இலங்கையில் Y53s ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் VIVO: தெளிவான புகைப்படவியல், நீடித்த பாவனை மற்றும் துரித பயன்பாட்டு அனுபவத்திற்கான சிறந்த சமூக பொழுதுபோக்கு பங்காளியாகும்

உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, இளைஞர்களுக்கான தனது Y தொடர் ஸ்மார்ட்போன்களின் புதிய இணைப்பான Y53s இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 64MP Rear கெமராவுடன் கூடிய Y53s , தெளிவான புகைப்பட அனுபவத்தை வழங்கும் Eye Autofocus அம்சத்துடன் கூடிய, Y தொடரின் முதல் ஸ்மார்ட்போனாகும்.  பல அப்ளிகேஷன்களை ஒரே நேரத்தில் தடங்கல்கள் இன்றி இயக்கக் கூடிய வகையில் 8GB + 4GB Extended RAM^ அம்சத்துடன் இது வருவதுடன், இதன் 33W Flash Charge வேகமான வாழ்க்கைமுறையைக் கொண்ட பாவனையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

நீண்ட நேர கெமரா மற்றும் அப்ளிகேஷன் பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் வகையில்  vivo Y53s ஆனது ஒரு பெரிய 5000mAh மின்கலத்துடன் (Battery) வருவதுடன், 33W FlashCharge தொழில்நுட்பமானது இது படைப்பாளிகள் மற்றும் தொழில்சார் நிபுணர்கள் நாள் முழுவதும் வேலை செய்ய பணியாற்ற வலுவூட்டுகின்றது. ஒரு அழகான பின்புற கெமரா தொகுதியைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், ஒரு நேர்த்தியான 3D வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், இது ஒரு நவநாகரீக சாதனத்திற்கான நுகர்வோர் அபிலாஷைகளுடன் பொருந்துகிறது.

இந்த அறிமுகம் பற்றி vivo Sri Lankaவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கெவின் ஜியாங் கருத்து தெரிவிக்கையில், “vivo தனது வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காகவும், அதிநவீன ஸ்மார்ட்போன்களால் அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவதற்கும் புகழ் பெற்றது. இளைஞர்கள் சார்ந்த Y தொடரின் பாரம்பரியத்தை தொடரும் முகமாக, Y53s அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டிய ஒரு திடமான செயல்திறனை வழங்குகின்றது. Eye autofocus மற்றும் Super Night camera உடன் கூடிய 64MP பின்புற கெமெராவுடன், இந்த smart phone ஆனது மிகத்துல்லியமானதும் விபரமானதுமான காட்சிகளை படமெடுக்கின்றது. மேலும்  இரவிலும் பகலிலும் நினைவுகளை படம்பிடிப்பதற்கு ஏற்ற மிகச்சரியான துணையாக விளங்குகின்றது. Y53s இன் தோற்ற அமைப்பு மற்றும் உள்ளடக்க அம்சங்கள் ஆகியன இளஞ்சமுதாயத்தினரின் பழக்கங்கள், முன்னுரிமைகள் மற்றும் அபிலாஷைகள் குறித்த vivo வின் ஆழமான புரிதலின் ஒரு பிரதிபலிப்பாக விளங்குகின்றன. Y புதிய இணைப்பான இதன் மூலம் நாம் ஒரு திறமையான சமூக பொழுதுபோக்கு மற்றும் புகைப்பட அனுபவத்தை தனது பாவனையாளர்களுக்கு வழங்குகின்றது.

Y53s,  64MP Rear கெமரா*, 2MP Bokeh கெமரா மற்றும் 2MP Macro கெமரா போன்றவற்றைக் கொண்ட முக்கோண கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. Eye Autofocus தொழில்நுட்பத்துடன் இணைந்து, இந்த கெமரா அமைப்பானது ஒரு மென்பொருள்- வன்பொருள் ஒருங்கிணைப்பை உருவாக்குவதனால், தெளிவான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குகின்றது. இதன் உள்ளமைக்கப்பட்டுள்ள Phase Detection Auto Focus (PDAF) தொழில்நுட்பமானது பொருட்களின் மீது தொடர்ச்சியான கவனத்தை செலுத்துவதுடன், மிகவும் சிறப்பான படங்களை வழங்குகின்றது. Y53s இல் உள்ள Super Night பயன்முறை தானாகவே குறைந்த/மங்கலான வெளிச்ச நிலையில் பிரகாசத்தை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் பிரேமில் உள்ள பல்வேறு இரைச்சல் புள்ளிகளை மேம்படுத்துகிறது. Super Night Selfie பல பிரேம்களைப் படம் பிடிப்பதுடன், இரவில் செல்பிக்களின் தெளிவை மேம்படுத்த அவற்றை ஒன்றாக இணைக்கின்றது. 

மேலும் Y53s, நடுக்கங்கள் இன்றி படமெடுக்க ஏதுவாக Ultra-Stable Video சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளதுடன், இது EIS (Electronic Image Stabilization) தொழில்நுட்பம் மூலம் இலத்திரனியல் ரீதியாக பிரேமினை சரி செய்கின்றது.

Y53s  புதிய நேர்த்தியான தோற்றத்தில் வருகின்றது. கண்ணைக் கவரும் பென்டாஸ்டிக் ரெயின் போ (Rainbow) மற்றும் டீப் ஸீ புளூ (Deep Sea Blue) ஆகிய இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை Abans, Dialog, SLT-Mobitel, Singhagiri மற்றும் vivo இனால் அதிகாரமளிக்கப்பட்ட நாடு பூராகவும் உள்ள முகவர்கள், இணையமூடாக BuyAbans.com, Daraz.lk மற்றும் Takas.lk ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். இதன் விலை ரூபா 62,990/- என்பதுடன், Y53s வாடிக்கையாளர்கள் SLT Mobitel இடமிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் 60GB Anytime Data bundle இனை ஒக்டோபர் 31 வரையில் பெற்றுக் கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *