இலங்கையில் அறிமுகமான realme C11 2021; எதிர்பார்ப்பு மிக்க realme 5G சாதனம் GT ஜூன் 15 உலகளவில் அறிமுகம்

: உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு, தனது கட்டுப்படியான விலையிலான C11 2021 இனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்ததோடு, அதன் உச்சபட்ச சில்லறை விலையாக ரூ. 19, 999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் 5,000 mAh மின்கலம், Android 11, OTG reverse charging, 6.5 அங்குல திரை ஆகியவற்றுடன், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்ப வாழ்க்கையை அனுபவிக்க அது வசதியளிக்கிறது.

ஏற்கனவே கடந்த ஜூன் 03 ஆம் திகதி, பாரிய உலகளாவிய 5G உச்சி மாநாட்டை நடாத்திய realme, எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் 100 மில்லியன் இளம் நுகர்வோர், 5G ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவார்களென அதில் அறிவித்திருந்தது. ஜூன் 15 ஆம் திகதி அறிமுகமாகவுள்ள, மிகப் பாரிய எதிர்பார்ப்பைக் கொண்டுள்ள கையடக்கத் தொலைபேசியான realme GT ஆனது, realme GT தொடரில் மிகவும் உச்ச அனுபவத்தை வழங்கவுள்ளது.

“Sheer Speed Flagship” (தனித்துவமான தூய வேகம்) எனும் அதன் எண்ணக்கருவிற்கு அமைய, realme வெளியீடுகளின் அடிப்படையில், அனைவரையும் மிக எதிர்பார்ப்புக்குள்ளாக்கப் போகும் தொலைபேசியாகவும் அமையவுள்ளது. சக்திவாய்ந்த realme GT ஆனது, இளைஞர்கள் விரும்பும் Grand Touring (GT)அனுபவத்தின் உண்மையான சாரம்சத்தை கையகப்படுத்தியவாறு, அதிநவீன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் நிறுவனத்தின்  ‘முன்னேறுவதற்கு பயமில்லை’ (‘Dare to Leap’) எனும் தரக்குறியீட்டின் உயிர்நாடிக்கு அமைய  எடுத்துக்காட்டுகிறது.

இதில் சுவாரஸ்யமான விடயமாக, ஜூன் 15, UTC+1 01:00 PM மணிக்கு உலகளாவிய வெளியீட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ள realme GT வெளியீட்டுடன் இணைந்தவாறு, realme தனது AIoT மூலோபாயத்தை realme TechLife இன் கீழான தனது நவீன AIoT தயாரிப்புகளையும் அறிவிக்கவுள்ளது. AIoT தொகுதி அமைப்பில் ஒரு பரந்த அளவிலான தயாரிப்புகளை மேலும் உருவாக்குவதன் மூலம், இளம் நுகர்வோரின் நவீன வாழ்க்கை முறையின், கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திற்கும் பணியாற்றுவதற்காக realme பாடுபட்டு வருகிறது.

2021ஆண்டின் realme இனது தனித்துவமான முதன்மை ஸ்மார்ட்போனான realme GT ஆனது, சந்தையில் ஒரு மகத்துவமான வரவேற்பைக் கொண்டுள்ளது. realme GT இனை வெளிநாடுகளிலுள்ள புதிய சந்தைகளுக்கு கொண்டு வருவதன் மூலம், இளைஞர்களுக்கான ஸ்மார்ட்போன் நாமமாக உலகளவில் அது நுகர்வோர் மத்தியில் முதன்மை அனுபவங்களை வழங்குவதற்கான புதிய தரங்களை அமைப்பதில் உறுதியாக உள்ளது.

2020ஆம் ஆண்டில் realme ஆனது, 21 சந்தைகளில் 14 5G சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அதன் அனைத்து தயாரிப்புகளுக்கும் அமைய 40% வெளியீடாகும். 2022 ஆம் ஆண்டில், நிறுவனம் தனது 5G வெளியீடுகளின் எண்ணிக்கையை 20 க்கு மேல் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 50 சந்தைகளில் அதன் விகிதத்தை 70% ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த சில வருடங்களில் 5G மொபைல் சாதனங்களை 100 அமெரிக்க டொலர் எனும் விலையில் அறிமுகம் செய்வதன் மூலம் தொழிற்துறையில் முன்னிலை வகிக்க realme திட்டமிட்டுள்ளது. அத்தகைய பின்னணியில், realme ஆனது 5G தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்துவதற்கான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியதுள்ளடன், ஜூன் 05 உச்சிமாநாட்டில் “Making 5G Global: Accessibility for All” (5G இனை உலகமயமாக்கி அனைவருக்கும் அணுகச் செய்தல்) எனும் எண்ணக்கருவில், உலகளாவிய சந்தைகளில் 5G தொழில்நுட்பத்தை இணங்கச் செய்வதற்கான தனது சமீபத்திய உறுதிமொழியை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *