Huawei Watch GT2 Pro ஸ்மார்ட் கடிகாரம் 101+ மேற்பட்ட உடற்பயிற்சி செயன்முறைகள் மற்றும் Golf mode உடன் கிடைக்கின்றது

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei நிறுவனத்தின் நவீன முதற்தர ஸ்மார்ட் கடிகாரமே, Huawei Watch GT2 Pro. இந்த நேர்த்தியான தோற்றம் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம், ஆரோக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் அன்றாட செயற்பாடுகள் என வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்தும் பல சிறப்பம்சங்களை வழங்கும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.

Huawei Watch GT2 Pro, slide and touch gesture உடன் கூடிய 1.39 அங்குல AMOLED தொடு திரை, power மற்றும் function பட்டனுடன் வருகின்றது. இதன் பிரதான அமைப்பு டைட்டானியம், முகப்பு பகுதி சப்பயர் கிரிஸ்டலினாலும் ஆக்கப்பட்டுள்ளமையானது இதற்கு எல்லையற்ற அழகை வழங்குகின்றது. Nebula Gray, Night Black ஆகிய நிறங்களில் கிடைப்பதுடன், இதன் நிறை சுமார் 52 கிராம்கள் (பட்டி இன்றி) ஆகும். Huawei Watch GT2 Pro அணிவதற்கு இலகுவானது மட்டுமன்றி நீர் உட்புகவிடாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Huawei Watch GT2 Pro பல வகையான அளவீடுகளை வழங்குவதன் மூலம் ‘அணியக்கூடிய உடற்தகுதி’ தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்றது. ஏறும் முறை, வெளியக ஓட்டம், ரோவிங், சேர்பிங் மற்றும் டென்னிஸ் போன்ற 100க்கும் மேற்பட்ட தனிப்பயனாக்கப்பட்ட “உடற்பயிற்சி முறைகள்” இதில் உள்ளன. இது குரல் வழிகாட்டுதலுடன் கூடிய 10க்கும் மேற்பட்ட ஓட்ட பாடநெறிகளுடன் நிரம்பியுள்ளதுடன், இதனால் மேம்பட்ட பயிற்சிக்கான பரிந்துரைகளையும் வழங்க முடியும்.

GT2 Pro ஸ்மார்ட் கடிகாரமானது இதய துடிப்பு, சராசரி வேகம், அதிகபட்ச சாய்வு மற்றும் பனிச்சறுக்குக்கான தூரம் பற்றிய நிகழ்நேர தரவை வழங்கும் அதேவேளை கணக்கிடப்பட்ட அளவீடுகள் ஏதேனும் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறினால் நினைவூட்டும் வகையில் புத்திசாலித்தனமாக புரோகிரேம் செய்யப்பட்டுள்ளது.

Huawei Watch GT2 Pro, அதன் புதிய Golf Driving Range Modeஇனால் தனிப்பட்ட கோல்ப் பயிற்சியாளராக செயற்படுகின்றது. இயக்க வேகம் மற்றும் மீள்நிலையை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளைப் பெறும் அதேவேளை பாவனையாளர்கள் தமது உடல் வளைவு நிலையைக் கூட பகுப்பாய்வு செய்யலாம். இது அதன் உரிமையாளருக்கு கைதேர்ந்த கோல்ப் வீரராக மாறுவதற்கு பயிற்சியளிக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Watch GT2 Pro தொடர்பில் Huawei Devices, Sri Lankaவின் நாட்டுக்கான தலைமை அதிகாரி பீட்டர் லியூ கருத்து தெரிவிக்கையில், “இன்றைய ஸ்மார்ட் கடிகாரங்களில் பெரும்பாலானவை ஸ்போர்ட்டியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், Huawei Watch GT2 Pro தொழில் சூழலுக்கேற்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும், இது மிகவும் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், பரந்த செயல்பாட்டைக் கொடுப்பதைத் தெரிவு செய்ய 200 க்கும் மேற்பட்ட கடிகார முகப்புகளைக் கொண்டுள்ளது.”

24 மணித்தியாலங்களும் குருதியில் உள்ள ஒக்ஸிஜன் செறிவு (SpO2) அல்லது இதயத் துடிப்பினை துல்லியமாக அளவிடும் போது செயற்கை நுண்ணறிவினால் வலுவூட்டப்படும் இந்த ஸ்மார்ட் கடிகாரமானது வலு நுகர்வினை வினைத்திறனாக குறைக்கின்றது. Huawei TruSleep தொழில்நுட்பத்துடன் கூடிய GT2 ஸ்மார்ட் கடிகாரமானது முழுமையான தூக்கத்திற்கான பரிந்துரைகளை வழங்குவதுடன், பொதுவான வகையான தூக்க சிக்கல்களை விஞ்ஞான பூர்வமாக கண்காணித்து கண்டறிய உதவுகின்றது. Huawei TruRelax தொழில்நுட்பத்தால் ஆதரிக்கப்படும் அதன் அழுத்த கண்காணிப்பு அம்சம், அதிக பணிச்சுமை உள்ள பாவனையாளர்களுக்கு மன அழுத்தத்தை நிர்வகிக்க ஏற்றது, ஏனெனில் இது மன அழுத்த நிலைகளை குறைப்பதற்கு மூச்சு பயிற்சி போன்ற பரிந்துரைகளை வழங்குகிறது. GT2 Route Back அம்சம் பயண வழியைப் பதிவு செய்வது மட்டுமன்றி துல்லியமான நிலை குறிப்பிற்கு GPS இனை பயன்படுத்துகிறது. மேலும், ஒரு சமிக்ஞை குறையும் போது கூட, பாவனையாளர்கள் பதிவுசெய்த வழியைப் பயன்படுத்தி திரும்பி வர முடியும்.

Huawei WatchGT2 Pro இனை கையில் அணிந்திருக்கும் போது பாவனையாளர்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது போனை அப்பால் வைத்திருக்க முடியும். இதன் 4GB நினைவகத் திறனில் 500 பாடல்களை சேமித்து வைத்து போன் அருகில் இல்லாமலேயே கேட்டு ரசிக்க முடியும். இத்தோடு அழைப்பை பெறவும், நிராகரிக்கவும், mute செய்யவும் முடிவதுடன் போனின் bluetooth மூலமாக அழைப்புகளை பரிசோதிக்கவும் முடியும்.

இந்த ஸ்மார்ட் கடிகாரம் Huawei Share இனை ஆதரிக்கிறது, இது பாவனையாளர்கள் இசை மற்றும் புகைப்படங்கள் போன்ற கோப்புகளை பரிமாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. இதனால் அவர்கள் கடிகாரத்தின் முகப்பை பிடித்த புகைப்படங்களுடன் மாற்றிக் கொள்ள முடிவதுடன்,  இசையைக் கூட கேட்கலாம். இதனுள் கட்டமைக்கப்பட்டுள்ள remote shutter அம்சமானது ஸ்மார்ட்போன் பாவனையாளர்கள் போனை படமெடுக்க வேண்டிய பொருளின் முன் வைத்து ஸ்மார்ட் கடிகாரம் மூலமாகவே படம் பிடிக்க வழி செய்கின்றது.

இது  wireless charging  மற்றும் reverse charging சிறப்பம்சங்களைக்  கொண்டுள்ளது. இதனை ஐந்து நிமிடங்கள் wireless quick charge செய்தால் 10 மணித்தியாலமும், முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரையும் பயன்படுத்த முடியும்.

Huawei Watch GT2 Proவினை நாடு முழுவதும் உள்ள Huawei மீள் விற்பனையாளர்கள், Daraz.lk மற்றும் Wow.lk இணையத்தளங்கள் மூலமும் ரூ. 54,999.00 என்ற விலைக்கு பெற்றுக்கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *