The Palace Gampaha முன்னணி திட்டத்திற்காக Prime Residencies உடன் இணைந்த Orel Corporation

இலங்கையின் முன்னணி மின்னுபகரண உற்பத்தியாளரான Orel Corporation, நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Residencies உடன் ஒரு மூலோபாய கூட்டாண்மையை அமைத்துள்ளதாக, பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை தொடர்பான கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது. இந்த புத்தாக்கமான படியானது, Orel Corporation நிறுவனத்தை வெளிப்புற மின்சுற்று தொகுதிகளுக்கு பொறுப்பான முதன்மை பங்களிப்பாளராக அமைக்கிறது.

ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட 5 கண்டங்களில் இயங்கி வரும் Orel Corporation, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் உள்ளூர் (குடியிருப்பு) மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கான மின் சாதனங்கள்/ துணை உபகரணங்களை வடிவமைத்து உற்பத்தி செய்வதில் நான்கு தசாப்தங்களாக நிபுணத்துவம் பெற்றுள்ளது. அது மாத்திரமன்றி, EM2 பிரிவில் (வடிவமைப்பு, ஆலோசனை, பொருட்கள் விநியோகம், விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவைகள்) வடிவமைப்பிலிருந்து விநியோகம் வரையான வாடிக்கையாளர் தீர்வுகளை Orel Corporation மேற்கொள்கிறது.

இந்த கூட்டாண்மையானது, Orel Corporation இன் நம்பிக்கையின் நற்பெயரை அடிப்படையாகக் கொண்டதாகும் என்பதோடு, இது Altair, Lux Resort (Maldives), Access Capital Heights, ITUM, Defense HQ மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 606 The Address போன்ற முக்கிய மைல்கல் திட்டங்களுக்கு அவர்களது சிறந்த பங்களிப்புக்கான எடுத்துக்காட்டாகும். இதன் மூலம் கட்டங்களுக்கான சக்தியை வழங்கும் மின்சார பின்புலத்தை அவர்கள் வழங்குகிறார்கள்.

Orel Corporation இன் Turnkey Projects இன் உதவிப் பொது முகாமையாளர் பிரமுதித குருசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில், “உட்கட்டமைப்பு அபிவிருத்தித் துறையை மீள்வரையறை செய்யும் வகையில் இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group உடன் இணைவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது முன்னாயத்த சேவை திட்டங்களில் (Turnkey Projects) ஒரு மிகப்பெரிய மைல்கல் இதுவாகும். இந்த மூலோபாய கூட்டாண்மை மூலம், வலுவான மின்சார உட்கட்டமைப்பை நாங்கள் ஏற்படுத்துகிறோம், கட்டட நிர்மாணத்தில் Prime Residencies கொண்டுள்ள உயர்ந்த நிபுணத்துவத்தினால் வலுவூட்டப்பட்டு, பிரகாசமிக்க மற்றும் இணைப்பைக் கொண்ட நாளைய எதிர்காலத்திற்கான பாதையை அமைப்பதற்கான எமது உறுதிப்பாட்டை இது காண்பிக்கிறது.

இந்த கூட்டாண்மை குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்ட, Prime Lands Residencies PLC பெருநிறுவன விவகாரங்களுக்கான பணிப்பாளர் நலிந்த ஹீனடிகல, “The Palace Gampaha இற்கான பிரத்தியேக முதலீட்டு வாய்ப்பை எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். எமது சிறந்த கட்டணத் திட்டம், முதன்மையானது என்பதோடு, இலங்கையில் அவ்வாறான ஒன்று இதுவே முதன் முறையாகும். இதன் மூலம் எமது முதலீட்டாளர்களுக்கு ஆடம்பரமான மற்றும் அடையக்கூடிய வாழ்க்கை முறையை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இலங்கையில் ரியல் எஸ்டேட் முதலீட்டில் புரட்சியை ஏற்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளதோடு, எமது வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மற்றும் இணையற்ற அனுபவத்தை வழங்குவதை நாம் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்றார்.

இத்தொழில்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த செழுமையான பாரம்பரியத்துடன் Prime Residencies ஆனது, ஒருமைப்பாடு, அர்ப்பணிப்பு, அக்கறை ஆகியவற்றின் அடிப்படையில் வீடுகளையும் சமூகங்களையும் தொடர்ச்சியாக உருவாக்கி வருகிறது. Orel Corporation உடனான ஒத்துழைப்பானது, வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன, தரமான தீர்வுகளை வழங்குவதற்கான அவர்களது அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இதன் மூலம் சொகுசான வாழ்க்கையை மட்டுமல்லாது, தேசத்திற்கான செழிப்பான சமூகத்தை உருவாக்குவதையும் அது உறுதி செய்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *