‘’Together 2020 Warm Action’’ ஊடாக இறுதி பயனர்களுக்கு உதவும் Huawei

ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவையின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உரிய நேர சேவை வழங்கல்கள்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Huawei, அண்மையில் அறிமுகப்படுத்திய ’’Together 2020 Warm Action’’ என்ற தொனிப்பொருளில் அமைந்த பிரசாரமானது 2020 மார்ச் 17 ஆம் திகதி ஆரம்பமாகியதுடன், 2020 மே மாதம் 31 வரை தொடரவுள்ளது. விற்பனைக்குப் பின்னரான சேவைகள், இலவச உத்தரவாத நீட்டிப்பு, அஞ்சல் மூலமான இலவச பழுதுபார்த்தல் சேவை மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளின் உதிரிப் பாகங்களுக்கான 20% கழிவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம், இத் துயரமான சூழ்நிலையில் தொல்லைகள் ஏதும் இல்லாத ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு சேவைகளை வழங்க Huawei எதிர்பார்க்கின்றது. இந்த பிரசாரத்துக்கு முன்னதாக, Huawei தனது “Support App” இனை மீள் அறிமுகம் செய்தது. இது பல பயனுள்ள தொலைநிலை பழுதுபார்க்கும் சேவைகளைக் கொண்ட Smart Diagnosis tool கருவி மூலம் ஒன்லைன் ஊடான சிக்கல்களை உடனடியாக சரிசெய்வதற்கான முழுமையான தீர்வாகும்.

தற்போதைய அசௌகரியங்களுக்கு எதிரான நடவடிக்கைக்கான அழைப்பு, இந்த முக்கிய சேவைகள் மற்றும் சலுகைகள் ஆகியன, இந்த முக்கியமான நேரத்தில் Huawei சேவை நிலையங்களுக்குச் செல்ல முடியாமல் வீட்டில் உள்ள இறுதி பயனர்களுக்கு உதவும் பொருட்டு வழங்கப்படுகின்றன. Huawei இன் அதிகாரபூர்வ உள்நாட்டு விற்பனை மூலங்களின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கான இலவச உத்தரவாத நீட்டிப்பானது, சாதனத்தின் உத்தரவாதம் காலாவதியாகும் முன் அல்லது அருகிலுள்ள சேவை நிலையங்கள் மூடப்பட்டால், இறுதி பயனர்கள் வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு செல்ல முடியாது போகலாம் என்பதைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். 2020 மார்ச்  17 முதல்  2020 மே 30 வரையான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாதனங்களின் உத்தரவாதங்கள் 2020 மே 31 வரை நீட்டிக்கப்படும் என்பதை அறிவிப்பதில் Huawei மகிழ்ச்சியடைகின்றது.

“எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை பழுது பார்க்கும் போது முகங்கொடுக்கும் அசௌகரியங்களை நாம் புரிந்து கொண்டுள்ளோம். எனவே, எங்கள் வாடிக்கையாளர்கள் நாங்கள் அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டுமென எதிர்பார்க்கும்போது, ​​எங்கள் சேவை மேன்மையை பேணுவதற்கு பழுதுபார்ப்பு சேவைகளின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய விரிவான தீர்வுகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் அறிமுகப்படுத்திய முக்கிய சேவைகள் மற்றும் சலுகைகளால் எந்தவொரு அசௌகரியத்தையும் எதிர்கொள்ள முடியுமென்பதுடன், இந்த கடினமான சூழ்நிலையிலும் பழுதுபார்ப்பு சேவைகளை திறம்பட முன்னெடுக்க உதவும்,” என Huawei Devices Sri Lanka – உள்நாட்டு தலைமை அதிகாரியான பீட்டர் லியு  தெரிவித்தார்.

இந்த முடக்கல் நிலையின் பின்னர் இந் நேரத்துக்கு ஏற்ற முயற்சியாக, தற்போது இறுதி பயனர்கள் அஞ்சல் பழுதுபார்ப்பு சேவைக்கு நாடு பூராகவும் உள்ள தெரிவு செய்யப்பட்ட சேகரிப்பு மையங்களின் ஊடாக விண்ணப்பிக்க முடியும். சாதனங்களை சேகரிப்பு மையங்களிலிருந்து பழுதுபார்ப்புக்காக எடுப்பித்து, பழுது பார்த்து, விரைவு அஞ்சல் சேவை ஊடாக அவற்றை மீள ஒப்படைக்கும் ஏற்பாட்டை செய்வதில் Huawei மகிழ்ச்சியடைவதுடன், லொஜிஸ்டிக் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. சேவை நிலையங்களுக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இல்லையென்பதால், இறுதிப் பயனர்களுக்கு இதுவொரு பாரிய நிவாரணமாகும்.

Huawei தெரிவு செய்யப்பட்ட மாதிரிகளுக்கான உதிரிப் பாகங்களுக்கு 20% கழிவை வழங்குகின்றமையானது உத்தரவாதத்துக்கு அப்பால் சாதனங்களை பழுதுபார்க்க வேண்டிய தேவையுடைய பாவனையாளர்களுக்கு மேலும் நிவாரணத்தை வழங்குகின்றது. இதன் கீழ், சேதமான திரை அல்லது திரவங்களால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் முக்கிய பழுதுபார்ப்புகள் போன்ற ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்புகளுக்கான பணத்தை மீதப்படுத்த முடியும். இந்த நாட்களில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட அஞ்சல் பழுதுபார்ப்பு சேவையைப் பயன்படுத்த Huawei அனைவரையும் ஊக்குவிக்கிறது.

Huawei சேவை மையங்களால் எந்தவொரு பரிசோதனையும் தேவைப்படாத ஸ்மார்ட்போன் தொடர்பான சிறிய சிக்கல்களை சரிசெய்யும் திறன் கொண்ட Huawei Support App இன் நன்மைகளையும் Huawei வலியுறுத்துகிறது. இதன் Smart Diagnosis கருவியானது, மென்பொருள், வன்பொருள் சிக்கல்கள் ஆகியவற்றுடன் சிறிய சிக்கல்களான திரை சேதம், சார்ஜிங் மற்றும் மின் நுகர்வு, சிஸ்டம் செயலிழப்புகள், கெமரா சிக்கல்கள், அப்ளிகேஷன் தவறுகள், இணைப்பு சிக்கல்களை அடையாளம் கண்டு தானாகவே திருத்துகின்றது. பயனர்கள் தற்போது Support App > Services > Smart Diagnosis > TEST NOW மூலமாக இச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். Huawei Support App துரித தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட live chat சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் பழுதுபார்ப்பு தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் Huawei சேவை நிபுணர்களை நாள் முழுவதும் தொடர்புகொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *