இலங்கையிலிருந்து சென்னைக்கு விமான சேவையை முன்னெடுக்கும் FitsAir

இலங்கையின் முதலாவது சர்வதேச தனியார் விமான சேவையான FitsAir, சென்னைக்கு அதன் விமான சேவையை ஆரம்பித்துள்ளதன் மூலம் சர்வதேச விமான பயண சேவையை மேலும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து சென்னைக்கு  அண்மையில் தொடங்கி வைக்கப்பட்ட இந்நேரடி விமானம், ஆரம்பத்தில் வாரத்திற்கு மூன்று முறை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, ஏப்ரல் மாதம் முதல் தினமும் இடம்பெறும் சேவையாக மேம்படுத்தப்படவுள்ளது.

இப்புதிய சேவையானது FitsAir நிறுவனத்தின் A320 விமானம் மூலம் முன்னெடுக்கப்படுகிறது. இது பயணிகளுக்கு சௌகரியமான இருக்கைகளைக் கொண்டுள்ளதுடன், வசதியான நேரங்களிலும் இயங்குகின்றது. அந்த வகையில் இதன் அறிமுக சலுகையாக, ரூ. 55,400 எனும் கட்டணத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய இரு வழி விமான டிக்கெட்டை FitsAir வழங்குகிறது.

FitsAir விமான சேவையின் நிர்வாக பணிப்பாளர் Ammar Kassim அவர்கள், இது குறித்து தெரிவிக்கையில், “எமது புதிய சேவையை சென்னைக்கு ஆரம்பிப்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இச்சேவையானது, வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரத்திற்கு செல்வதற்கான, செலவு குறைந்த மற்றும் வசதியான வழியை எமது பயணிகளுக்கு வழங்கும். இந்தியாவுடனான எமது உறவுகளை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாம் ஆவலுடன் உள்ளோம்.” என்றார்.

பல்வேறுபட்ட கலாசாரம் தொடர்பில் சென்னையானது பிரபலமாக விளங்கும் ஒரு நகரமாகும். ஆச்சரியமூட்டும் ஷொப்பிங் அனுபவம் மற்றும் பல்வேறு வகையான உள்ளூர் உணவு போன்ற விடயங்களுக்கும் அது புகழ் பெற்றது. சென்னை நகரம் தென்னிந்தியாவின் ஒரு மையமாக உள்ளதோடு, தமிழ்நாட்டின் ஏனைய நகரங்களுக்குச் செல்வதற்கான சிறந்த புகையிரத மற்றும் வீதிகளையும் அது கொண்டுள்ளது.

FitsAir இன் இச்சேவை விரிவாக்கமானது, நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்க முயற்சியின் ஒரு பகுதி என்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவான பயணத் தெரிவுகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொடர்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இது நிரூபிக்கிறது. இந்த விமான சேவை 3 Airbus விமானங்களை கொண்டு இயங்குவதோடு, மிகவும் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் குழுவையும் கொண்டுள்ளது.

சந்தையின் போட்டித் தன்மைக்கு இணையான விலை மற்றும் நியாயமான பயண அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலம், பிராந்தியத்தில் முன்னணியில் உள்ள குறைந்த கட்டண விமான சேவை வழங்குனராக திகழ்வதை FitsAir இலக்காகக் கொண்டுள்ளது. அதன் மூலம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தனது சேவையை வழங்க அது தயாராக உள்ளது. எதிர்வரும் காலாண்டில் மேலும் 3 புதிய இடங்களுக்கு FitsAir தனது சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு: www.fitsair.com / வாடிக்கையாளர் சேவை: (+94) 117 940 940 / WhatsApp வழியாக (+94) 777 811 118 தொடர்புகொள்ளுங்கள்.

-END-

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *