Moistureboost மற்றும் விற்றமின் கலவை மூலம் வலுவூட்டப்படும் வெல்வெட் சவர்க்கார வகைகள் நீண்ட நேர ஈரப்பதனை வழங்குகிறது

சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் இளமை அழகைத் தக்கவைப்பதற்கும் ஈரப்பதம் இன்றியமையாத அம்சமாகும். வெப்பமான மற்றும் வெதுவெதுப்பதமான காலநிலையில் வாழும் இலங்கையர்கள் வருடம் முழுவதும் வெப்பம் மற்றும் சூரிய ஒளிக்கு வெளிப்படுவதால், அவர்களது ​​சருமம் வரட்சியடைவதோடு, ஈரப்பதனும் இழக்கப்படுகின்றது. ​​வானிலை காரணியைத் தவிர, சருமத்தில் உள்ள நீரிழப்பு, உணர்திறன் வாய்ந்த பெண்களின் வெவ்வேறுபட்ட சரும வகைகளும் ஈரப்பதனை பாதிக்கும் காரணிகளாகும். எனவே, ஆரோக்கியமான மற்றும் உரிய அளவில் நீரைக் கொண்ட சருமத்தை பேண, ஈரப்பதனளித்தல் பண்புகளைக் கொண்ட சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாததாகும்.

அனைத்து இலங்கைப் பெண்களுக்கும் சிறந்த பராமரிப்பை பெறுவதற்காக Moistureboost (ஈரப்பதன் அதிகரித்தல்) மற்றும் விற்றமின் கலவை ஆகியவற்றுடன் கூடிய புதிய சவர்க்கார வகைகளை, இலங்கையின் நம்பர் 1 அழகு சவர்க்கார வர்த்தகநாமமான Velvet அறிமுகப்படுத்தியுள்ளது. வெல்வெட்டின் புதிய சவர்க்கார வகைகள், 6 வெவ்வேறு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவை ஈரப்பதமான சருமத்தைத் பேண உதவுவதோடு, ஆறு மணி நேரத்திற்கு சருமத்தில் ஈரப்பதனை தக்கவைத்துக் கொள்வதாக உறுதியளிக்கிறது. இதற்கு, அதிலுள்ள ஈரப்பதனை நீண்ட நேரம் மாறாது வைத்திருக்கும் Moistureboost பண்புக்கே நன்றி கூற வேண்டும். விற்றமின் A மற்றும் E கொண்ட விற்றமின் கலவை சருமத்திற்கு போஷாக்களிப்பதோடு, சரும வரட்சியைக் குறைக்கிறது. வெல்வெட் சவர்க்காரம் ஒரு விசேட ‘Humectant’ (ஈரப்பதனை தக்க வைக்கும் தன்மை) உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது சூழலில் இருந்து நீரை ஈர்ப்பதோடு, ஈரப்பதனின் ஆழமான அடுக்கை ஏற்படுத்துகிறது. இது இயற்கையாக உருவான சோடியம் லக்டேட்டைக் கொண்டுள்ளதனால், சருமத்தில் அதிக நீரைத் தக்கவைக்கும் திறனைக் கொண்டுள்ளதுடன், இதிலுள்ள Sorbitol  மேலதிக ஈரப்பதனையும் வழங்குகின்றது.

அதன் ஒவ்வொரு சவர்க்கார வகையிலும் சேர்க்கப்பட்டுள்ள இரட்டை மூலப்பொருட்கள், சருமத்திற்கு மிகவும் அவசியமான நீரேற்றத்தை வழங்கும் பொருட்டு மிகக் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. வெல்வெட் சவர்க்கார வகைகள், Rose & Dragon Fruit, Milk Extract & Almonds, Sandalwood & Olive Oil, Honey & Yoghurt Extract, Jasmine & Watermelon மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Moringa & Rice Milk உள்ளிட்ட ஆறு அற்புதமான வகைகளில் கிடைக்கின்றன. இந்த 6 சவர்க்கார வகைகளும் இனிய நறுமணங்களை வழங்குவதோடு, அவை அந்தந்த மூலப்பொருட்களுக்கு ஏற்ற வகையில் தனித்துவமான வாசத்துடன் காணப்படுகின்றன. பல்வேறு வண்ண பொதியிடல் கொண்ட புதிய சவர்க்கார உற்பத்திகள் அவற்றை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றது.

வெல்வெட், சிறந்த தரமான சவர்க்கார தயாரிப்புகளை புதுப்பித்தவாறு தொடர்ச்சியாக சந்தைக்கு வெளியிடும் ஒரு வர்த்தக நாமமாகும். இது இலங்கையில் அழகு சவர்க்காரங்களுக்கான சந்தையில் முன்னணியில் திகழ்கின்றது. தனது பயணம் முழுவதும் தனது நுகர்வோருக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளதோடு தனது சருமப் பராமரிப்பு தயாரிப்புகளுக்கு NMRA, GMP, IFRA உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. தற்சமயம் இலங்கையில் சருமப் பயன்பாடு தொடர்பில் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்ட ஒரேயொரு அழகு சவர்க்கார வர்த்தகநாமமாக வெல்வெட் விளங்குகின்றது. அத்துடன், இது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தாது என மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. சவர்க்காரம், பொடி வொஷ், ஹேண்ட் வொஷ், பொடி லோஷன் உள்ளிட்ட பல்வேறு பரந்த தயாரிப்பு வகைகளாக வெல்வெட் வெளிவருகிறது. அனைத்து வெல்வெட் தயாரிப்புகளும் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உரிய பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயங்களைப் பேணியவாறு தயாரிக்கப்படுகின்றன.

ENDS

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *