SMIB அதன் புதிய CEO நியமனத்தை அறிவித்துள்ளது

90 வருட வரலாற்றைக் கொண்ட இலங்கையின் முன்னணி அரச வங்கியான அரச ஈட்டு முதலீட்டு வங்கி (SMIB), அனுபவம் வாய்ந்த வங்கியாளரான துஷார அசுரமான்னவை, ஜூலை 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அதன் புதிய பிரதான நிறைவேற்று அதிகாரியாக (CEO) நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

SMIB இன் CEO ஆக நியமிக்கப்படுவதற்கு முன்னர் துஷார அசுரமான்ன, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் (NTB) வணிகக் கடன் முகாமைத்துவ பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். 1999ஆம் ஆண்டு தேசிய அபிவிருத்தி வங்கியில் (NDB) தனது வங்கிப் பணியை ஆரம்பித்த அசுரமான்ன 2011 வரை SME & Retail வணிகப் பிரிவுகளுடன் இணைந்து பல்வேறு மட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். 2011 இல் NTB இல் இணைந்த அவர், அதன் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ துறையில் சிரேஷ்ட முகாமைத்துவம், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் Retail Credit Risk ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்தினார்.

SMIB இன் தலைவர் கலாநிதி உதயஸ்ரீ காரியவசம் இந்நியமனம் தொடர்பில் தெரிவிக்கையில், “SMIB இலங்கையர்களின் வீட்டுக் கனவுகளை நிறைவேற்றும் ஒரு முக்கிய பங்காளியாகும். SMIB தனியார் துறையில் உள்ள வங்கிகளுக்கு இணையான போட்டித்தன்மை கொண்ட ஒரு வங்கியாக மாறுவதை காண நாம் பாடுபட்டு வருகிறோம். இதை அடைவதற்கு, வங்கியின் செயற்பாட்டுச் சூழல் திறமையாக இருப்பது இன்றியமையாததாகும். வீட்டு வசதி தொடர்பான கடனளிப்பது தொடக்கம் ஏனைய வணிக விடயங்களுக்காக எமது தற்போதைய அடைவுகளை மிகவும் வேகமாக விரிவுபடுத்துவது முக்கியமாக காணப்படுகின்றது. எமது விரிவாக்கத்தில் SME களின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, பல்வேறு தொழில்துறைகளில் SME களை வலுப்படுத்த, செலவு குறைந்த நிதி தெரிவுகள், ஆலோசனை சேவைகளை உள்ளடக்கிய நிதியுதவி உத்தியை நாம் பின்பற்றுகிறோம். புதிய பிரதான நிறைவேற்று அதிகாரியாக துஷார அசுரமான்ன நியமனம் பெற்றிருப்பதானது, எமது வங்கியின் SME வெளிப்பாட்டை கணிசமாக வலுப்படுத்துமென நாம் எதிர்பார்க்கிறோம். புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதோடு, தற்போதுள்ள தயாரிப்புகளை SME களுக்கு மூலோபாய ரீதியாக பல்வகைப்படுத்துவதன் மூலம் வங்கியையும் இவ்வணிகத்தையும் துஷார அசுரமான்னவினால் அடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியுமென நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

புதிய பிரதான நிறைவேற்று அதிகாரி துஷார அசுரமான்ன தனது நியமனம் தொடர்பில் தெரிவிக்கையில், “வீட்டுக் கடன் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் வங்கியாளராக இருக்கும் SMIB, SME துறையில் உள்ள வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு அதனை கண்டறியத் தயாராக உள்ளது. வங்கியின் முக்கிய திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், SMIB இற்கு தனியார் துறையின் பண்புகள் மற்றும் அறிவை அறிமுகம் செய்து, அதன் பணிச்சூழலை உற்பத்தித்திறன் அதிகரிப்பைக் கொண்டதாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். இவை அனைத்தும் இலங்கையின் SME கள் கடந்த சில காலமாக எதிர்பார்த்து நிற்கின்ற SME வங்கிச் சேவைகளின் தொகுப்பை வழங்குவதற்கு பங்களிப்புச் செய்யும்.” என்றார்.

புதிய பிரதான நிறைவேற்று அதிகாரி துஷார அசுரமான்ன, Institute of Bankers in Sri Lanka (IBSL) நிறுவனத்தில் இணைந்திருந்த வேளையில், பல வங்கியாளர்களுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு நிதித்துறை தொடர்பான தனது அனுபவத்தையும் அறிவையும் பகிர்ந்து, அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றார். அத்துடன் 22 வருட SME & Retail Banking நிபுணத்துவத்தைக் கொண்ட அவர், கடன் முகாமைத்துவம், கடன் இடர் முகாமைத்துவம், இலாப மைய முகாமைத்துவம், கிளைச் செயல்பாடுகளில் அனுபவத்தை கொண்டுள்ளார்.

துஷார அசுரமான்ன மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் முதற் தரப் பட்டத்தையும், Post Graduate Institute of Management நிறுவனத்தில் வணிக நிர்வாக முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அவர் இங்கிலாந்தின் Associate Member of the Chartered Institute of Management Accountants (ACMA) நிறுவனத்தின் இணை உறுப்பினராகவும், Chartered Global Management Accountants (CGMA) உறுப்பினராகவும் உள்ளார். துஷார அசுரமான்ன, இங்கிலாந்தின் Institute of Engineering Technology யின் (MIET) உறுப்பினராகவும், இலங்கையின் Institute of Engineers, Sri Lanka (IESL) வின் இணை உறுப்பினராகவும் உள்ளார். அவர் Frankfurt School of Finance & Management யில் SME நிதியியலில் சான்றளிக்கப்பட்ட நிபுணராகவும் விளங்குகிறார்.

End

Image caption:

  • இடமிருந்து வலமாக: SMIB இன் தலைவர் கலாநிதி உதயஸ்ரீ காரியவசம் மற்றும் SMIB இன் CEO துஷார அசுரமான்ன
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *