இலங்கையின் நம்பர் 1, மிகப்பெரும் ஒன்லைன் சந்தையான Daraz உடன் இணைந்து இப்பண்டிகையில் அற்புதமான பரிசுகளை வழங்கும் vivo

 உலகளாவிய ஸ்மார்ட்போன் துறையில் முன்னணியில் உள்ள  vivo, Daraz இன் எதிர்வரும் 12.12 மாபெரும் மலிவு விற்பனை தொடர்பில் அறிவித்துள்ளது. இவ்வருடம் மூன்றாவது முறையாக Daraz உடனான கூட்டாண்மையின் தொடர்ச்சியாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு vivo மீண்டும் வெகுமதிகளை வழங்க உள்ளது. vivo வினது பரவலாக விரும்பப்படும் V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யும் அதன் வாடிக்கையாளர்களுக்கு விசேட வெகுமதிகளை வழங்குவதன் மூலம், இந்த பண்டிகை மாதத்தை இன்னும் துடிப்பானதாக மாற்ற vivo விரும்புகிறது. இலங்கையில் உள்ள வாடிக்கையாளர்கள் நிச்சயமாக இந்த மாபெரும் மலிவு விற்பனை மற்றும் வெகுமதிகைள விரும்புவார்கள் என்பதுடன், இது இந்த வருடத்தை மிக சிறப்பாக நிறைவு செய்ய வழிவகுக்கும்.

இந்த கூட்டாண்மையின் கீழ், டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18 வரை இடம்பெறும் Daraz Grand கிறிஸ்மஸ் மலிவு விற்பனையை vivo மற்றும் Daraz இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றன. இவ்விற்பனையின் போது, ​​DarazMall இல் உள்ள vivo Flagship Store இல் இருந்து வாடிக்கையாளர்கள் Vivo தயாரிப்புகளை கொள்வனவு செய்யும் போது Earbuds, Earphones மற்றும் vivo டி-சேட்டுகள் அடங்கிய விசேட பரிசுகளை பெற முடியும்.

Daraz 12.12 மலிவு விற்பனையின் போது, ​​வாடிக்கையாளர்கள் 44MP OIS Night Selfie System உடன் வருகின்ற V21 5G போன்ற பரந்த அளவிலான சில கண்கவர் vivo ஸ்மார்ட்போன்களை கொள்வனவு செய்யலாம். அத்துடன், V21 5G ஆனது, Selfie Spotlight, இரவு நேர உச்ச தெளிவுடனான செல்பி அனுபவத்தை வழங்கும் AI Night Algorithm உடனான AI Night Portrait போன்ற புத்தாக்க கண்டுபிடிப்பு அம்சங்களையும் இது உள்ளடக்கியுள்ளது. Y1s, Y12s, Y20, Y20s போன்ற பரந்த அளவிலான Y தொடர் ஸ்மார்ட்போன்களில் இருந்தும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை தெரிவு செய்யலாம். vivo Y1s ஆனது, சிறந்த பார்வை அனுபவத்திற்காக 6.22 அங்குல Halo FullView திரையை கொண்டுள்ளது. vivo Y12s ஆனது, நீண்ட நேர பயனர் அனுபவத்திற்காக 3GB RAM உடன் 5,000mAh மின்கலத்தை கொண்டுள்ளது. vivo Y20 ஆனது 6.51 அங்குல Halo FullView திரை மற்றும் 13MP பிரதான கெமரா, 2MP Bokeh கெமரா மற்றும் 2MP Super Macro கெமராவுடன் வருகிறது. அத்துடன் vivo Y20s ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் G80 Gaming Processor உடன் வருகிறது. vivo இன் புகழ்பெற்ற மற்றும் இளமை எண்ணத்துடன் கூடிய V மற்றும் Y தொடர் ஸ்மார்ட்போன்கள் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் வருகின்றன.

உள்ளூர் கொள்வனவாளர்களுக்கு அவர்களது கொள்வனவு அனுபவத்தை மேலும் மேம்படுத்த, vivo இலவச ஷிப்பிங் மற்றும் முன்னணி கடனட்டைகளுக்கான எளிய முறையிலான பணம் செலுத்தும் திட்டங்களையும் வழங்குகிறது. vivo ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்யவும், கொண்டாட்டத்தில் ஈடுபடவும் இதுவே சிறந்த வாய்ப்பாகும். இச்சலுகைகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு, https://click.daraz.lk/e/_7E4qH இல் Daraz Mall இற்கு சென்று vivo Flagship Store இனைப் பார்வையிடவும் அல்லது vivo Sri Lanka எனும் அதன் Facebook பக்கத்தைப் பார்வையிடவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *