Huawei Cloud: ஸ்மார்ட் பைனான்ஸ் சேவைக்கான அனைத்தும் ஒரே இடத்தில்

Huawei Cloud ஆனது அதன் Cloud Native Core Banking தீர்வை அண்மையில் Huawei Intelligent Finance Summit 2022 இல் அறிமுகப்படுத்தியது. இது பாரம்பரிய வங்கிகள் மற்றும் புதிய டிஜிட்டல் வங்கிகளின் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான அடித்தளமாகும். இதன் அறிமுகத்தின் போது, நிதித்துறையில் டிஜிட்டல் மாற்றத்தின் மூன்று போக்குகளை அது பகிர்ந்து கொண்டது. முதலாவதாக all-cloud, அதாவது நிதி நிறுவனங்கள் அதன் இதர இணைப்புத் தொகுதிகள் முதல் பிரதான தொகுதிகள் வரை அனைத்தும் மேகக்கணிக்கு இடம்பெயருகின்றன. இரண்டாவதாக big data and AI convergence (பாரிய தரவு மற்றும் AI ஒருங்கிணைப்பு), இது அறிவார்ந்த ஆளுகையின் புதிய சகாப்தத்தில் தரவை உச்சபட்ச பெறுமதி கொண்ட சொத்துகளாக மாற்றுகிறது. மூன்றாவதாக all-scenario intelligent connection (அனைத்து சூழ்நிலையிலும் அறிவார்ந்த இணைப்பு), அனுபவத்தை மையமாகக் கொண்ட, உள்ளடக்கிய நிதியை உருவாக்குவதற்காக, பௌதீக மற்றும் மெய்நிகர் உலகங்களை இது ஒன்றிணைக்கும்.

Huawei Cloud Marketing இன் தலைவர் William Dong இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “தற்போது, ​​உலகளாவிய நிதி நிறுவனங்களில் டிஜிட்டல் மாற்றம் ஆழமாக இடம்பெற்று வருகிறது. இது நிதி நிறுவனங்களுக்கு முன்னோக்கிப் பயணிப்பதற்கும், முன்னணியில் இருப்பதற்கான வாய்ப்புகளின் சகாப்தத்திற்கு வழி வகுக்கிறது. இதில் நிதியானது இறுதியில் ஸ்மார்ட்டாக மாறும். அனைத்து சூழ்நிலைகளிலும் உள்ளடக்கியவை, பன்முகப்படுத்தப்பட்ட வடிவங்களில் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடியதாக அது அமையும். Huawei Cloud ஆனது, மேற்படி 3 போக்குகளை அறிந்து, ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஸ்மார்ட் நிதிக்கான சேவையாக அனைத்தையும் உருவாக்குவதற்காக எமது கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றும்.” என்றார்.

கிளவுட்டை முழுமையாகத் தழுவி, Core System தொகுதிகளை விநியோகிக்கப்பட்ட Cloud Native இற்கு நகர்த்தும்

மெயின்பிரேம் கணனிகளிலிருந்து சுமையை குறைப்பதற்கும், பாரம்பரிய வங்கிகளுக்கான புதிய Core System தொகுதிகளை உருவாக்குவதற்கும், டிஜிட்டல் வங்கிகளை இயக்குவதற்கும் நிலையான Cloud Native (மேகக்கணனி சார்பு) தளத்தை வழங்க Cloud Native Core Banking தீர்வை, இந்த மாநாட்டில் Huawei Cloud அறிமுகப்படுத்தியது. Cloud Native Core Banking ஆனது மூன்று முக்கிய சேவைகளை உள்ளடக்கியதாகும். எங்கும் கிளவுட் நேட்டிவ் சர்வீஸ் (Ubiquitous Cloud Native Service – UCS), அல்லது Huawei Cloud இன் விநியோகிக்கப்பட்ட Cloud Native சேவையானது, GaussDB (openGauss இற்கான) விநியோகிக்கப்பட்ட தரவுத்தளம் மற்றும் DevCloud மென்பொருள் மேம்பாட்டு பாதையுடன் இணைந்தது. இத்தீர்வானது, அதிகமாக கிடைக்கும் தன்மை, பாரிய அளவிலான ஒத்திசைவு, வேகமான மென்பொருள் மீளமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் அதிக கிடைக்கும் தன்மையானது, பேரழிவு மீட்பு (DR) RPO = 0 இற்கு RTO ≤ 2 நிமிடங்கள் ஆகும்.

Big Data and AI Convergence (பாரிய தரவு மற்றும் AI ஒருங்கிணைப்பு)

நிதியியல் என்பது ஒரு உயர்ந்த டிஜிட்டல் துறையாகும். இது பெரிய தரவு மற்றும் AI ஆகியவற்றை ஒருங்கிணைப்பதில் முன்னணி வகிக்கிறது.

தரவு பெறுமதியை முழுமையாக விடுவிக்க, ஏரிகள், கிடங்குகள், AI இயங்குதளங்களுக்கிடையில் காணப்படும் தரவுக் பள்ளங்களால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களைத் தீர்க்க, Huawei Cloud ஆனது பாரிய தரவு மற்றும் AI ஒருங்கிணைப்பு தளத்தை வழங்குகிறது. Huawei Cloud ஆனது ஒருங்கிணைக்கப்பட்ட சேமிப்பகம் மற்றும் metadata போன்ற திறன்களை வழங்குகிறது. இதனால் தரவின் பிரதிகள் பல எஞ்சின்களுக்கு இடையே விரைவாகவும், தொடர்ச்சியாகவும் பரிமாறப்பட முடியும். Industrial and Commercial Bank of China (ICBC) ஆனது இந்த ஒன்றிணைத்தல் தளத்தில் தரவுப் பகுப்பாய்வு மற்றும் ஆய்வுகளை ஆரப்பித்ததோடு, அதன் செயல்திறனை அதிகளவில் மேம்படுத்தியது. இதில் சராசரி தரவுக் கேள்விக்கான காத்திருப்பு நேரம், 300 நிமிடங்களிலிருந்து 1.5 நிமிடங்களாக குறைக்கப்பட்டது.

அனைத்து சூழ்நிலைக்குமான நுண்ணறிவு கொண்ட இணைப்புக்காக, பௌதீக மற்றும் மெய்நிகர் உலகங்களை ஒன்றிணைத்தல்

கடந்த ஜனவரி மாத்தில், சீனாவின் People’s Bank of China (PBOC) 2022-2025 இற்கான அதன் Fintech Development திட்டத்தை வெளியிட்டது. இது முழுமையான வணிக இணைப்புக்குமான டிஜிட்டல் மனநிலையை உருவாக்கி, நிதியியலில் டிஜிட்டல் மயப்படுத்த முயற்சி செய்கிறது. இந்தப் பின்னணியில், வாடிக்கையாளர் சேவை மற்றும் புகைப்பட ஒப்புதலுக்காக பல வங்கிகள் மெய்நிகரான மனித ஊழியர்களை இணைக்க ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஸ்மார்ட் நிதியை உருவாக்க வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுதல்

வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், பிணைய பத்திரங்கள் நிறுவனங்கள், fintech நிறுவனங்கள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 300 இற்கும் மேற்பட்ட நிதி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மாற்றப் பயணத்திற்கு Huawei Cloud ஆனது சேவையாற்றி வருகிறது. எதிர்காலத்தில், Huawei Cloud ஆனது, உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு சூழ்நிலைக்குமான ஸ்மார்ட் நிதியை உருவாக்க உதவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *