Huawei தற்போது பரந்துபட்ட ஸ்மார்ட் அணிகலன் வகைகளை நுகர்வோருக்கு வழங்குகிறது

முன்னணி தொழில்நுட்ப தீர்வு வழங்குநரான Huawei, மேம்படுத்தப்பட்ட தொடர்பாடல், அனைத்து சூழ்நிலைகளுக்கும் ஏற்ற வகையிலான, விருப்பத்திற்கேற்ப, சுதந்திரம் கொண்ட இணைப்பு ஆகியவற்றின் மூலம் மிகவும் வசதியான ஸ்மார்ட் வாழ்க்கை அனுபவத்தை கொண்டு வந்து, நுகர்வோரின் பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையிலான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை தற்போது இலங்கையில் வழங்குகிறது. இதுவொரு புத்திசாலித்தனமான வாழ்க்கையை வாழ்வதற்கான எளிய வழியாகும்.

சந்தையில் பலவிதமான ஸ்மார்ட் அணிகலன் வகைகளை Huawei அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Watch 3, Huawei Band 6, Huawei Watch GT2 Pro, Huawei Watch Fit, Huawei Band 4e, ஆகிய இந்த ஐந்து விசேட பொருட்கள் தொடர்பிலும் நுகர்வோரிடையே அதிக கேள்வி நிலவுகின்றது.

அனைத்து Huawei தயாரிப்புகளையும் போன்று, இலங்கையில் தற்போது கிடைக்கும் ஸ்மார்ட் அணிகலன் வகைகளும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. Huawei Watch 3 ஆனது 1.43 அங்குல AMOLED திரையுடன் வருகிறது. இது, ஸ்மார்ட் கைக்கடிகார வடிவமைப்புக்கான எதிர்காலத்தை மீள் வரையறை செய்வதாக அமைகின்றது. தொடு உணர் திறன் அதிகம் கொண்ட திரை, பக்கவாட்டிலான பொத்தான், முழுமையாக சுழற்றக்கூடிய சுழலும் திருகாணி பகுதி, smart mode இல் இருக்கும்போது 3 நாட்கள் வரையான நீண்ட மின்கல ஆயுளையும், ultra-long battery life mode பயன்முறையில் 14 நாட்கள் வரையான மின்கல ஆயுளையும் அது வழங்குகிறது. Huawei Band 6 ஆனது 1.47 அங்குல AMOLED full view display, நாள் முழுவதும் SpO2 கண்காணிப்பு, 96 பயிற்சி பாணிகள், TruSeen 4.0 இதயத் துடிப்பு கண்காணிப்பு, TruSeen 2.0 தூக்க கண்காணிப்பு ஆகியவற்றுடன் 2 வார மின்கல ஆயுளை பேணுகின்றது.

ஸ்டைலான Huawei Watch GT2 Pro ஆனது 1.39 அங்குல AMOLED தொடுதிரை, பவர் பட்டன் மற்றும் ஒரு செயற்பாட்டு பொத்தானுடன் வருகிறது. அது ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைப் போன்ற உணர்வோடு சாதனத்தை எளிதாக இயக்குவதற்கு அனுமதிக்கிறது. இது தைத்தேனியம் உடல் மற்றும் நீல மாணிக்க முகப்பு ஆகியவற்றுடன், கறுப்பு, சாம்பல் ஆகிய இரண்டு வண்ணங்களில் (Night black, Nebula gray) கிடைப்பதுடன், இதில் 100 இற்கும் அதிக உடற்பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. 52 கிராம் எனும் சிறிய எடை கொண்ட இது, நாள் முழுவதும் அணிந்திருப்பதனை எளிதாக்குகிறது. அத்துடன் 5ATM அழுத்தம் வரை நீர் ஊடுபுகவிடாத திறனையும், 2 வார மின்கல ஆயுளையும் கொண்டுள்ளது.

Huawei Watch Fit ஆனது 1.64 அங்குல பல்வர்ண AMOLED திரை, 10 நாட்கள் வரையான மின்கல ஆயுள், 2.5D வளைந்த கண்ணாடி, 96 உடற்பயிற்சி முறைகள், உள்ளார்ந்த GPS உணரி, 5ATM10 நீர் எதிர்ப்புத் திறன், AI இதயத் துடிப்பு செயற்பாடு கண்டறிதல் மற்றும் புத்தாக்கம் கொண்ட சென்சர்கள், TruSeen™ 4.0 இதய துடிப்பு வீத கண்காணிப்பு ஆகியவற்றை வழங்குகிறது. ஒட்சிசன் செறிவூட்டல் கண்டறிதல்13, TruSleep™ 2.0 தூக்க கண்காணிப்பு, மற்றும் நாள் முழுவதும் மன அழுத்தத்தைக் கண்காணிக்கும் Huawei TruRelax™ தொழில்நுட்பம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

Huawei Band 4e ஆனது 0.5 அங்குல PMOLED திரையுடன் வருகிறது. இது திரையின் மீது தள்ளுதல் மற்றும் தொடுதல் செயற்பாடுகளை மேற்கொள்வதை ஆதரிக்கிறது. சிவப்பு, கறுப்பு (Mineral red, Graphite black) ஆகிய இரண்டு வெவ்வேறு வண்ணங்களில் அமைந்த பட்டிகளின் மூலம் இது மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது. சைக்கிளோட்ட கண்காணிப்பு, கூடைப்பந்து விளையாட்டு செயற்றிறன் கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, குறுஞ்செய்தி/ தொலைபேசி அழைப்பு அறிவித்தல், அலாரம் நினைவூட்டல், தொலைபேசி எங்கே உள்ளது என்பதை கண்டறிதல், 5ATM நீர் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றுடன் வழக்கமான பயன்பாட்டின் அடிப்படையில் 2 வார மின்கல ஆயுளையும் வழங்குகின்றது.

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் Huawei இன் அனைத்து ஸ்மார்ட் அணிகலன் வகைகளும், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து Huawei அனுபவ மையங்கள், சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் Daraz.lk, Singer.lk போன்ற இணைய வர்த்தகத் தளங்களிலும் கிடைக்கின்றன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *