Huawei Nova 7 SE மற்றும் Watch GT 2 Pro இணைந்து எல்லையற்ற தொடர்பாடல் செயற்பாடுகள்

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகக் குறியீடான Huawei, பயனர்கள் தங்களது பல்வேறு சாதனங்களில் தடையற்ற AI ஒருங்கிணைப்பு மூலோபாயத்துடன் அனைத்து சூழ்நிலைக்குமான அனுபவத்தையும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய மூலோபாயத்தின் மூலம், மக்கள் சாதுர்யமான உலகத்துடன் இணைந்து ஸ்மார்ட்டாக வாழ்வதற்கான வழியை Huawei வகுத்துள்ளது. Huawei நிறுவனம் புத்தம் புதிய தொழில்நுட்பத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவதோடு, ஸ்மார்ட்போன் உற்பத்தியை கடந்து ஸ்மார்ட் அணிகலன்கள், வயர்லெஸ் இயர்போன்கள், ஓடியோ தொகுதிகள் போன்ற தொழில்நுட்ப தீர்வுகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் போன்ற மேம்பட்ட கருத்தாக்கங்களிலும் செல்வாக்குச் செலுத்த வருகிறது.

பொழுதுபோக்கின்போதோ, உடற்பயிற்சி, அலுவலகம் அல்லது வீட்டு வேலைகளின்போதோ, ஒவ்வொரு சாதனங்கள் மூலமும் இணைப்பை ஏற்படுத்தும்போது, பயனர்களுக்கு அவர்களின் அன்றாட தேவைகளுக்கு ஸ்மார்ட் தீர்வுகளை வழங்க முடியும் என, Huawei அடையாளம் கண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆனது, அன்றாட வேலைக்கான மைய சாதனமாக காணப்படுகின்ற இக்காலகட்டத்தில், உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் அதிக அளவில் மேம்படுத்தும் தன்மை கொண்ட Huawei நிறுவனத்தின் புதிய தொழில்நுட்ப தீர்வுகளிலிருந்து ​​பயனர்கள் உச்சபட்ச நன்மைகளைப் பெறலாம்,.

AI ஒருங்கிணைப்பு மூலோபாயத்துடன் இசைந்து செயலாற்றும் மிகப்  பிரபலமான மற்றும் பல்வேறு அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக Huawei Nova 7 SE காணப்படுகின்றது. Cutting-edge 5G, AI குவாட் கெமரா மற்றும் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மனதைக் கவரும் அம்சங்கள் கொண்ட இக்கையடக்கத் தொலைபேசி, தொழில்நுட்ப ஆர்வலர்கள், அதில் காணப்படும் உள்ளார்ந்த அம்சங்களை ஆழமாக ஆராய்வதை தூண்டுகின்றது.

எந்தவொரு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளராலும் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நடுத்தர வகை 5G ஸ்மார்ட்போன் ஆக Huawei Nova 7 SE காணப்படுகின்றது. Nova 7 SE, சிறு துளை (Punch) கொண்ட 6.5 அங்குல முழுத் திரை அமைப்பை கொண்டுள்ளது. இது திரைப்படங்களைப் பார்க்கும்போதும், விளையாடும்போதும் ஒரு அற்புதமான அனுபவத்தைத் தருகிறது.

அதன் குவாட் கெமரா அமைப்பானது, அதன் அதிக பிரபலத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. Nova 7 SE ஆனது, 64 MP அல்ட்ரா உயர் தெளிவுத்திறன் கொண்ட பிரதான கெமரா, 8 MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கெமரா, 2 MP Bokeh கெமரா மற்றும் 2MP மெக்ரோ கெமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது அடுத்த நிலை புகைப்பட அனுபவத்தைக் கொண்டுவரும் அதே நேரத்தில், 4K High definition வீடியோ, Dual View வீடியோ போன்ற படைப்பாற்றல் தெரிவு அம்சங்கள் கொண்ட வீடியோ பதிவிடல், Super Slow-Motion, Time Lapse போன்ற கையடக்கத் தொலைபேசி வீடியோ பதிவிடல் அம்சத்திற்கு மேலும் மதிப்பை கொண்டு வருகின்றன. இதன் செல்பி கெமரா 16MP வில்லையுடன், Super night mode செல்பி தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

ஆற்றல் மிக்க Kriin 820 SoC chip மூலம் இயக்கப்படும் Nova 7 SE ஆனது, அதிக செயற்திறன் கொண்ட விளையாட்டுகளை விளையாடும்போதும், ​​திரைப்படங்களைப் பார்க்கும்போது, ​​இணையத்தில் உலாவும்போது எந்தவொரு பின்னடைவு இல்லாத செயல்திறனை உறுதிப்படுத்துகிறது. இதன் 8GB RAM ஆனது, அதன் மிக விரைவான செயல்திறன் மட்டங்களில் பெரிய பங்கு வகிப்பதுடன், 128GB சேமிப்பகம் மூலம் அனைத்து பயனர்களும் அவர்களின் அனைத்து வீடியோக்கள், புகைப்படங்கள், விளையாட்டுகள், செயலிகள், கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகளையும் வழங்குகிறது. Nova 7 SE ஆனது, 4,000 mAh திறன் கொண்ட பெரும் மின்கலத்தை கொண்டுள்ளதன் மூலம், இது ஒரு முழு நாள் பயன்பாட்டை எவ்வித தடையுமின்றி வழங்குகிறது. அத்துடன், Huawei Super Charge தொழில்நுட்பத்துடன் வருவதன் காரணமாக, 30 நிமிடங்களுக்குள் மின்கலத்தை 70% வரை சார்ஜ் செய்ய வழிவகுக்கிறது.

தினமும் பெரும்பாலான பணிகளில் ஸ்மார்ட்போனின் பயன்பாடு அவசியமாக காணப்படுகின்ற போதிலும், உடற்பயிற்சிகள் மற்றும் அன்றாட பயிற்சிகளுக்கும் ஸ்மார்ட் Watch இன் தேவையை நாட வேண்டிய காலமாக இது காணப்படுகின்றது. Huawei Watch GT 2 Pro ஆனது, Huawei Nova 7 SE இற்கு மிகச் சிறப்பாக ஒத்திசையும் ஒன்றாக காணப்படுகின்றது. அவை இரண்டும் அவற்றின் நிலைகளில் உயர்ந்த நிலையில் காணப்படுகின்றமையே அதற்கான காரணமாக இருக்கின்றது.

Huawei Watch GT 2 Pro ஆனது, அதியுயர் தொழில்முறை வடிவமைப்புடன் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களுக்கு புதிய பரிமாணத்தை வழங்குகிறது. அதன் உடலானது, தைத்தேனியம் மற்றும் நீல மாணிக்கத்துடனான முகப்பு ஆகியவற்றால் அமைந்துள்ளதன் மூலம் வரம்பற்ற அழகை கொண்டு சேர்க்கிறது. அத்துடன் கீறல் ஏற்படாத தன்மையையும் அது உறுதிப்படுத்துகிறது. பயனர்கள், 200 இற்கும் அதிக கைக்கடிகார முகப்புகளிலிருந்து தெரிவு செய்யும் வசதி காணப்படுவதோடு, தமக்குப் பிடித்த புகைப்படங்கள் மூலம் கைக்கடிகாரத்தின் முகப்பை, தமக்கேற்ற வகையில் மாற்றியமைக்கும் வசதியையும் அது கொண்டுள்ளது. பாரமற்ற இந்த இலகுரக ஸ்மார்ட் கைக்கடிகாரத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, நீர் எதிர்ப்பு அம்சம் காணப்படுகின்றது. இது வெளிச் சூழல் உடற்பயிற்சிகளின்போது மிகவும் உதவும் அம்சமாக காணப்படுகின்றது.

Watch GT 2 Pro கைக்கடிகாரமானது, தனித்துவமான 100 உடற்பயிற்சி அம்சங்களையும், 10 இற்கும் மேற்பட்ட ஓடுவது தொடர்பான கற்கைகளையும் கொண்டுள்ளதோடு, இதயத் துடிப்பு, சராசரி வேகம், உச்சபட்ச சாய்வு போன்ற அளவீடுகளையும் கொண்டுள்ளது. அதன் Golf driving mode பயன்முறை மூலம், பயனர்கள், விளையாட்டின் போது பந்தின் swing (ஸ்விங்) தோரணையை ஆய்வு செய்யலாம் என்பதோடு, ஸ்விங் வேகம் மற்றும் அதன் வீச்சத்தை மேம்படுத்துவற்கான பரிந்துரைகளையும் இதிலிருந்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், குருதியில் ஒட்சிசனின் செறிவு (SpO 2) மற்றும் இதயத் துடிப்பு ஆகியவற்றை 24 மணிநேரமும் கண்காணிக்க முடியும். அத்துடன், Watch GT 2 Pro ஆனது, சிறந்த தூக்கத்தை மேற்கொள்வதற்கான குறிப்புகளை வழங்குவதுடன், பொதுவான தூக்க சிக்கல்களைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. மன அழுத்த கண்காணிப்பு அம்சத்துடன் இது வருவதுடன், மன அழுத்தத்தை குறைப்பதற்கான சுவாசப் பயிற்சி போன்ற பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவுகிறது. GT 2 Route Back அம்சமானது, பயண வழியை பதிவு செய்வதுடன், துல்லியமான பாதை குறிப்பு பதிவிற்காக GPS இனையும் கொண்டுள்ளது. அத்துடன், சமிக்ஞை தொடர்பு வீழ்ச்சியின் போது கூட, பயனர்கள் தாம் ஏற்னவே பதிவு செய்த வழித்தடத்தை பயன்படுத்தி, தாம் செல்ல வேண்டிய வழியை கண்டறிய உதவுகிறது.

Watch GT 2 Pro தொலைதூர இணைப்பு (remote connectivity) வசதியையும் வழங்குகிறது. இதன் மூலம், Bluetooth வழியாக கைக்கடிகாரத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை, கட்டுப்படுத்தவும் முடிகிறது. தமது போனைப் பற்றி கவலையின்றி, பயனர்கள் சுதந்திரமாக உடற்பயிற்சிகளில் ஈடுபட இவ்வசதி வழிவகுக்கிறது. 14 நாட்கள் வரை நீடிக்கும் வகையிலான, ஒரு பெரிய மின்கலத்தை கொண்டுள்ளமையானது, அதன் மதிப்பிற்கு மேலும் பெறுமதி சேர்க்கிறது.

Huawei Nova 7 SE ஆனது, ரூ. 64,999 எனும் விலையிலும், Watch GT 2 Pro ஆனது, ரூ. 54,999 எனும் விலையிலும், அனைத்து Huawei அனுபவ மையங்கள், நாடு முழுவதும் உள்ள சிங்கர் காட்சியறைகள், அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்தும், ஒன்லைனில் Daraz.lk மற்றும் Singer.lk வழியாகவும் ஓடர் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *