Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது வழங்கும் விழாவில் DIMO ஆதிக்கம்

சமீபத்தில் நடைபெற்ற Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது வழங்கும் விழாவில், DIMO, பொது விநியோகஸ்தர் பிரிவில், பிராந்தியத்தில் உள்ள ஏனையவர்களை வெற்றி கொண்டு, Mercedes-Benz AG இன் மதிப்புமிக்க “General Distributor Award” விருதை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களின் உச்ச திருப்தி சுட்டெண் மற்றும் நிகர ஊக்குவிப்பாளர் புள்ளிகளைப் பெற்றுள்ளதன் மூலம், DIMO புதிய தரநிலைகளை உருவாக்கியுள்ளதுடன், பிராந்திய சேவையில் சிறந்து விளங்குகிறது. இதன் விளைவாக DIMO பிராந்தியத்தில் உள்ள பொது விநியோகஸ்தர்களுக்கு மத்தியில் சிறந்த சேவைக்கான விருதைப் பெற்றுள்ளது.

Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது வழங்கும் விழாவானது, DIMO வின் Mercedes-Benz சேவை வழங்கலின் மூன்று உறுப்பினர்களான ஹிருண் கோரளகே, அமந்த யாப்பா, ஷஹிந்த வாசலதந்திரிகே ஆகியோரை கௌரவித்து, பிராந்தியத்திலுள்ள “Top Service Advisers of the Year” (ஆண்டின் சிறந்த சேவை ஆலோசகர்களாக) அங்கீகரித்துள்ளது. இவர்கள் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் சேவையில் சிறந்து விளங்கி, தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் தங்களது உயர்ந்த தொழில்துறை ரீதியிலான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதன் மூலம், இந்த இடத்தை அடைந்துள்ளனர்.

DIMO நிறுவனத் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கு DIMO மட்டுமே நம்பகமான இடம் என்பதை எமது தொடர்ச்சியான வெற்றிகள் வெளிப்படுத்துகின்றன. நாம் சேவை செய்யும் பிரிவினரின் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ஊக்கமளிக்கும் எமது நோக்கத்தின் அடிப்படையில், வாடிக்கையாளர்களின் உச்சபட்ச மகிழ்ச்சியை உறுதி செய்வதில் DIMO வின் ஆர்வத்தையும் இது காண்பிக்கிறது. அவர்களின் அன்பான மூன்று புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்திற்கு சிறந்த சேவையை வழங்குவதன் மூலம், எமது குழுவானது தொடர்ந்தும் எமது வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை வழங்க முயற்சிக்கிறது.” என்றார்.

கொவிட்-19 தொற்றுநோய் போன்ற சவாலான காலங்களிலும், ஒப்பிட முடியாத வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருவது தொடர்பான DIMO வின் கவனத்தை இந்த அற்புதமான சாதனை மேலும் வெளிப்படுத்துகிறது. Mercedes-Benz Service Excellence – பிராந்திய விருது விழாக்களில் அது அடைந்துள்ள தொடர்ச்சியான வெற்றியானது, தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சிறந்ததை வழங்குவதற்கான DIMOவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

Mercedes-Benz சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்களால் வழங்கப்படும் அறிவு மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்பப் பயிற்சியானது வாடிக்கையாளருக்கு இனிமையான மற்றும் ஆடம்பரமான பயணத்தை வழங்குவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று DIMO நம்புகிறது. Mercedes-Benz AG இனால் பரிந்துரைக்கப்படும் மென்பொருள், விசேட கருவிகள் மற்றும் உபகரணங்களில் DIMO மேற்கொண்டுள்ள முதலீடுகள், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் சிறந்த தரமான சேவைக்கு உத்தரவாதமளிக்கின்றன.

அனைத்து Mercedes-Benz வாகனங்களுக்குமான நவீன தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களை முழுமையாகக் கொண்டுள்ள, இலங்கையில் Mercedes-Benz AG இனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு சேவை மையம் எனும் வகையில், DIMO 800 இல் பழுதுபார்க்கப்படும் அல்லது சேவை வழங்கப்படும் ஒவ்வொரு Mercedes-Benz வாகனமும் மிகுந்த அக்கறையுடனும் செயல்திறனுடனும் கவனிக்கப்படுவதை DIMO உறுதிசெய்வதுடன், Mercedes-Benz இனால் பரிந்துரைக்கப்பட்டுள்ள அனைத்து பழுதுபார்ப்பு செயல்முறைகளையும், வழிகாட்டல்களையும் அது கடுமையாகப் பின்பற்றுகிறது.

கடந்த எட்டு தசாப்தங்களாக DIMO மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையானது, அதன் வாடிக்கையாளர்களுக்கும் Mercedes-Benz AG போன்ற நிறுவனங்களின் மதிப்புமிக்க கொள்கைகளுக்கும் நிலையான உறுதியை அளிப்பது மட்டுமல்லாது, DIMO ஆனது நம்பகமான மற்றும் நிலையான சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது என்பதற்கும் ஒரு சான்றாகும். அத்துடன் உச்ச தரத்தை பேணுவதே இலங்கையின் Mercedes-Benz இன் உண்மையான கொள்கையாக அமைகின்றது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *