இலங்கையில் புதிய சாதனங்களை முன்பதிவுக்காக அறிமுகப்படுத்தியுள்ள Huawei

உலகளாவிய புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரும், நம்பர் வன் ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமுமான Huawei, அதன் புத்தம் புதிய Nova 8i கையடக்கத் தொலைபேசியுடன் மேலும் பல புத்தாக்கமான சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அண்மையில் இது தொடர்பில் இடம்பெற்ற பிரத்தியேக வெளியீட்டு நிகழ்வில் அது வெளியிட்டு வைக்கப்பட்டது. Nova தொடரில் அமைந்த ஸ்மார்ட்போனான இது, மற்றுமொரு பல்வேறு அம்சங்கள் நிறைந்த சாதனமாக, வசதியான விலையில் உச்ச மதிப்பை வழங்குகின்றது. ஊடகங்களுடன் இணைந்து Huawei முகாமைத்துவக் குழுவின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தொடர்பில் Huawei யின் இலங்கைக்கான முகாமையாளர் Chris Cai, கருத்துத் தெரிவிக்கையில், “இந்த ஸ்மார்ட்போனை இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துவதில் நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். அதன் பல புதுமையான அம்சங்கள் காரணமாக, இதை எமது Huawei வாடிக்கையாளர்கள் ஆசையுடன் ஏற்றுக்கொள்வார்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம். Huawei Nova 8i ஆனது Nova தொடரின் புத்தம் புதிய அம்சங்கள் நிரம்பிய சாதனமாகும். அத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், பயனர்களின் கைகளில் அழகாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், எமது பெறுமதிமிக்க நுகர்வோரின் சிறந்த நண்பனாக மாறும். புத்திசாலித்தனம், இணையற்ற மின்கல ஆயுள், பலம் வாய்ந்த கெமரா செயல்திறன் ஆகிய உயரிய அம்சங்களுடன், நிறைவான வாழ்க்கையை அனுபவிக்க இது அவர்களுக்கு உதவும்.

Huawei Nova 8i ஆனது Nova தொடரின் அனைத்து ப்ரீமியம் அம்சங்களையும் குறிப்பாக அழகியல் வடிவமைப்பு மற்றும் அழகிய வண்ணங்களையும் கொண்டுள்ளதுடன், சிறந்த தோற்ற அனுபவத்தையும், பிடிக்கும் போதான சிறந்த உணர்வையும் தருகிறது. மீளமைக்கப்பட்ட NCVM கைவினை வடிவமைப்புத்திறன் ஆனது, நிறம் மற்றும் அதன் வண்ண மாற்றத்தின் அற்புதமான காட்சியை உருவாக்குவதோடு, 4D வளைவு அமைப்பானது, துல்லியமாக வடிவமைக்கப்பட்ட வட்ட விளிம்புகளை மிக மிருதுவான தொடுகை அனுபவத்திற்காக கொண்டுள்ளது.

Nova தொடரில், இந்த சாதனத்தை தனித்துவமாக காண்பிக்கும் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க அம்சங்களாக, 6.67 அங்குல விளிம்பற்ற Huawei edgeless திரை, 8GB RAM + 128GB உள்ளக நினைவகம், 64MP பிரதான கெமரா, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கெமரா, 2MP மெக்ரோ கெமரா, 2MP depth கெமரா ஆகிய AI குவாட் (நான்கு) கெமரா அமைப்பானது, அனைத்து சிறந்த தருணங்களையும் தெளிவாகப் படம் பிடிக்க உதவுகின்றது. குறிப்பாக 120° அல்ட்ரா-வைட் ஆங்கிள் கெமரா மூலம் ஒரு பரந்த காட்சியை பெற முடிகின்றது. ஒரு மலைத்தொடர், ஒரு அற்புதமான கட்டடம் அல்லது ஒரு பெரிய குழுவொன்றின் புகைப்படம் போன்ற அனைத்தையும் ஒரே ஷொட்டில் பெற முடியும். Huawei Nova 8i ஆனது எவ்வேளையிலும் அழகான இரவுக் காட்சிகளைப் படம்பிடிக்க உதவுகிறது. இதற்காக அதில் உள்ளமைக்கப்பட்டுள்ள வழுக்களைக் குறைக்கும் noise-reducing algorithm கட்டமைப்பு உதவுகின்றது. எனவே இதற்கு முன்பு இருளில் மறைந்திருந்த காட்சிகளை தற்போது அதன் முழு வெளிப்பாட்டுடன் காணலாம்.

4,300mAh பாரிய மின்கலமானது, மின்கல சேமிப்பு AI அல்கரிதம் செயற்பாடுடன் தொடர்பை பேணி, ஒரு நாள் முழுவதும் நீடித்த மின்கலத்தை வழங்குகிறது. அத்துடன் 66W HUAWEI SuperCharge அம்சமானது, 17 நிமிடங்களில் 60% வரை சார்ஜ் செய்வதுடன், 38 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்வதை சோதனையில் உறுதிப்படுத்தியுள்ளது. தினசரி பயன்பாட்டாளர்களுக்காக இவ்வசதி உதவியாக இருக்கும். இல்லையாயின் அவர்கள் வழக்கம் போன்று தங்கள் தொலைபேசிகளை நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

இதில் உள்ளமைக்கப்பட்ட 7 அன்டெனாக்கள் மற்றும் 180Hz தொடுகை மாதிரி விகிதம் (touch sampling rate) காரணமாக, Huawei Nova 8i ஆனது, கிடையாகவோ, செங்குத்தாகவோ விளையாட்டில் ஈடுபட்ட போதிலும், வலுவான வலையமைப்பு சமிக்ஞையுடன் மிக மிருதுவான கேமிங் அனுபவத்தையும் உறுதி செய்கிறது. அது தவிர, உள்வரும் அழைப்புகள் அல்லது குறுந்தகவல்கள் வரும்போது கூட விளையாட்டின்போது தடையேற்படாமல் இருப்பதை ‘Do Not Disturb’ (தொந்தரவு செய்ய வேண்டாம்) பயன்முறை உறுதி செய்கிறது. ஒரு புத்தாக்கமான இயக்க முன்கணிப்பு (motion prediction) எஞ்சினானது, அதி நவீன GPU Turbo தொழில்நுட்பத்துடன் விளையாட்டின் தடையின்றிய தன்மை மற்றும் மின்சக்தி செயல்திறனை மேம்படுத்துகிறது. குறிப்பாக உயர் FPS கொண்ட விளையாட்டிற்காக, வளைவு நெளிவுகள் மற்றும் போட்டியுடன் தொடர்ந்தும் இருக்க வசதியளிக்கிறது.

இது Huawei AppGallery யினை அணுகுவதற்கான வசதியையும் கொண்டுள்ளது. இது செயலிகளின் பதிவிறக்கங்களின்போது, பல்வேறு தனித்துவமான அம்சங்களையும் பாதுகாப்பையும் வழங்குவதுடன், தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களையும் சேமிக்கிறது.

புதிய Huawei Nova 8i உடன், Huawei Watch GT 3 மற்றும் Huawei MateBook D 15 போன்ற புதிய தயாரிப்புகளும் இதனுடன் இணைந்தவாறு அறிமுகப்படுத்தப்படுகிறது.

Huawei Watch GT 3 ஆனது ஒரு உண்மையான தலைசிறந்த படைப்பாகும், இது நேர்த்தியான 42 மி.மீ. விட்டத்தை கொண்ட ஒளி ஊடுபுகவிடும் மெல்லிய, நீர் போன்ற பளபளப்பை வழங்கும் 3D வளைந்த கண்ணாடியைக் கொண்டுள்ளது. நீடித்த மின்கல ஆயுள், வயர்லெஸ் சார்ஜிங், ப்ளூடூத் அழைப்பு, AI இயக்கம் கொண்ட தனிப்பட்ட பயிற்சியாளர் வசதி, 100 இற்கும் அதிக உடற்பயிற்சி முறைகள், துல்லியமான இதயத் துடிப்பு கண்காணிப்பு, route-back navigation (சென்ற பாதை வழி திரும்புதல்) வசதி, நாள் முழுவதும் SpO2 (குருதி ஒட்சிசன்) கண்காணிப்பு, Huawei App Galery, Huawei Assistant ஆகியவற்றுடன் இது வருகிறது.

Huawei MateBook D 15 ஆனது 15.6 அங்குல அழகிய IPS முழுத் திரையைக் கொண்டுள்ளது. இதில் நம்பமுடியாத வகையிலான, 87% திரைக்கு உடல் விகிதம் மற்றும் 5.3 மி.மீ வரை குறைக்கப்பட்ட திரைச் சட்டகங்களே காணப்படுகின்றன. மிகக் குறைந்த வகையில் 1.53 கிலோகிராம் எடையும் 16.9 மி.மீ தடிப்பத்தையும் கொண்ட மெல்லிய உலோக உடலைக் கோண்ட இந்த மடிகணனி, இலகுவாக கொண்டு செல்வதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 65W USB-C சார்ஜருடன் வருவதுடன், அதன் மின்கலத்தை 30 நிமிடங்களில் 53% வரை சார்ஜ் செய்வதற்கான வசதியை கொண்டுள்ளதுடன், உங்கள் கையடக்கத் தொலைபேசியை விரைவாக சார்ஜ் (fast-charging) செய்வதற்கும், தரவுகளை பரிமாற்றம் செய்வதற்கும் உதவுகிறது. இதில் உள்ள பவர் பட்டனில் உள்ளமைக்கப்பட்ட கைரேகை உணரி உள்ளது. எனவே நீங்கள் ஒரே அழுத்தத்தில் அதனை ON செய்வதுடன் பாதுகாப்பாக அதில் உள்நுழையலாம், இது TÜV Rheinland இனால் சான்றளிக்கப்பட்ட திரையுடன், 16GB DDR4 RAM மற்றும் AMD Ryzen 5 3500U Processor மூலம் இயக்கப்படுகிறது. அத்துடன் PCle SSD பொருத்தப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

Huawei Nova 8i ஆனது வெள்ளி (Moonlight Silver), நீலம் (Interstellar Blue), கறுப்பு (Starry Black) ஆகிய மூன்று நிறங்களில் வருகிறது. இந்த சாதனங்கள், பெப்ரவரி 19ஆம் திகதி முதல் இலங்கையில் முன்கூட்டிய கொள்வனவுப் பதிவுகளுக்காக கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் நாடளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடமிருந்து முன்கூட்டிய கொள்வனவுக்கான பதிவுகளை மேற்கொள்ளலாம் என்பதுடன், அவை ஒவ்வொன்றும் பரிசைப் பெற தகுதியுடையனவாக இருக்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *