இலங்கையின் தனது 4ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாட விசேட நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரத்தை முன்னெடுக்கும் vivo

முன்னணி உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இலங்கையில் தனது 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதன் முக்கிய ஒன்லைன் பங்குதாரர்களான BuyAbans.com மற்றும் Singhagiri  ஊடாக விசேட நுகர்வோர் ஊக்குவிப்பு பிரசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 28 முதல் நவம்பர் 7, 2021 வரையிலான இந்த ஊக்குவிப்புக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு இந்த வர்த்தகநாமமானது உற்சாகமான பரிசுகளை வழங்குகின்றது.

இந்த ஊக்குவிப்பு பிரசார காலத்தில் Y1s, Y12s, Y20, Y20s, Y53s, V21e மற்றும் V21 5G போன்ற தெரிவு செய்யப்பட்ட vivo V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்தால், வாடிக்கையாளர்கள் ஒன்லைன் தளங்கள் வழியாக அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். vivo டி-ஷர்ட்கள் மற்றும் இயர்போன்களை BuyAbans.com  வழங்குவது மட்டுமல்லாமல் முன்னணி கடனட்டைகள் மூலம் 48 மாதங்கள் வரை 0% வட்டியுடன் தவணைகளில் பணம் செலுத்த அனுமதிக்கிறது. vivo டி-ஷர்ட்கள் மற்றும் இயர்போன்களுடன், Singhagiri வாடிக்கையாளர்களுக்கு புளூடூத் ஸ்பீக்கர்களையும் வழங்குகின்றது. மேலும், முன்னணி கடனட்டைகளை பயன்படுத்தி, சிக்கல் இல்லாத 36 மாதங்கள் வரையான 0% வட்டி தவணைக் கொடுப்பனவு திட்டங்களையும் வழங்குகிறது.

இது தொடர்பில் vivo Sri Lanka வின் பணிப்பாளர் எலிசன் ஜின் கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, மேலும் vivo இன் முக்கியமான சந்தையான இலங்கையில் நான்கு வருட காலத்தை நிறைவு செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். புதுமை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு, vivo தனது வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு தருணத்திலும் சிறந்த தொழில்நுட்பங்களை வழங்க முயற்சிக்கிறது. சரியான விடயங்களைச் சரியான வழியில் செய்யும் பென்ஃபென் தத்துவத்திற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம், இதனால் எங்கள் வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கி சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். கடந்த ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்ற அனைத்து அன்பு மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்காக நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் இந்த சிறப்பு ஊக்குவிப்புப் பிரசாரம் அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வழியாகும். இந்த பிரசாரத்தை சாத்தியமாக்குவதற்கு ஆதரவளித்த எங்கள் மதிப்புமிக்க ஒன்லைன் பங்காளர்களான BuyAbans மற்றும் Singhagiri ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்,” என்றார்.

மேலதிக விபரங்கள் vivo Sri Lankaவின் உத்தியோகபூர்வ Facebook page, www.buyabans.com  மற்றும் www.singhagiri.lk ஆகியவற்றில் கிடைக்கின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *