PropertyGuru ஆசியாவின் ரியல் எஸ்டேட் விருதுகள் (இலங்கை) டிசம்பர் மாத பிராந்திய நிகழ்வின் ஒரு அங்கமான நான்காவது விழா

நாட்டிலுள்ள சிறந்த ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடலாக அமையவுள்ள, ஆசியாவின் மிகவும் தனித்துவமான, பெருமைக்குரிய ரியல் எஸ்டேட் விருதுகள் தொடர்

  • பொதுமக்களின் பரிந்துரைகள் மற்றும் உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் செப்டம்பர் 24, 2021 வரை ஏற்றுக்கொள்ளப்படும்
  • ஜூன் 22 இல் ஒன்லைன் ஊடான ஊடக மாநாடு, தெற்காசியாவில் ரியல் எஸ்டேட் சாதனைகளுக்கு வெகுமதி அளிக்கும் திட்டத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டாடுவதோடு, தொற்றுநோய்களுக்கு மத்தியில் இலங்கை ரியல் எஸ்டேட் சந்தையின் மீள்ளெழுச்சியையும் ஆராய்கிறது
  • இலங்கையின் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் கௌரவமான இந்நிகழ்வு, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளிலும் சிறந்த திட்டங்கள் மற்றும் மேம்படுத்தலுக்குள்ளான நிறுவனங்களை தேடுவதற்காக  மீண்டும் வந்துள்ளது.
  • PropertyGuru வாரத்தின் ஒரு பகுதியான இக்கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விருது வழங்கல், டிசம்பர் 09 ஆம் திகதியளவில் இணைய வழியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இதில் PropertyGuru Asia Real Estate Summit உச்சிமாநாடு மற்றும் PropertyGuru Asia Property Awards Grand Final இறுதி நிகழ்வு ஆகியன இடம்பெறவுள்ளன.

மிகவும் எதிர்பார்ப்பு மிக்க PropertyGuru Asia Property Awards (Sri Lanka) திட்டம் உத்தியோகபூர்வமாக மீண்டும் திரும்பியுள்ளது. நாட்டின் மிகவும் மதிப்புமிக்க ரியல் எஸ்டேட் விருதுகளின் நான்காவது ஆண்டு பதிப்பான இந்நிகழ்வுகள், ஒன்லைன் மூலமான ஊடக மாநாட்டின் மூலம் ஆரம்பமாவதுடன், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சந்தையிலுள்ள வல்லுநர்கள்,  ஆசியா மற்றும் அதனைக் கடந்த ஆலோசனை வழங்குனர்களுடன், எதிர்வரும் ஜூன் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெறுகின்றது.

Paramount Realty இன் பிரதான நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிர்மல் டி சில்வா மற்றும் PropertyGuru Asia Property Awards (Sri Lanka) நிகழ்வுகளின் தலைவரும், நிர்வாக முகாமையாளருமான Jules Kay உடன் இணைந்து, இவ்விருதுகளின் மீள் வருகை மூலம் இலங்கையில் இத்துறையிலுள்ளவர்களை எவ்வாறு மீட்கும் என்பது தொடர்பான முக்கியத்துவத்தைப் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

PropertyGuru Asia Property Awards இனது உத்தியோகபூர்வ சஞ்சிகையான, PropertyGuru Property Report இற்கு, கலாநிதி கலாநிதி நிர்மல் டி சில்வா தெரிவிக்கையில், “எம்மால் கண்காணிக்கப்பட்ட சில திட்டங்கள், சிறந்த முன்னேற்றத்தை காட்டியுள்ளன. ஒவ்வொரு மாதமும் புதிய விற்பனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது, சரியான திசையில் அது நகர்கின்றதைக் காட்டும் அறிகுறிகளாகும்” என்றார்.

இந்த ஒன்லைன் நிகழ்வில் நடுநிலையான நடுவர் குழு உறுப்பினரான, ஆராய்ச்சி புலனாய்வு பிரிவின் (RIU) ஸ்தாபக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரோஷன் மடவெலா, கோவிட் -19 சொத்துத் துறையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து தரவு ஆதரவு அவதானிப்புகளை வழங்கினார் மற்றும் சிறந்த நடைமுறைகளை வழங்கினார் சுகாதார நெருக்கடியை சமாளித்தல்.

புகழ்பெற்றது, தொழில்வாண்மையானது, நம்பகமானது

HLB Sri Lanka நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் Nihal Hettiarachchi & Company, இந்த ஆண்டு 4ஆவது PropertyGuru Asia Property Awards (Sri Lanka) விருதுகளில் உத்தியோகபூர்வ மேற்பார்வையாளராக இணைந்துள்ளதுடன், இந்நிகழ்ச்சியின் நேர்மை, வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மைக்கான நற்பெயரையும் பேணுகின்றது. Nihal Hettiarachchi & Company நிறுவனத்தின் நிர்வாக பங்காளியும், RNH குழும நிறுவனங்களின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான தினுக் ஹெட்டியாராச்சி, சர்வதேச கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனம் சார்பாக, வட்ட மேசை அமர்வில் உரையாற்றினார்.

PropertyGuru Asia Property Awards விருதுகளின் கடந்தகால விருது பெறுநர்களில் ஒருவரான Maga Engineering நிறுவனமும் இந்த இணைய வழி நிகழ்வில் கலந்து கொண்டதோடு, பங்குச் சந்தையில் ரியல் எஸ்டேட் தொடர்பான உள்ளார்ந்த விடயங்களை வழங்கியதோடு, விருதுகள் திட்டத்தின் தொழில்முறை மற்றும் தொலைநோக்கான தாக்கம் தொடர்பிலும்  தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு, நிலையான வளர்ச்சி தொடர்பான விசேட அங்கீகார விருதைப் பெற்ற Maga Engineering நிறுவனத்தின் நிதி மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் மெகா குலரத்ன, கொவிட் தொற்று பரவலைத் தொடர்ந்து அலுவலகங்கள் மற்றும் வர்த்தக இடங்களுக்கான தேவை மற்றும் கட்டட நடைமுறைகளின் நீடித்த தன்மை ஆகியன தொடர்பில் ஆராய்ந்தார்.

இவ்விருதுளுக்கான தங்களது விண்ணப்பங்களை அனுப்ப விரும்பும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் (Property developers and designers) எதிர்வரும் செப்டெம்பர் 24ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் உள்ளீடுகளை AsiaPropertyAwards.com/nominations இற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டப்படுகின்றார்கள். அத்துடன் பொதுமக்களிடமிருந்தும் இது தொடர்பான பரிந்துரைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.

பிராந்தியத்தின் மிகச்சிறந்த ரியல் எஸ்டேட்

பரிந்துரைக்கப்படும் விண்ணப்பதாரர்கள், இவ்வாண்டுக்கான பல்வேறு வகையான பிரிவுகளில் போட்டியிடுவார்கள் என்பதோடு, இதில் இதற்கு முன்னர் வழங்கப்படாத Best Sustainable Developer, Best Breakthrough Developer, Best Lifestyle Developer, Best Commercial Developer, Best Hospitality Developer, Best Industrial Developer, Best Mixed-Use Developer ஆகியவற்றுக்கு மேலதிகமாக Best Residential Development (Maldives), Best Residential Development (Malé) ஆகிய விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

டிசம்பர் 09 ம் திகதி இணைய வழியில் இடம்பெறவுள்ள கண்கவர் நிகழ்வுடனான இவ்விழாவில், வெற்றியாளர்கள் மற்றும் பாராட்டுக்குரிய மேம்பாட்டாளர்கள் மற்றும் திட்டங்கள் ஏனைய நாடுகளின் விருது பெறுபவர்களுடன் இணைந்து கௌரவிக்கப்படவுள்ளனர். இந்நிகழ்வு ஒரே நாளில் AsiaPropertyAwards.com/tv-podcast தளம் ஊடாகவும் Facebook, LinkedIn, Twitter, YouTube ஆகிய தளங்களில் உத்தியோகபூர்வ பக்கங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.

அத்துடன், நாட்டின் மிகச்சிறந்த நுகர்வோர் மற்றும் ரியல் எஸ்டேட் முகவர்கள் உட்பட உலகளாவிய பார்வையாளர்களுக்காக முதன்முறையாக, PropertyGuru Asia Property Awards விருதுகளின் முக்கிய பகுதிகள், உத்தியோகபூர்வ கேபிள் டிவி பங்காளரான History TV அலைவரிசையிலும் ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2021 பதிப்பிற்கான முக்கிய திகதிகள்:

ஜனவரி 01, 2021 – விண்ணப்பங்கள் பெறுவது ஆரம்பம்

செப்டம்பர் 24, 2021 – விண்ணப்ப முடிவு

செப்டம்பர் 27  – ஒக்டோபர் 08 – தள ஆய்வுகள்

ஒக்டோபர் 11, – இறுதி நடுவர் தீர்ப்பு

டிசம்பர் 09, 2021 – இணையவழி நிகழ்வுகள் இரவு உணவு மற்றும் விருது வழங்கும் விழா (இலங்கை பதிப்பு)

டிசம்பர் 09, 2021 – பிராந்திய மாபெரும் இறுதி நிகழ்வு

இலங்கை போட்டியில் இருந்து சிறந்த பிரிவுகளில் நாடளாவிய ரீதியில் வெற்றி பெற்றவர்கள், 16ஆவது PropertyGuru Asia Property Awards மாபெரும் இறுதிப் போட்டியில் பிராந்திய அளவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். பிராந்தியத்தின் மிகச்சிறந்த மேம்பாட்டாளர்கள் மற்றும் திட்டங்களுக்கு “Best in Asia” (“ஆசியாவில் சிறந்தது”) எனும் கௌரவம் வழங்கப்படும். இந்த மாபெரும் இறுதி நிகழ்வும் எதிர்வரும் டிசம்பர் 09ஆம் திகதி இணைய வழியில், கொண்டாட்ட நிகழ்வு மற்றும் விருது வழங்கும் விழாவாகவும் நடைபெறவுள்ளது. PropertyGuru குழுமத்தின் தொழில்நுட்ப மற்றும் சிந்தனைத் தலைமைத்துவ தளமான PropertyGuru Asia Real Estate Summit உச்சி மாநாட்டின் 2021 பதிப்பு, இவ்வருடம் PropertyGuru வாரத்தின் ஒரு பகுதியாக, கொண்டாட்ட நிகழ்வு மற்றும் மாபெரும் இறுதிப்போட்டிக்கு முன்னர் இடம்பெறவுள்ளது.

பிராந்தியத்தின் ரியல் எஸ்டேட் துறையில் “Gold Standard” தர நிலையில் உள்ளதாக புகழப்படும், PropertyGuru Asia Property Awards விருதுகள் தொடரானது, 2005 ஆம் ஆண்டில் ஆரம்பமானதுடன், பல ஆண்டுகளாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வளர்ச்சியடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இடம்பெற்ற, PropertyGuru Asia Property Awards விருதுகளின் மாபெரும் இறுதி நிகழ்வு, முதன்முறையாக இணைய வழி கொண்டாட்ட நிகழ்வை உள்ளடக்கிய விருது விழாவாக இடம்பெற்றதுடன், இது 516,000 தடவைகளுக்கு மேல் பார்வையிடப்பட்டுள்ளது. அத்துடன் உலகளாவிய ரீதியில் 75இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களையும் சொத்து முதலீட்டாளர்களையும் சென்றடைந்தது. 2020 விருதுகள் தொடரில், PropertyGuru Asia Property Awards (இந்தியா) வின் முதல் பதிப்பும் இடம்பெற்றிருந்தது. இது தெற்காசியா முழுவதும் இத்திட்டத்தின் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் கோடிட்டு காட்டுகிறது.

14ஆவது PropertyGuru Asia Property Awards விருதுகளின் மாபெரும் இறுதி நிகழ்வில் The One Transworks Square (Pvt) Ltd நிறுவனம் அதன் சாதனை படைத்த வானளாவிய திட்டமான, The One இற்கு, Best Mixed Use Development (Asia) விருது வழங்கி கௌரவிக்கப்ட்டது.

PropertyGuru Asia Property Awards விருதுகளின் படப்பிடிப்பு மற்றும் ஒளிபரப்பு நிகழ்வுகள், கொவிட்-19 கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றி சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெறவுள்ளன.

தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான PropertyGuru குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4ஆவது PropertyGuru Asia Property Awards விருதுகள் (Sri Lanka) நிகழ்வின் உத்தியோகபூர்வ கேபிள் டிவி பங்காளராக History Channel திகழ்வதுடன், தொழில்துறையின் முன்னணி தரக்குறியீடுகளின் ஆதரவுடன் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ பத்திரிகை Daily FT, உத்தியோகபூர்வ சஞ்சிகை PropertyGuru Property Report, உத்தியோகபூர்வ பொதுமக்கள் தொடர்பு கூட்டாளர் PR Wire Consultancy, உத்தியோகபூர்வ தொண்டு பங்காளர் Right To Play, உத்தியோகபூர்வ ESG கூட்டாளர் Baan Dek Foundation, உதவியாளர் Ceylon Institute of Builders, மற்றும் உத்தியோகபூர்வ மேற்பார்வையாளராக HLB Sri Lanka ஆகியனவும் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கின்றன.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, email: awards@propertyguru.com, அதன் உத்தியோகபூர்வ இணையத்தளம் : AsiaPropertyAwards.com.

– முற்றும் –

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *