S-lon நிறுவனத்தின் பிளாஸ்டிக் குழாய் சோதனை ஆய்வுகூடத்திற்கு தற்போது ISO 17025 சான்றிதழ்

S-lon Lanka தனியார் நிறுவனமானது, அதன் Mechanical Quality Assurance (QA) ஆய்வகத்தின் பிளாஸ்டிக் குழாய் சோதனைக்கு இலங்கை அங்கீகாரச் சபையின் (SLAB) ISO 17025 தரநிலை அங்கீகாரம் மூலம் அண்மையில் சான்றளிக்கப்பட்டது. தொழில்துறைக்கு முதன் முதலில் பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தி தனது பயணத்தை S-lon தொடருகின்றது. அந்த வகையில் S-lon QA ஆய்வகமானது, பிளாஸ்டிக் குழாய் சோதனைக்கான சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் ஆய்வகத்தின் திறனை கொண்ட அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதலாவதும் ஒரேயொரு ஆய்வுகூடமாக இது விளங்குகின்றது.

இந்த சமீபத்திய சாதனை குறித்து கெபிடல் மஹாராஜா குழுமத்தின் குழும பணிப்பாளர் / பிரதான செயற்பாட்டு அதிகாரி, எஸ்.சி. வீரசேகர அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கடந்த 65 ஆண்டுகளாக நாம் எமது வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த தரத்திலான பொருட்களை வழங்கி வந்துள்ளதன் மூலம் சிறந்த இடத்தை வகிக்கிறோம். அத்துடன் எமது நிறுவன நெறிமுறைகளுக்கு இணங்க, எமது சொந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் எமது பொருட்கள் நுகரப்படும் வரை சந்தையில் எமது எந்தவொரு தயாரிப்புகளையும் நாம் வழங்குவதில்லை. இணையற்ற வாடிக்கையாளர் சேவையுடன் உயர்தர தயாரிப்புகளை வழங்குவது, வாடிக்கையாளர்களிடையே எமது வர்த்தகநாமத்தை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லுமென நாம் நம்புகிறோம். அத்துடன், பல ஆண்டுகளாக எம் மீது வாடிக்ககாயளர்கள் வைத்துள்ள நம்பிக்கையை நாம் மதிக்கிறோம்.” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தச் சாதனையானது, மேற்படி தத்துவத்திற்கும், எமது பயணம் முழுவதும் நாம் பேணி வந்த உயர் தரத்திற்கும் சான்றாக விளங்குகின்றது. இந்த அங்கீகாரமானது, எமது விநியோகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏனைய விநியோகஸ்தர்கள் தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த தொழில்துறையின் தரமும் உயர்வதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. சந்தையில் தலைமைத்துவத்தை வகிப்பதன் மூலம், நிறுவனத்தினுள் காணப்படும் நிபுணத்துவ அறிவு மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் நிலைபேறான உறவுகளை கட்டியெழுப்பவும், தொழில்துறையில் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதற்கு நாம் தொடர்ந்து எமது அர்ப்பணிப்பை மேலோங்கச் செய்கிறோம்.” என்றார்.

ISO 17025:2017 சான்றிதழ் ஆனது, ஒரு சர்வதேச தரத்தை குறிக்கின்றது. இது ஆய்வு கூடங்களின் திறன், பாரபட்சமற்ற தன்மை, சீரான செயல்பாட்டிற்கான பொதுவான தேவைப்பாடுகளைக் குறிப்பிடுகிறது. இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து, S-lon Lanka தனியார் நிறுவனம், தற்போது வெளி தரப்பினருக்கும் தனது சோதனைச் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன், தொழில்துறையின் ஏனைய விநியோகஸ்தர்களுக்கு பாதுகாப்பான, உயர்தர தயாரிப்புகளை சர்வதேச தரத்திற்கு ஏற்ப ஏற்றுமதிச் சந்தைக்கு வழங்குவதற்கும் அது ஆதரவளிக்கும். இலங்கையானது, உயர்தர தேயிலை மற்றும் கறுவா ஏற்றுமதிக்கு பெயர் பெற்றுள்ளது என்பதுடன், S-lon Lanka நிறுவனத்தின் சோதனை வசதிகள் மூலம், பல்வேறு உள்ளூர் கைத்தொழில்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் தயாரிப்புகளை அதிக ஏற்றுமதியை பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்த முடியும். இவ்வசதிக்கான சான்றிதழானது வெளிநாட்டுச் சந்தைகளுக்கு மேலும் அதிக ஏற்றுமதிகளை ஏற்படுத்தும் என்பதுடன், இது தற்போது மிகவும் அவசியமாக உள்ள அந்நியச் செலாவணியை உருவாக்குவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பாரிய பயனை வழங்கும்.

சோதனைத் தேவைகள் தொடர்பான விசாரணைகளுக்கு, 037-4 699 100 எனும் இலக்கம் மூலம், S-lon Lanka தனியார் நிறுவனத்தின் Quality Assurance பிரிவை தொடர்பு கொள்ளலாம். நாட்டிற்கு சிறந்ததை வழங்குவதற்கான பயணத்தில் உறுதியாக நம்பிக்கை கொண்டு, நிறுவனம் தனது சோதனைச் சேவைகளை, குழாய் உற்பத்தியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் போன்ற தனியார் மற்றும் அரச நிறுவனங்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *