Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகும் SLARDAR மற்றும் AMRC

Sri Lanka Association of Racing Drivers & Riders (SLARDAR) ஆனது, Asian Motor Racing Club (AMRC) உடன் இணைந்து, அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ‘Sri Lanka Super Series 2024’ தொடரை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. Sri Lanka Super Series 2024 தொடரை அறிவிக்கும் நிகழ்வு பெப்ரவரி 22 ஆம் திகதி கொழும்பு 14, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள DIMO 800 இல் இடம்பெற்றது.

நிகழ்வின் முதன்மை அனுசரணையாளரான Nippon Paints இன் தலைமையில், Maxxis Tyres, Prima Kottumee, Ozone Water, Sri Lanka Insurance, ESDEE Battery உள்ளிட்ட மதிப்பிற்குரிய பங்காளிகளுடன் இணைந்து SLARDAR சங்மானது, அதிர வைக்கும் Sri Lanka Super Series 2024 தொடருக்கு தயாராகி வருகிறது. கடந்த வருடம் Sri Lanka Super Series 2023 இல், MX Motocross மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் லஹிரு ஜீவந்த மற்றும் SLGT வீரர் உஷான் பெரேரா ஆகியோர் முறையே சம்பியன் ரைடர் பட்டத்தையும் வருடத்தின் சிறந்த சாரதி பட்டத்தையும் வென்றனர். அதன் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் 2024 தொடர் இடம்பெறவுள்ளது.

SLARDAR 2023 ஆம் தொடரில், கிரியுல்ல, நல்லவில் அமைந்துள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய, Mahameruwa Motorsports Arena அரங்கை SLARDAR அறிமுகப்படுத்தியிருந்தமையானது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக அமைந்திருந்தது. இந்த சிறப்பு மிக்க போட்டி அரங்கானது, கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகிய இரண்டிற்குமான, உலகத் தரம் வாய்ந்த பந்தயப் பாதைகளைக் கொண்டுள்ளன. அத்துடன், உணவகப் பகுதி, நீச்சல் தடாகம், பயிற்சி அறைகள், தங்குமிட வசதிகள், ATV Track, 4×4 Challenge Track உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் உள்ளடங்குகின்றமை விசேட அம்சமாகும். SLARDAR சங்கத்தின் Nippon Paint Mahameruwa Motorsports Arena அரங்கானது, ஒரு முதன்மையான பந்தய தளமாக மட்டுமல்லாமல், சோதனை மைதானமாகவும், Driver மற்றும் Rider பயிற்சிக்கான தளமாகவும், நாடு முழுவதும் மோட்டார் பந்தய கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துவதற்கான தளமாகவும் அமைகிறது.

இந்நிகழ்வை மேலும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கத்துடன், Sri Lanka Super Series 2024 தொடரின் கீழ் பல்வேறு தொடர் நிகழ்வுகளை SLARDAR ஏற்பாடு செய்துள்ளது. Mahameruwa Rally Cross முதல் Single Tree Hill Climb & Lake Cross, Cavalry Supercross, Mahameruwa Auto Cross, Katukurunda Circuit Meet ஆகிய நிகழ்வுகளையும், டிசம்பரில் Sri Lanka Super Series 2024 Awards Night and Dinner Dance பிரபல நிகழ்வையும் அது ஏற்பாடு செய்துள்ளதன் மூலம், ஆர்வலர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு இவ்வருடம் முழுவதும் சிறந்த நிகழ்வுகளை முன்னெடுக்கவுள்ளது.

மதிப்பிற்குரிய அனுசரணையாளர்களாக Nippon Paints, Maxxis Tyres, Prima Kottumee, ESDEE Battery, Ozone Water, Sri Lanka Insurance ஆகியன விளங்குவதோடு, 2024 தொடரில் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கி, நாடு முழுவதும் மோட்டார் வாகன பந்தயம் மீதான உற்சாகத்தையும் ஆர்வத்தையும் உச்ச நிலைக்கு கொண்டு செல்ல SLARDAR தயாராகி வருகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *