NEM Construction நிறுவனம், DIMO விலிருந்து TATA LPK 1618 BLASTER டிப்பர்கள் கொள்வனவு

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO நிறுவனம், TATA வாகனங்களுக்கான ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகவும் உள்ளது. அது சமீபத்தில் NEM Construction (Pvt) Ltd நிறுவனத்திற்கு 30 TATA LPK 1618 4 Cube BLASTER டிப்பர்களை வழங்கியிருந்தது.

NEM Construction (Pvt) Ltd நிறுவனமானது, நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் தொடர்பான உச்ச CIDA தரத்தை (CS-2) கொண்டுள்ள இலங்கையின் முன்னணி சிவில் பொறியியல் ஒப்பந்ததாரர்களில் ஒன்றாகும்.

TATA LPK 1618 BLASTER டிப்பர்கள் 5883cc திறன் கொண்ட Cummins ISBe 5.9 180 40 எஞ்சின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. உச்சபட்சமாக 180 Hp வெளியீட்டை உருவாக்குவதுடன், BS IV புகை வெளியேற்ற தரநிலைகளுக்கு இணங்குகிறது. இது ஸ்மார்ட்டாக வடிவமைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறையையும் கொண்டுள்ளது. செயல்திறன் மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது. பவர் ஸ்டீயரிங் மற்றும் வியப்பூட்டும் 42% தர திறன் ஆகியவற்றை கொண்டுள்ள LPK 1618 BLASTER டிப்பர் ஆனது, எளிதாக கையாளக்கூடிய ஒரு அற்புதமான தெரிவாகும்.

இந்த வாகனங்களை கையளிக்கும் நிகழ்வில், DIMOவின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே கருத்து வெளியிடுகையில், “இந்தியாவில் வர்த்தக வாகனங்களை தயாரிப்பதில் முன்னணியில் உள்ள TATA Motors நிறுவனத்தால், உலகத் தரம் வாய்ந்த LPK 1618 BLASTER டிப்பர்கள்  தயாரிக்கப்படுகின்றன. TATA LPK 1618 BLASTER டிப்பர், அதன் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன், குறைந்தபட்ச பயன்பாட்டு மற்றும் பராமரிப்பு செலவுகளுடன் இலங்கையின் கட்டுமான மற்றும் சுரங்கத் தொழில்களை மீள் வரையறை செய்கின்றது. அத்துடன், புதிய வடிவமைப்பு மற்றும் சொகுசான வசதியளிக்கும் நிலை காரணமாக, சாரதிகளுக்கு சோர்வு ஏற்படுவதை குறைத்து, அனைவரினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது.

DIMO ஆனது, TATA வர்த்தக வாகனங்கள் அனைத்தையும், இலங்கையில் உள்ள உள்ளூர் வாடிக்கையாளர்களினது, போக்குவரத்து தொடர்பான அனைத்து  தேவைகளுக்கும் பொருந்தும் வகையில், DIMO வின் இணையற்ற விற்பனைக்குப் பிந்தைய சேவையின் ஆதரவுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. TATA வர்த்தக வாகன வகைகளில் சிறிய வர்த்தக ட்ரக்குகள் (1 தொன்னுக்கு குறைந்த பாரத்துடன்), சிங்கிள் கெப்கள் (குடும்ப பாவனை மற்றும் பல்வேறு வணிக பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன), இலகுரக வர்த்தக ட்ரக்குகள் (டெக்கின் நீளம் 10 அடி முதல் 20 அடி வரை மாறுபடும்), கனரக வர்த்தக ட்ரக்குகள், கனரக வர்த்தக டிப்பர்கள் முதல் பிரைம் மூவர்ஸ் மற்றும் பஸ்கள் (28 முதல் 54 இருக்கைகள்) ஆகியன அடங்குகின்றன.

TATA Motors India மற்றும் DIMO ஆகியன, 61 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த வலுவான உறவைக் கொண்டுள்ளன. அத்துடன், TATA வர்த்தக வாகனங்களானவை, அதிகளவான இலங்கையர்களின் அன்றாட வாழ்வில் முக்கிய பங்கை வகிக்கின்றன. தனது பிரிவிலுள்ள பெரும்பாலான வாகன வகைகளில் TATA வர்த்தக வாகனங்களே சந்தையில் முன்னணியில் உள்ளன. TATA வின் விற்பனை, சேவை வழங்கல், அசல் உதிரிப் பாகங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக, DIMO – TATA தற்போது 18 இற்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 500 இற்கும் மேற்பட்ட விற்பனை முகவர்களுடன் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றது. அத்துடன் இந்த கூட்டாண்மையானது, DIMO வின் மதிப்புமிக்க TATA வாடிக்கையாளர்களுக்கு அதன் தனித்துவமான 24 மணிநேர வீதி வழி உதவிச் சேவையையும் வழங்குகிறது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *