SLDA சான்றிதழின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் க்ளோகார்ட், பற்குழி அற்ற தேசத்தின் வெற்றியாளர்

Hemas Consumer Brands இன் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்ளோகார்ட் (Clogard), இலங்கை பல்மருத்துவ சங்கத்தின் (SLDA) தொடர்ச்சியான 25ஆவது வருட அங்கீகாரத்தை கொண்டுள்ளமையை பெருமையுடன் அறிவிக்கிறது. கடந்த கால் நூற்றாண்டாக நீடித்து வரும் அசைக்க முடியாத கூட்டாண்மையுடன், வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், புத்தாக்கமான திட்டங்கள் மூலம் பற்குழி அற்ற தேசம் தொடர்பான அதன் தூரநோக்கை உணர்த்துவதற்கும் க்ளோகார்ட் உறுதியுடன் செயற்பட்டு வருகின்றது.

க்ளோகார்ட் நீண்ட காலமாக கொண்டுள்ள SLDA சான்றிதழானது, வாய்ச் சுகாதாரத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதில் அதன் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக அமைகின்றது.

க்ளோகார்ட் பல ஆண்டுகளாக SLDA உடன் தீவிரமாக ஒத்துழைத்து வருவதன் மூலம், வாய்ச் சுகாதார விழிப்புணர்வு மற்றும் பல் பராமரிப்பு நடைமுறைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகிறது. இந்த தொடர்ச்சியான கூட்டாண்மையானது, சிறந்த வாய்ச் சுகாதாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்குக் தெளிவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள க்ளோகார்டிற்கு வழி வகுத்துள்ளது.

SLS சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதலாவது வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமாக திகழ்வதன் மூலம், க்ளோகார்டின் சிறப்பான அர்ப்பணிப்பு மேலும் எடுத்துக் காட்டப்படுகிறது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் க்ளோகார்ட் பெற்றுக் கொண்ட இந்த அங்கீகாரம், அதன் நுகர்வோருக்கு சிறந்த தரமான தயாரிப்பை வழங்குவதில் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான க்ளோகார்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கு கிராம்பு எண்ணெய் மற்றும் பல்மிளிரியை வலுப்படுத்துவதற்காக செயற்பாட்டில் உள்ள புளோரைட் ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்குவதன் மூலம், க்ளோகார்ட் அறிமுப்படுத்திய ‘இரட்டைச் செயற்பாடு’ (Dual Action) அம்சமானது, இவ்வர்த்தகநாமத்தை ஏனையவற்றிலிருந்து தனித்துவமாக்குகிறது. இதன் விளைவாக வலுவான மற்றும் ஆரோக்கியமான பற்கள் கிடைக்கிறது. இந்த புத்தாக்கமான அணுகுமுறையானது, வாய்ச் சுகாதாரத்தை பேணுவது தொடர்பான பல்வேறு விடயங்களுக்கு உதவும் விரிவான வாய்ச் சுகாதார தீர்வுகளை வழங்குவதில் க்ளோகார்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

க்ளோகார்டைத் தெரிவு செய்வதன் மூலம், நுகர்வோர் தங்கள் வாய்ச் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதோடு மட்டுமல்லாமல், பற்குழியிலிருந்து உச்ச பாதுகாப்பை வழங்குவதன் மூலம் பற்குழி இல்லாத தேசத்தை உருவாக்கும் இவ்வர்த்தகநாமத்தின் தூரநோக்கிற்கு உயர்ந்த பங்களிப்பை வழங்குகிறார்கள் எனலாம். SLDA உடனான தனது கூட்டாண்மையை க்ளோகார்ட் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதால், வாய்ச் சுகாதார பராமரிப்பு ஆராய்ச்சியை மேம்படுத்துதல், புத்தாக்கமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், வாய்ச் சுகாதாரத்தை பேணுவதற்கான அணுகுமுறையை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுப்பதில் இவ்வர்த்தகநாமம் உறுதியாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *