இலங்கையில் பெரிய மற்றும் நடுத்தர வணிகத்திற்கான இணையப் பாதுகாப்பு தீர்வுகள் துறையில் சிறந்த பங்காளியாக Eguardian இனால் அங்கீகரிக்கப்பட்ட Softlogic

அண்மையில் The Eguardian Partner Conference 2023 நிகழ்வில் மதிப்புமிக்க ‘Eguardian Partner of the year – Large and Medium Business Partner Sri Lanka’ விருதை Softlogic Information Technologies (SITL) வென்றுள்ளது. இந்த கௌரவிப்பானது, இணையப் பாதுகாப்பு தொடர்பான மூன்று தசாப்த கால நீண்ட பயணத்தில், நிறுவனம் கொண்டுள்ள குறிப்பிடும்படியான முன்னேற்றம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. இது நிறுவனத்தின் ஒப்பிட முடியாத வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அவர்களது வெற்றிக்கு உந்துசக்தியாக இருந்த, அவர்களது இடைவிடாத முயற்சியையும் அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது.

செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற Eguardian Partner Conference 2023 நிகழ்வானது, இலங்கையின் டிஜிட்டல் அரங்கில், குறிப்பாக இணையப் பாதுகாப்புத் துறையில் ஒரு குறிப்பிடும்படியான மைல்கல்லாக அமைந்தது. தொழில் வல்லுநர்கள், செல்வாக்கு மிக்க தலைவர்கள், சிறந்த IT நிறுவனங்களின் வல்லுநர்கள் உள்ளிட்ட 100 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களின் பங்கேற்புடன், அறிவைப் பகிர்வதற்கும், கூட்டாண்மைகளை வளர்ப்பதற்கும், தொழில்நுட்பத் துறையில் முக்கியத்துவமான தனித்துவமான இலக்குகளைப் பின்பற்றுவதற்கும் ஒரு மையமாக இந்த நிகழ்வு அமைந்தது. ஒத்துழைப்பு மற்றும் நிபுணத்துவம் தொடர்பான அறிவைப் பகிர்வதன் மூலம் கூட்டாளர்களுக்குள் உறவுகளை வலுப்படுத்துதல், கூட்டாளர் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவத்தை அதிரித்தல், தொடர்பாடல் வலையமைப்பை எளிதாக்குவதன் மூலம் கூட்டாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், வணிக விரிவாக்கம் மற்றும் பல்வகைமைத் தன்மை ஆகியன இதன் நோக்கங்களில் உள்ளடங்குகின்றன.

இலங்கையில் பாரிய மற்றும் நடுத்தர வர்த்தகப் பங்குதாரர்களில் Eguardian இன் வருடத்திற்கான பங்குதாரராக Softlogic அங்கீகரிக்கப்பட்டமையானது, இணையப் பாதுகாப்புத் துறையில் அவர்களின் சிறப்பான பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இணையப் பாதுகாப்புத் தீர்வுகள் துறையில், Softlogic தொடர்ந்து நிரூபித்து வரும் சிறந்த அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் ஆகியவற்றை இந்த மதிப்புமிக்க விருது பிரதிபலிக்கிறது.

இந்த விருது, Softlogic இல் உள்ள இணையப் பாதுகாப்பு தொடர்பான விற்பனை மற்றும் தொழில்நுட்பக் குழுவின் முழுமையான கூட்டு முயற்சிக்கு ஒரு சான்றாகும். தமது வாடிக்கையாளர்களுக்கான அதிநவீன இணையப் பாதுகாப்புத் தீர்வுகளை உருவாக்கி, செயற்படுத்தி, ஆதரவளிப்பதற்காக அயராது உழைத்து வரும் அவர்கள் வகித்த முக்கிய பங்கை இது எடுத்துக்காட்டுகிறது. அவர்களது நிபுணத்துவம், புத்தாக்கம் மற்றும் சிறந்து விளங்குவதற்கு மேற்கொண்ட இடைவிடாத செயற்பாடுகள் ஆகியன, இத்தொழில்துறையில் உயர் தரத்தை உருவாக்கியுள்ளன.

இவ்விருதானது, ஒரு சக்திவாய்ந்த ஊக்கியாக செயற்படும் என்றும், தமது குழுவினரை மேலும் பல பாரிய வெற்றிகளின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் Softlogic Information Technologies நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை அவர்கள் ஒரு கௌரவமாக மட்டும் பார்க்கவில்லை என்பதோடு, அவர்கள் தொடர்ச்சியாக வழங்கும் இணையப் பாதுகாப்பு சேவைகளின் ஒப்பற்ற தரத்திற்கு இது ஒரு சான்றாகவும் பார்க்கிறார்கள். அவர்களது விசேடத்துவத்திற்கான அர்ப்பணிப்பை இந்த விருது மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, அவர்களது கூட்டாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகள் மற்றும் நல்ல அனுபவங்களை தொடர்ச்சியாக வழங்க இது அவர்களை ஊக்குவிக்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *