் சமீபத்திய Brand Finance Global 500 மிகவும் மதிப்புமிக்க தரக்குறியீடுகள் பட்டியலில் முதல் 10 மதிப்புமிக்க தரக்குறியீடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Interbrand இனது, சிறந்த உலகளாவிய தரக்குறியீடுகள் பட்டியலில் Huawei 68ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மேலும் Fortune உலகளாவிய 500 பட்டியலிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *