ஆடம்பர சொகுசுடன் வடிவமைக்கப்பட்ட ஸ்டைலான Shirtworks  சூட்கள் அறிமுகம் – தனித்துவமான தையல் கலை மிக்க ஆடவர் ஆடைகள்

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald, அதன் SWX பம்பலப்பிட்டி காட்சியறையை மீண்டும் திறந்து வைத்துள்ளதோடு, அதன் புகழ்பெற்ற Shirtworks வர்த்தகநாமத்தில் Bespoke சூட் தெரிவுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் ஒப்பிட முடியாத, ஸ்டைலான தெரிவுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த அற்புதமான மேம்படுத்தலானது, உயர் தரம் மற்றும் தனித்துவமான நேர்த்தியைத் தேடுகின்ற விவேகமுள்ள ஆண்களுக்கு உயர் அனுபவத்தை உறுதியளிக்கிறது.

Emerald இன் விற்பனைப் பிரிவான Shirtworks (SWX) நீண்ட காலமாக நவீனத்துவ ஆடவர்களுக்கான புகலிடமாக இருந்து வருகிறது. Class One, ED Array, Leonardo போன்ற சர்வதேச வர்த்தகாநாமங்களின் உயர்தர தெரிவுகளை அது வழங்குகிறது. அதன் பாராட்டைப் பெற்ற “Bespoke” பிரிவானது, மிகச்சிறந்த துணிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வடிவமைப்புகள் மூலம் இந்த அனுபவத்தை மேலும் உயர்த்துகின்றது.

அதன் மீள் திறப்பு மற்றும் புதிய வெளியீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த Emerald International முகாமைத்துவ பணிப்பாளர் அஹமட் இக்ராம், “மீள் வடிவமைப்பு செய்யப்பட்ட SWX பம்பலப்பிட்டி காட்சியறையானது, ஆடவருக்கான ஆடம்பரமான ஆடைகளின் கொள்வனவை மீள்வரையறை செய்கிறது. சமகால சூழலுக்கு ஏற்ற, தனிப்பயனாக்கப்பட்ட சேவையுடன், தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட Bespoke சூட் தெரிவுகள் போன்ற சமீபத்திய வெளியீடுகளை கொள்வனவு செய்வதற்கான சிறந்த பின்னணியுடன் இக்காட்சியறை வடிவமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

இலங்கையின் காலநிலைக்கு ஏற்ற வகையில் நிபுணத்துவ ரீதியாக வடிவமைக்கப்பட்ட Tuxedo சூட்கள், அலுவலக ஆடைகள், பிளேசர்கள், ஜக்கெட்டுகளின் தனித்துவமான தெரிவுகளை JAKAMEN வழங்குகிறது. ஒவ்வொரு ஆடையும் ஆடம்பரமான 100% கம்பளி அல்லது கம்பளி கலந்த துணிகள் மூலம் தனித்துவம் பெறுகின்றன. குறிப்பாக அவற்றின் இறுக்கமற்ற உணர்வுடனான, வசதியான அம்சத்திற்காக அவை பெயர் பெறுகின்றன. இந்த ஆடைத் தெரிவுகளின் தரமானது வழக்கமான ஆடைகளைப் போலன்றி, வருடம் முழுவதும் நேர்த்தியாக இருப்பதை உறுதி செய்வதோடு, சிறந்த பொருத்தத்தையும், நவநாகரீக பாணியையும் கொண்டமைந்த பல்வகை மாதிரிகளை வழங்குகின்றன. இவை, ரூ. 40,000 முதல் ரூ. 100,000 வரையிலான விலையில் அமைந்துள்ளன.

அஹமட் இக்ராம் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், “Emerald எனும் வகையில், நாம் செய்யும் அனைத்து விடயங்களிலும் உயர் தரமே அடிப்படை அம்சமாக விளங்குகின்றது. மிகவும் துல்லியமாக வடிவமைக்கப்பட்ட சூட்கள், நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, நேர்த்தியான பாணியையும், அப்பழுக்கற்ற கைவினைத்திறனையும் எதிர்பார்க்கின்ற, நவீன ஆடவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.” என்றார்.

SWX பம்பலப்பிட்டி காட்சியறையின் மீள் திறப்பானது, ஆடம்பர ஆடவர் ஆடைகளின் உலகில் ஒரு ஆழமான பயணத்தை உறுதியளிக்கிறது. Shirtworks இன் Bespoke சூட் தெரிவுகளின் வெளியீட்டுடன், நிபுணத்துவ வடிவமைப்பாளர்களின் தனித்துவமான ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். பல்வேறுபட்ட துணிகள், நவநாகரீக பாணிகள், நிபுணத்துவம் வாய்ந்த தையல் கலை மூலம், ஒவ்வொரு விவேகமான ஆடவருக்கும் பொருத்தமான ஆடைகள் இங்கு காத்திருக்கின்றன.

மீள் வடிவமைக்கப்பட்ட SWX பம்பலப்பிட்டி காட்சியறையின் அனுபவத்தை பெறவும், Shirtsworks இன் Bespoke சூட் தெரிவுகளுடன் தனிப்பயனாக்கப்பட்ட ஆடவர் ஆடைகளின் கலையம்சங்களைக் காணவும், Emerald உங்களை அன்புடன் அழைக்கிறது. தூய, நேர்த்தியான உலகிற்குள் நுழைந்து, உங்கள் ஒவ்வொரு விருப்பத்திற்கும் ஏற்ற கைவினைத் திறன் கொண்ட ஆடைகள் மூலம் உங்கள் அலுமாரிகளை மேம்படுத்துங்கள்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *