National Business Excellence விருது நிகழ்வில் முதன்முறை பங்குபற்றிய பெல்வத்தைக்கு Merit விருது!

பல்வேறு பாராட்டுகள் மற்றும் அடைவுகளை கொண்டுள்ள, நாட்டின் மிகவும் விரும்பப்படும் பால் வர்த்தகநாமமான Pelwatte Dairy, இலங்கை சந்தையில் மற்றுமொரு முக்கியமான விருதைப் பெற்றுள்ளது. இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் (NCCSL) இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட, 2021 ஆம் ஆண்டிற்கான National Business Excellence Awards (சிறந்த தேசிய வர்த்தக விருதுகள்) நிகழ்வில் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 22ஆம் திகதி BMICH இல் இவ்விழா நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த மற்றும் கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த பல்வேறு பெநிறுவனங்களின் பங்கேற்புடனும் ஈடுபாட்டுடனும் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 10 வருடங்ளுக்கும் மேலாக நடைபெற்றும் வரும் இவ்விழாவில் பெல்வத்தை பங்கேற்பது இதுவே முதன் முறை என்பதுடன், உணவு மற்றும் பானங்கள் பிரிவின் உற்பத்திப் பிரிவிற்கான சிறப்பு விருதை (Merit Award) நிறுவனம் பெற்றுக் கொண்டது. இவ்விருது இலங்கையில் உள்ள பெருநிறுவனத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகச் சிறப்பு விருதுகளில் ஒன்றாகும். இவ்விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், பெல்வத்தை அதன் பிரிவில் வெற்றியை தனதாக்கியுள்ளது. நிறுவனத்தின் பங்குதாரர்களின் நலன் பேணுதல், தயாரிப்பு மற்றும் சேவையின் தரம், பெறுநிறுவன சமூக பொறுபபு (CSR) உள்ளிட்ட விடயங்கள், இவ்விருதுகளுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளாகும்.

நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் விசுவாசமான வாடிக்கையாளர்கள் மற்றும் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கொண்ட எமது ஊழியர்கள் மற்றும் எம்மை ஒருபோதும் தோல்வியடையச் செய்யாத பால் விநியோக சமூகத்தினர் இல்லாமல் இவ்விருதுகள் எமக்கு கிடைத்திருக்காது. இத்தனை வருடங்களாக எம்முடன் இணைந்திருந்த மற்றும் எதிர்காலத்திலும் எம் மீது நம்பிக்கையுடன் பயணிக்கவுள்ள ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் இவ்விருதை நாம் அர்ப்பணிக்க விரும்புகிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பெல்வத்தை என்பது மக்களின் வர்த்தகநாமமாகும். பண்ணையிலிருந்து விற்பனைக்கு 48 மணித்தியாலங்களில் கொண்டு சேர்ப்பதனை உறுதிப்படுத்தும் குழுவினர் எம்மிடம் உள்ளனர். அவர்களே எமது பயணத்தை முன்னோக்கி செலுத்துபவர்களுமாவர். இந்த அணி, இவ்வளவு தூரம் எம்மை அழைத்து வந்துள்ளமைக்காக நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்பதை வெறும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது. இந்த அணியே எமக்கு பின்னால் நிற்கவுள்ள பெல்வத்தையின் எதிர்காலமாக இருப்பார்கள் என நான் நம்புகிறேன்.” என்றார். கடந்த சில வருடங்களாக அனைத்து நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகியிருந்தது ஆயினும் இக்காலப்பகுதியில், பெல்வத்தை நிறுவன குடும்ப வீரர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் உறுதியாக இருந்தனர். அச்சமயத்தில் நிறுவனத்துடன் இணைந்து பல வழிகளிலும் உறுதுணையாக செயற்பட்ட, பெல்வத்தை குழுவினருக்கு நன்றியை தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பால் உற்பத்தியில் எமது தேசம் தன்னிறைவு பெறும் எனும் பெல்வத்தையின் வாக்குறுதி வெகு தொலைவில் இல்லை. பெல்வத்தை அதன் பால் உற்பத்திகளை 100% உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து பெறுவதன் மூலம் இந்த இலக்கிற்காக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன் பால் பண்ணையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்களிடமிருந்தும் பெறும் மிகச் சிறப்பான ஒத்துழைப்புமே அதற்கான காரணமுமாகும். தற்போது, உர நெருக்கடி உள்ளிட்ட பல சவால்களை விவசாய சமூகம் எதிர்கொண்ட போதிலும், அவர்கள் தங்களாலான சிறந்ததை வழங்குவதற்கான தங்கள் அர்ப்பணிப்பை தளரவிடவில்லை. அவர்களின் ஆதரவு இல்லாமல் இந்த விருது கிடைக்க வாய்ப்பில்லை.

நிறுவனமொன்றின் ஒவ்வொரு அங்கமும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்காமல், சிறந்த வணிக நடைமுறைகளை செயல்படுத்த முடியாது. இவ்விருதானது, பெல்வத்தை ஒரு வர்த்தகநாமமாக அல்லது ஒரு நிறுவனமாக அதன் பங்களிப்பை வழங்கியதற்காக மட்டுமல்லாமல், ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றுபவர்களின் பங்களிப்பிற்கும் அங்கீகாரமாகும். இந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கும், இலங்கைப் பாலை ஒரு தனித்துவமான பொருளாக நிலைநிறுத்துவதற்கும், தரமான, பண்ணையிலிருந்தான புதிய பாலை முழுமையாக உள்ளூர் பால் பண்ணையாளர்களிடமிருந்து பெறுவதே பெல்வத்தையின் நோக்கமாகும்.

சீரான நிலைமைகள் காணப்படாத காலங்கள் காணப்பட்டபோதிலும், பெல்வத்தை அதன் கடமையைச் செய்வதை உறுதி செய்வதோடு, அதன் விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு புதிய தயாரிப்புகளுடன் சேவை செய்வதை உறுதியளிக்கிறது. இவ்விருதுகள் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலான அர்ப்பணிப்பைக் எடுத்துக் காட்டுகின்றன. பண்ணையாளர்கள் சிறந்த வாழ்வாதாரத்தை பெறுவதற்கு ஆதரவளிப்பது முதல், அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரத்தை பேணுவதை உறுதிசெய்வது வரை, பால் உற்பத்திகள் என வரும்போது, பெல்வத்தையானது மக்களின் ஏகோபித்த தெரிவாக இருப்பதை உறுதி செய்வதை அது தொடர்ந்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பெல்வதையின் விசுவாசமான வாடிக்கையாளர்கள் இன்றைய நிலையில் அதன் பெரும் பங்காளிகளாக உள்ளனர். அவர்களின்றி இந்த சாதனையை பெல்வதை அடைந்திருக்க முடியாது என்பது, வெறும் கொள்வனவில் மாத்திரம் பங்கு வகிக்காமல், வர்த்தகநாமம் மற்றும் அதன் நோக்கத்தின் வலுவான இரசிகர்களாக இருந்து, அனைவருக்கும் பயனளிக்கும் சிறந்த வணிக நடைமுறைகளை எளிதாக செயல்படுத்த அவர்கள் உதவியுள்ளனர்.

நெறிமுறைகள், வெளிப்படைத்தன்மை, மக்கள் வர்த்தகநாமம் ஆகிய விடயங்களின் மூலம், அதன் வணிக நடைமுறைகளை எவ்வாறு செயற்படுத்துகிறது என்பது தொடர்பில் ஏனைய அனைத்து பெறுநிறுவனங்களுக்கும் தன்னை ஒரு முன்மாதிரியாக பெல்வத்தை அடையாளப்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில், இறக்குமதிகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கும் நாட்டிற்கும் ஆதரவளிக்கும் அதன் நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க அது எதிர்பார்க்கிறது. ஏனைய அனைத்து உற்பத்தி வர்த்தக நாமங்களும் ‘பெல்வத்தையின் வழியை’ பின்பற்றுமென நிறுவனம் எதிர்பார்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *