Neptune Recyclers: நிலைபேறான கழிவு முகாமைத்துவத்திற்கான உலகளாவிய அங்கீகாரம்

அதிக சூழல் விழிப்புணர்வு அவசியமான இந்த சகாப்தத்தில், மிகவும் ஈர்க்கக்கூடிய வகையிலான 99.25% கழிவு மாற்றீட்டு விகிதத்துடன் தொழில்துறை முன்னணி அமைப்பாக Neptune Recyclers திகழ்கின்றது. இந்தச் சாதனையானது Neptune Recyclers அமைப்பை இலங்கையில் ஒரு சூழல் சேவையாளராக நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், Intertek யிடமிருந்து பெறுமதிமிக்க Zero Waste to Landfill (பூமிக்கு பூச்சிய கழிவு) சான்றிதழைப் பெற்ற உலகின் முதலாவதும் ஒரேயொரு கழிவு முகாமைத்துவ நிறுவனமாகவும் உள்ளது.

Intertek இன் சான்றழிப்பு திட்டமானது, Zero Waste to Landfill, Near Zero Waste to Landfill, Advanced Waste Diversion ஆகிய 3 வகைகளில் வழங்கப்படுகிறது. Neptune Recyclers இனது சாதனையானது, மூன்று வருட சான்றழிப்பு காலத்தில் அதன் வலுவான கழிவு முகாமைத்துவ நடைமுறைகளுக்கான நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த முக்கிய சாதனைகளில், Intertek இன் Zero Waste to Landfill சான்றிதழை கொண்டிருக்கும் ஒரேயொரு கழிவு முகாமைத்துவ நிறுவனம் எனும் உலகளாவிய அங்கீகாரம் அடங்குகின்றது. இது ஒரு வரலாற்று ரீதியான தொழில்துறை சாதனையாகவும் அமைகிறது. 99.25% கழிவு சுழற்சி வீதத்துடன் இலங்கையில் முன்னணியில் உள்ள Neptune Recyclers, சூழல் நிலைபேறான தன்மைக்கான அர்ப்பணிப்பை இதன் மூலம் வெளிப்படுத்துகிறது. சூழல் தொடர்பான விசேடத்துவம் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் மூலம், அது தனது முதலாவது சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அத்துடன். தொழில்துறையின் ஒரு முன்னோடி எனும் வகையில், அதன் நிலையை இது மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

Neptune Recyclers அமைப்பின் வெற்றியானது அதன் விரிவான கழிவு முகாமைத்துவ அணுகுமுறையை சார்ந்துள்ளது. கழிவுகளை நிலத்தில் இடுவதற்கான உறுதிப்படுத்தல் தரவு, விற்பனையாளர் உத்தரவாதங்கள், ஆவணப்படுத்தப்பட்ட செயன்முறைகள், பணியாளர் பயிற்சித் திட்டங்கள் ஆகியவற்றை இந்த அணுகுமுறை உள்ளடக்கியுள்ளது. அதன் கழிவு முகாமைத்துவ தகவல் கட்டமைப்பானது, கழிவுகளை அளவிடுவதையும், நாட்டின் உரிய நடைமுறைகளுக்கு இணங்குவதையும் உறுதி செய்கிறது.

அதிகளவான கழிவு மாற்றீட்டு முகாமைத்துவ வீதத்தை அடைந்து அதன் மூலம் Intertek சான்றிதழைப் பெற்றுள்ளமையானது, Neptune Recyclers இன் நிலைபேறான நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கு ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாகவும் அதனை அமைத்துள்ளது.

தொழிற்துறையில் 30 வருடங்களுக்கும் மேலான முன்னோடி எனும் அனுபவத்துடன், இலங்கையின் மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவத் துறையில் புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மையின் கலங்கரை விளக்கமாக Neptune Recyclers திகழ்கின்றது. Ex-pack Corrugated Cartons PLC இன் துணை நிறுவனமும், பெருமைக்குரிய Aberdeen குழுமத்தின் மதிப்பு மிக்க உறுப்பினருமான Neptune Recyclers, சிறந்து விளங்குவதற்கும் சூழலைப் பாதுகாப்பதற்கும் கொண்டுள்ள அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாகும். துணி மற்றும் காகித மீள்சுழற்சியில் நிபுணத்துவம் பெற்ற நாம், நிலைபேறான மற்றும் பொறுப்பான கழிவு முகாமைத்துவ அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் கழிவுகளை பெறுமதியான பொருட்களாக மாற்றுவதன் மூலம் வட்டப் பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறோம்.

இலங்கைக்கு பசுமையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான எமது பணியில் எம்முடன் இணையுங்கள். இங்கு கழிவுகள் வெறுமனே அப்புறப்படுத்தப்படுவதில்லை, மாறாக சாதகமான மாற்றம் மற்றும் சூழல் பாதுகாப்பிற்கான ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகின்றன.

மேலதிக தகவல்களுக்கு: www.neptunerecyclers.com

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *