இதமளிக்கும் நற்குணத்துடன் கூடிய ‘Nil Manel’ மூலம் தனது floral தயாரிப்பு வரிசையை விரிவாக்கும் Baby Cheramy

இலங்கையின் முதல் தர குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான Baby Cheramy, அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் பராமரிப்பு உற்பத்திகளை வழங்கி, 60 வருடங்களைக் கொண்டாடுகிறது. இந்த வர்த்தகநாமம், எப்போதும் உயர் தரம் மற்றும் உங்கள் குழந்தையின் மென்மையான சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது. பேபி செரமி, தனது நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளுடன் நெருக்கமான இணைப்பைக் கொண்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்மையில் ‘நில் மானெல் புளோரல் பேபி கிறீம் (Nil Manel Floral Baby Cream) மற்றும் சோப் ஆகிய இரண்டு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த இரண்டு அறிமுக தயாரிப்புகளும் இயற்கையான நீலத் தாமரை சாறு மற்றும் பால் ஆகியவற்றின் நன்மையுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. அவை சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், சருமத்தின் ஈரப்பதனை தக்கவைக்கவும், உங்கள் குழந்தையின் சருமத்தை இதமாக பேணவும் உதவுகின்றன. அவை உங்கள் குழந்தைக்கு ஏற்றதாக, சர்வதேச நறுமண சங்கத்தின் (IFRA) தரங்களுக்கு இணங்க தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தாய் கருத்தரித்த தருணத்திலிருந்து, பெற்றோர்கள் தங்கள் விலைமதிப்பற்ற மகிழ்ச்சியின் பொருட்டு அனைத்து விடயங்களிலும் சிறந்ததை அக்குழந்தைக்கு வழங்க விரும்புகிறார்கள். தங்கள் குழந்தைக்குப் பயன்படுத்துவதற்காக, பாதுகாப்பான மற்றும் சிறந்த தரமான தயாரிப்புகளுக்கான அவர்களின் தேடலுக்கமைய, ஆரோக்கியமான தோற்றத்தை கொண்ட சருமத்திற்கு அவசியமான ஈரப்பதனை கொண்டுள்ள தயாரிப்புகளை பெரும்பாலும் தாய் தேடுகின்றார். Nil Manel Floral Baby Cream மற்றும் சவர்க்காரம் ஆகியன சருமத்தின் ஈரப்பதனைத் தக்கவைக்க உதவுகின்றன. முக்கியமாக நமது நாட்டின் வெப்ப காலநிலை காரணமாக சருமம் விரைவாக வறண்டு போக வாய்ப்புள்ளது. ஆயினும் இதிலுள்ள மேலதிக குளிரூட்டும் பண்புகள் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு இதமான உணர்வை வழங்குகின்றன.

புதிய Nil Manel Floral Baby Cream மற்றும் சவர்க்காரம் ஆகிய இரண்டும் பாதுகாப்பான கலவையினால் உருவாக்கப்பட்டுள்ளன. இது பாதுகாப்புக்காக, தோல் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டது என்பதால், சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தாதது. பரபின்கள், பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் போர்மல்டிஹைட் ஆகியன  அற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பேபி செரமி, 6 தசாப்தங்களாக தலைமுறை தலைமுறையாக பெற்றோரின் இதயங்களையும் நம்பிக்கையையும் வென்றுள்ளது. அனைத்து குழந்தை பராமரிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்புத் தரங்களுடன் தயாரிக்கப்பட்ட முழுமையான தயாரிப்பு வகைகளை அது வழங்கி வருகிறது. அதன் பரந்த தயாரிப்புகளில் Baby Soap,  Baby Cologne, Cream and Lotion, Laundry Wash Powder and Liquid, Bottle Wash, Cotton Buds,  Diapers, Nappy Rash Cream உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகள் உள்ளடங்குகின்றன. இவை அனைத்தும் உங்கள் குழந்தையின் சருமத்திற்கு அதிக பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் உறுதி செய்கின்றன.

மேலதிக தகவலுக்கு, www.babycheramy.lk/ ஊடாக Baby Cheramy இணையத்தளத்தைப் பார்வையிடவும் அல்லது https://www.facebook.com/BabyCheramy/ இல் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

END 

Hemas Consumer Brands பற்றி

வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு பொருட்களை உற்பத்தி செய்யும் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட வர்த்தக நாமங்கள் மற்றும் முற்போக்கான பேண்தகைமை நடைமுறைகள் மூலம் நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வாழ்க்கைக்கு கொண்டு வர முயற்சிக்கிறது. வளர்ச்சியை நோக்காகக் கொண்ட புத்தாக்க சிந்தனையுடன் கூடிய குழுக்களால் வழங்கப்படும் உள்நாட்டின் நுண்ணறிவுகளை வெளிப்படுத்தி, சந்தையில் முன்னணியில் திகழும் சிறந்த மற்றும் விருது பெற்ற தயாரிப்புகளை உருவாக்குவதற்காக அவர்கள் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர். அவர்கள் அர்த்தமுள்ள தயாரிப்புகளை உருவாக்கி, நம்பகமான பங்குடமைகளை ஏற்படுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முழுமையான உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *