இலங்கையின் எதிர்கால டிஜிட்டல்மயமாக்கம், நுண்ணறிவு, கார்பன் நடுநிலையாக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் Digital Lanka, Green Tech, Huawei Digital Congress

Digital Lanka, Green Tech Huawei Digital Congress மாநாடானது டிஜிட்டல் மாற்றம் தொடர்பான நீண்ட கால பயணத்தின் இயக்கம் மற்றும் இலங்கை ICT சூழல் தொகுதியில் ஆழ்ந்த ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. தொழில்துறைகள், நிறுவனங்கள் மற்றும் ICT துறையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தின் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய இம்மாநாட்டில் ஒன்றிணைந்திருந்தனர்.

இந்நிகழ்வில், நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான Huawei யின் நீண்டகால பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை Huawei சுட்டிக்காட்டியது. ‘டிஜிட்டல்மயமாக்கல், நுண்ணறிவு, குறைந்த கார்பன்’ ஆகியன தொழில்துறைகள் மற்றும் சமூகம் ஆகியன முன்னோக்கி செல்வதற்கு வழிவகுக்கும் பாதை என Huawei நம்புகிறது. அத்துடன், இம்மூன்று முக்கிய விடயங்களின் போக்குகளுக்கு ஏற்றவாறு பல்வேறு வணிகப் பிரிவுகளை நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. தொலைத்தொடர்பு வலையமைப்பு வணிகங்கள், நிறுவனங்களுக்கான தீர்வுகள், ஸ்மார்ட் சாதனங்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான கவனத்தை Huawei செலுத்துவதோடு, இலங்கையின் நிலைபேண்தகு வளர்ச்சியை இலக்காகக் கொண்டு டிஜிட்டல் வலு மற்றும் கிளவுட் சேவைகளை அது நாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

5G, AI, IoT, AR, VR ஆகியவற்றின் சமீபத்திய தொழில்நுட்பங்களுடன் இணைந்தவாறு Huawei அதன் சமீபத்திய தீர்வுகளை இங்கு இடம்பெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. 5G சுற்றுலா, துறைமுக டிஜிட்டல் மயமாக்கல், ஸ்மார்ட் விவசாயம் போன்ற பல்வேறு வணிக ரீதியான பிரிவுகள், தொழில்நுட்பங்களை அங்கீகரித்துள்ளன. இவ்வாறான சூழ்நிலைக்கு ஏற்றவாறு, தொழில்துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்கான ஒரு பயணப்பாதையை Huawei உருவாக்கியுள்ளதுடன், எதிர்வரவுள்ள 5G தொழில்நுட்பங்களுக்கான சாத்தியக்கூறுகளையும் அது ஆராய்ந்து வருகின்றது.

பயணம் மற்றும் போக்குவரத்து வணிகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக, இந்த டிஜிட்டல் மாநாட்டில் DilanGo Taxi உடன் இணைந்து Huawei ஒரு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இங்கு இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் பயண அனுபவத்தை வேகமாகவும், சிறந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றுவதற்காக ஒத்துழைப்புடன் செயற்படும். அதே போன்று, Mercantile Cricket Association மற்றும் Sports Intel உடன் அனுசரணை ஒப்பந்தத்தில் Huawei இணைந்துள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டின் டிஜிட்டல் மேம்பாட்டின் பொருட்டு, பாரிய தரவுகள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் வசதியை Huawei மேம்படுத்தும்.

“இலங்கையில் விருத்தியடையுங்கள், இலங்கைக்கு பங்களிப்புச் செய்யுங்கள்.” Huawei டிஜிட்டல் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட தொழில்நுட்பம் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு, வணிகங்களை மேலும் அறிவார்ந்ததாக மாற்றி, அனைத்திலும் உள்ளடக்கப்பட்ட சமூகத்தை உருவாக்கும். தனது கூட்டாளர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுடன் Huawei தொடர்ந்தும் இணைந்து செயற்படும்.

Photo captions

மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *