இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களை வலுப்படுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன் SINOPEC X சீரிஸ் மோட்டார் சைக்கிள் உராய்வுநீக்கி எண்ணெய் வகைகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் செயல்திறனுக்கு புத்துயிருட்டும் வாக்குறுதியுடன் Interocean Lubricants Pvt Ltd, அண்மையில் இலங்கைக்கு புதிய SINOPEC மோட்டார் சைக்கிள் உராய்வு நீக்கி எண்ணெய்களை அறிமுகப்படுத்தியது.
SINOPEC இன் இந்த அதிநவீன தொழில்நுட்ப உராய்வுநீக்கி எண்ணெய் இலங்கை முழுவதும் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு சவாரி அனுபவத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தவுள்ளது. இறுதிநிலை மற்றும் பொதி செய்யப்பட்ட தயாரிப்புகளாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் SINOPEC X சீரிஸ் உராய்வுநீக்கி எண்ணெய் வகைகள் தரமுயர்ந்த உராய்வு நீக்கி வகைகளாகப் உலகப் புகழ்பெற்றவை.
Interocean Lubricants இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஜெயசாந்த தொட்டஹேவகே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “Interocean Lubricants” இலங்கையில் உள்ள துடிப்புமிக்க மோட்டார் சைக்கிள் சமூகத்திற்கு புதிய SINOPEC உராய்வுநீக்கி எண்ணெய் வகைகளை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு அவர்களின் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை அதிகரித்து பாதை முழுவதும் மேம்படுத்திய சக்தியையும் நீடித்த தன்மையையும் வழங்கும். நிகரற்ற உராய்வுநீக்கித் தீர்வுகளை வழங்குவதே எமது நோக்கமாகும்.
இலங்கையின் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களின் குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு சினோபெக் மோட்டார் சைக்கிள் உராய்வுநீக்கி எண்ணெய் வகைகள் சமீபத்திய JASO MA 2 & MB தரங்களுக்கு ஏற்ப அதிவெப்ப நிலை மற்றும் கடுமையான சவாரி நிலைமைகளுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. பெரும்பாலான ஆசிய நாடுகளைப் போலவே இலங்கையும் அதிக எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களைக் கொண்டுள்ளது. இலங்கை சந்தையில் உலர் கிளட்ச் சிஸ்டம் மற்றும் வெட் கிளட்ச் சிஸ்டம் ஆகிய இரண்டு வகை மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. சவாலான நிலப்பரப்புகளில் பயணம் செய்தாலும் அல்லது நீண்ட தூர பயணங்களின் போதும் ஓட்டுனர்கள் SINOPEC இன் ஆச்சரியமிக்க செயல்திறனை முழுமையாக நம்பலாம்’ என்று ஜெயசாந்த தொட்டஹேவகே மேலும் தெரிவித்தார்.
Fortune Global 500 நிறுவனங்களில் 5 வது இடத்தில் உள்ள சீனாவின் இரண்டாவது பெரிய எரிசக்தி நிறுவனமான Sinopec Lubricant Company 2002 இல் பீஜிங்கில் நிறுவப்பட்டது. சீனாவின் மிகப் பெரிய மசகு எண்ணெய் உற்பத்தியாளர் மற்றும் சந்தைப்படுத்துனராக SINOPEC ஆண்டுக்கு 1.46 மில்லியன் டொன் தொகுக்கப்பட்ட உராய்வுநீக்கி எண்ணெய் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது. SINOPEC தயாரிப்பு வகைகளில் இயந்திர எண்ணெய்கள் கியர் எண்ணெய்கள் ஹைட்ராலிக் எண்ணெய்கள் கிரீஸ்கள் செயற்கை தொழில்நுட்ப எண்ணெய்கள் தானியங்கி பரிமாற்ற எண்ணெய்கள் மற்றும் கடல் சார்ந்த பொறிகளுக்கான எண்ணெய் (Marine Oil) போன்றவை உள்ளன. SINOPEC சீனா முழுவதும் ஐந்து பிராந்திய விற்பனை நிலையங்களுடனும் உலகம் முழுவதும் உள்ள பல துணை விற்பனை நிறுவனங்களுடனும் செயற்படுகிறது. மேலும் உராய்வுநீக்கி எண்ணெய் மற்றும் கிரீஸ் கலவைக்கான 11 உற்பத்திக் கிளைகள் சீனாவிலும் ஒரு கிளை சிங்கப்பூரிலும் நிறுவப்பட்டுள்ளது. மசகு எண்ணெய் உற்பத்தி ஆராய்ச்சி சேமிப்பு போக்குவரத்து விற்பனை மற்றும் சேவை ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கின்ற அதன் சுயாதீன R & D நிலையங்கள் பீஜிங் மற்றும் ஷங்காயில் உள்ளன.
அவற்றின் மேம்படுத்தப்பட்ட கலவைகளுடன்ரூபவ் SINOPEC தரம் வாய்ந்த உராய்வுநீக்கி எண்ணெய் வகையானது இயந்திர செயல்திறனை அதிகரிப்பதுடன் தேய்மானத்தை குறைத்து அதன் இயந்திர ஆயுளை நீடிக்கின்றது இது ஒரு இதமான மற்றும் சக்திவாய்ந்த பயணத்தை உறுதி செய்கிறது. SINOPEC மோட்டார் சைக்கிள் உராய்வுநீக்கி எண்ணெய் வகைகளின் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பின்வருமாறு:
• நிகரற்ற இயந்திர செயல்திறன் மற்றும் சக்தி
• உராய்வு மற்றும் தேய்மானம் குறைக்கப்பட்டு எஞ்ஜின் நீடித்துழைக்கும்
• அதிக வெப்பநிலை மற்றும் தீவிர நிலைமைகளுக்கு எதிரான உயர் பாதுகாப்பு • பல்வேறு மோட்டார் சைக்கிள் வகைகளில் சிறந்த செயல்திறன்
2011 ஆம் ஆண்டு முதல் Interocean Lubricants Ltd, இலங்கை மற்றும் மாலைதீவில் SINOPEC உராய்வுநீக்கிகளுக்கான தேசிய பரிந்துரையாளராக இயங்கி வருகின்றது. அண்மையில் கொழும்பில் உள்ள Shangri-la Hotel இல் நடைபெற்ற நிகழ்வின் போது Interocean Lubricants நிறுவனம் புதிய SINOPEC மோட்டார் சைக்கிள் எண்ணெய்களை அறிமுகப்படுத்தியது. அதன் வர்த்தகர்கள் மற்றும் விநியோகத்தர்களின் முன்னிலையில் புதிய SINOPEC மோட்டார் சைக்கிள் எண்ணெய் வகைகளின் அறிமுகத்தைக் கொண்டாடியதுடன் அதில் நிறுவனத்தின் சிறந்த தயாரிப்புகளையும் புத்தாக்கங்களையும் கொண்ட அர்ப்பணிப்புள்ள மோட்டார் வாகன எண்ணெய் உற்பத்திகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கும் உறுதிபூண்டது. உயர் தரத்துடன்கூடிய செயல்திறனை வழங்கும் ஆர்வத்துடன் SINOPEC உராய்வுநீக்கி எண்ணெய் வகைகள் முன்னோக்கிப் பயணிக்கும் வாகனத் துறையின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதிநவீன தொழில்நுட்பத் தீர்வுகளைத் தொடர்ந்து வழங்கும்.
Interocean Lubricants Ltd, நாடு முழுவதும் அதன் விநியோகத்தர்கள் மற்றும் வியாபாரிகளின் வலையமைப்பின் ஊடாகச் செயற்படுகின்றது.