இலங்கையின் நம்பகமான பொடுகு எதிர்ப்பு ஷாம்பு வர்த்தகநாமமான Dandex தற்போது மேம்படுத்தப்பட்டு புதிய தோற்றத்தில்

அழகான, ஆரோக்கியமான கூந்தலானது ஒருவரின் உருவத்தையும் ஆளுமையையும் மேம்படுத்துகிறது. எனவே கூந்தலை சிறப்பாக பராமரிப்பது எமது அன்றாட செயற்பாடுகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான கூந்தலைக் கொண்டிருப்பது எமது தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, சமூகத்துடன் நன்றாகப் பழகுவதற்கான வாய்ப்பையும் எமக்கு ஏற்படுத்துகிறது. இப்போதெல்லாம், பலர் பொடுகுத் தொல்லைக்கு ஆளாவதால், இப்பிரச்சினை காரணமாக, அவர்களால் சமூகத்துடன் எளிதில் பழக முடியவதில்லை. குறிப்பாக இளைஞர் சமுதாயத்தினருக்கு பணி உள்ளிட்ட அன்றாட நடவடிக்கைகளின்போது, மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சினையாக பொடுகுத் தொல்லை அமைந்துள்ளது. தோளில் பொடுகு உதிர்ந்திருப்பதன் காரணமாக, மற்றவர்கள் நாம் சுத்தமாக இல்லை என்று நினைத்தல், எமது வசதிக்கேற்ற, விருப்பமான வகையில் கூந்தலை அழகுபடுத்த ​முடியாமை போன்றவை ஆண், பெண் இருபாலரின் தன்னம்பிக்கையை பாதிக்கிறது. சுமார் 50% ஆன மக்கள் இவ்வாறு பொடுகுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுகின்றனர். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவும், ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும், கூந்தலுக்கு சிறந்த போசணையை அளிக்கின்றதும் பொடுகுத் தொல்லையைக் குறைக்கும் உற்பத்தியை பயன்படுத்துவது அவசியமாகும். 2022 ஆம் ஆண்டில் தனது 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் Dandex ஷாம்பு, இலங்கை மக்களின் கூந்தல் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கி, பல தசாப்தங்களாக இலங்கை நுகர்வோரின் நம்பிக்கையை வென்றுள்ள ஒரு வர்த்தகநாமம் என குறிப்பிடலாம்.

1992 ஆம் ஆண்டில், Hemas Consumer Brands இனால் மருத்துவ குணம் கொண்ட ஷாம்பு தயாரிப்பாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட Dandex ஷாம்பு, பொடுகுப் பிரச்சினைக்கான விசேட ஷாம்பு தயாரிப்பாக இலங்கை நுகர்வோர் மத்தியில் மிகப் பிரபலமாகியுள்ளது. 30 வருட நம்பகமான வரலாற்றைக் கொண்டுள்ள Dandex, இன்றளவில் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட பொடுகு எதிர்ப்பு ஷாம்பு வகைகளான Dandex Cooling + Relief, Dandex Hair Fall Control, Dandex Deep Clean + Nourish Shampoo போன்ற தயாரிப்புகளைக் கொண்டுள்ளது. இளைஞர்களிடையே காணப்படும் பொடுகு மற்றும் உச்சந்தலை உலர்தல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் இதன் காரணமான சமூக சூழலில் எதிர்கொள்ளும் ஏனைய பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, Dandex இந்த புதிய அறிமுகங்கள் மூலம் அவற்றுக்கான தீர்வுகளை வழங்குகிறது. குறிப்பாக முதல் பயன்பாட்டிலேயே இது பொடுகை நீக்கும் எனும் நம்பிக்கையையும், பயன்பாட்டிற்குப் பின்னர் ஒரு புதிய புத்துணர்ச்சி மிக்க உணர்வையும் இது அளிக்கிறது.

அது தவிர ‘Dandex யின் Head & Hair’ ஆனது Dandex குடும்பத்தில் புதிதாக இணைந்துள்ளது. உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Head & Hair தயாரிப்பு, பொடுகை திறம்பட நீக்கி மிருதுவான மற்றும் மென்மையான கூந்தலை வழங்குவதற்காக விசேடமாக  தயாரிக்கப்பட்டுள்ளது. Dandex Head & hair புதிய தயாரிப்புகள் Power Moisture,  Strong & Nourish,  Healthy & Fresh ஆகிய வகைகளாக இலங்கைப் பெண்களுக்கு ஏற்றவாறும் அவர்களின் கூந்தல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குவதற்குமாக மிக கவனமாக தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும், Dandex Head & Hair 2 in 1 ஆனது, குறிப்பாக பொடுகிற்கு தனியான தயாரிப்பு, மிருதுவான கூந்தலுக்கு தனியான தயாரிப்பு என இருவகையான ஷாம்புகளை கொள்வனவு செய்ய வேண்டிய பெண்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான நிபுணராக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல தலைமுறைகளின் நம்பிக்கையுடன், இலங்கைச் சந்தையில் தனது இடத்தை நிலைநிறுத்தியுள்ள Dandex ஷாம்புவை 100% உள்ளூர் தயாரிப்பாக குறிப்பிட முடியும். Dandex உச்சந்தலையில் ஈரப்பதனைப் பேணி, ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலுக்கு அவசியமான போசணைகளை வழங்குவதன் மூலம் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. அத்துடன், பொடுகுத் தொல்லை பிரச்சினைகளைக்கு தீர்வை வழங்கி, கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு போசணையை வழங்குவதன் மூலம் பொடுகை போக்க உதவுகிறது. Dandex யின் இந்த தனித்துவமான போசணைப் பராமரிப்பு, பொடுகுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் தலையை சுதந்திரமாக முன்னோக்கி பயணிக்கு உதவுகிறது. இலங்கையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஒவ்வொருவருக்கும் பொருத்தமான, ஆண், பெண் பாகுபாடின்றி பயன்படுத்தக் கூடிய, இளைஞர்களின் நம்பிக்கையையும் ஈர்ப்பையும் பெற்றுள்ள ஒரேயொரு ஷாம்பு வர்த்தகநாமமான Dandex, இலங்கையின் நுகர்வோரின் தேவைகளை நன்கு அறிந்து, பல்வேறு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *