பல்வேறு வகையான பால் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து, இலங்கைக்கு பெறுமதியான அந்நியச் செலாவணியைச் சேமிக்க உதவும் பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் பால் தொடர்பான துறையில் வர்த்தக முன்னோடியாக அது செலுத்தும் பங்களிப்பிற்காக அங்கீகாரமளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.
Medicina Alternativa OIUCM (Alma Ata-1909) இன் கூட்டமைப்பு உறுப்பினர்களால், கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற கோலாகல விழாவில், பெல்வத்தை டெய்ரிக்கு 2023 International Business Icon (IBIA) (சர்வதேச வணிக ஐகன் விருது) வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச சுகாதார வல்லுநர்கள், மருத்துவ மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Medicina Alternativa ஆனது, 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொள்கை நோக்கங்களுக்கு இணங்கி, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகின்றது. Medicina ஐரோப்பா சங்கம் மற்றும் Ecumenical Medical Humanitarian Knights of St John ஆகியவற்றின் அனுமதியுடன், பெல்வத்தை டெய்ரி IBIA விருதினால் முடிசூட்டப்பட்டது. Ecumenical Medical Humanitarian Knights of St John ஆனது ஆயிரம் வருட வரலாற்றைக் கொண்ட உலகளாவிய நிறுவனமும், உலகளாவிய வணிக அரங்கில் புதியவர்களையும் நிபுணர்களையும் ஊக்குவிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த விருதை பெறுவதற்கான பரந்த அளவுகோல்களை விளக்கிய Medicina Alternativa, இவ்விருதுகளைப் பெறுபவர்கள் இன்றைய சிறந்த வணிகங்களுக்குப் பின்னால் உள்ள ஆற்றல்மிக்க தலைவர்களாகவும் வலிமை, புத்திக் கூர்மை, அறிவாற்றல், உத்வேகம், தொலைநோக்குப் பார்வையுடன் தங்கள் வணிகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் முன்மாதிரியான நபர்களாகவும் உள்ளனர் எனத் தெரிவித்தது.
பெல்வத்தைக்கு IBIA விருது கிடைத்தமையானது, அதன் நிபுணத்துவம் மற்றும் தொழில்வாண்மையின் ஒரு சுயாதீனமான அங்கீகாரமாகும். அத்துடன், இது இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் உயர் தரம் மற்றும் விசேடத்துவத்தை பேணுவதற்கான பெல்வத்தை நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கான ஒரு சான்றாகும். இந்த விருது பெல்வத்தையின் தயாரிப்பு வகைகளில் காணப்படும் புத்தாக்கமான திறன்களுக்கான ஒரு பாரிய நினைவூட்டலாக விளங்குகின்றது. பெல்வத்தையின் பணியாளர்களே அதன் குடும்பமாகும் என்பதோடு, நிறுவனத்தின் பல்வேறுபட்ட தயாரிப்பு வகைகளில் அதன் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான தங்களது அயராத அர்ப்பணிப்பின் விளைவாக, இவ்வாறான சர்வதேச விருதை நிறுவனம் வென்றுள்ளது. இக்குடும்பத்தின் பலம், புத்திக் கூர்மை, அறிவாற்றல் மற்றும் தொலைநோக்கு ஆகியன, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் பெல்வத்தை வர்த்தக நாமத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இவ்விருது வழங்கும் நிகழ்வானது, ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்ததோடு, அது பெல்வத்தை குடும்பத்திற்கு பெருமையாகவும், சாதித்த உணர்வையும் ஏற்படுத்தியது. சர்வதேச பால் தொழில்துறையினரிடையே ஒரு செய்தியை பரப்பிய இந்த விருது வழங்கும் நிகழ்வு, ஒரு பாரிய உள்ளூர் நுகர்வோர் தளத்தை பெல்வத்தைக்கு ஏற்படுத்தி வைத்துள்ளது. மிக முக்கியமாக, பெல்வத்தை வர்த்தகநாமத்தை தொடர்ந்து ஆதரித்து அதன் மீது நம்பிக்கை வைத்துள்ள, இலங்கையின் தொழில்துறை, வர்த்தக நிறுவனங்கள், நுகர்வோர் உள்ளிட்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பெல்வத்தை இவ்வேளையில் நன்றி தெரிவிக்க விரும்புகிறது.