இளைஞர்களுக்கான முழுமையானதொரு ஸ்மார்ட்போன்: நம்பகத்தன்மை கொண்ட அனுபவத்தை வழங்கும் VIVO Y53s

சந்தையில் கிடைக்கும் பல வகையான தெரிவுகளுக்கு மத்தியில் சரியான ஸ்மார்ட்போனை கொள்வனவு செய்வதென்பது இலகுவான காரியமல்ல.உங்கள் முடிவை எளிதாக்க நாங்கள் இங்குள்ளதுடன், எங்கள் வாசகர்கள் தங்கள் அடுத்த ஸ்மார்ட்போனில் என்ன தேடுகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் – நம்பகத்தன்மை.

vivo அண்மையில் இளைஞர்களுக்கான Y series இன் புதிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y53s இனை அறிமுகப்படுத்தியது. Y53s என்பது இளம் ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டதாகும். 8GB + 4GB extended RAM^, Eye Autofocus  உடன் கூடிய 64 MP Rear Camera போன்ற உயர் தர ஸ்மார்ட்போன்களுக்கே உரிய அம்சங்களைக் கொண்ட Y series இன் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். தொழில்நுட்பத்தை அனைத்து மக்களுக்கானதாகவும் மாற்றுவதன் மூலம் vivo எல்லைகளை விரிவடையச் செய்கின்றது. இருப்பினும், இங்கு எழும் பெரிய கேள்வி – Y53s நம்பகமானதா? சரி, நாங்கள் ஸ்மார்ட்போனை பரிசோதிக்க முடிவு செய்து அடுத்த நிலைக்கு சவால் விட்டோம். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இதோ:

கெமரா என வரும் போது தனது புத்தாக்கத்தை vivo புத்துயிரூட்டியுள்ளது. Eye Autofocus மற்றும் Super Night Camera உடன் கூடிய 64MP Rear Camera* வினை Y53s வழங்குகின்றது. மேம்படுத்தப்பட்ட Eye Autofocus பிரேமில் உள்ள பொருளை தொடரவும், தொடர்ச்சியான கவனத்தையும் உறுதி செய்கின்றது. பாவனையாளர்கள் தெளிவின்றி அனைத்து அசைவுகளையும் கச்சிதமாகப் பிடிக்கக் கூடியதாக உள்ளது. Y53s இன் கெமரா அமைப்பானது சிறப்பானதாகவுள்ளதுடன், அதன் புதுமையான பயன்படுத்த இலகுவான கெமரா அம்சங்களுடன் முதற்தர ஸ்மார்ட்போன் கெமராக்களுக்குரிய அனுபவத்தைத் தருகின்றது.

Y53s என்பது இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போன் என்பதுடன், இது எப்போதும் இளம் தலைமுறையினரின் எல்லையற்ற தேவைகளை பூர்த்தி செய்கிறது. 8GB + 4GB extended RAM^ இன் இணைந்த பலத்துடன், பாவனையாளர்கள் அப்ளிகேஷன்களை தடங்கல்கள் எதுவுமின்றி இயக்க முடிவதுடன், எவ்வித சிக்கல்களுமின்றி உயர் தர கேம்ஸ்களையும் விளையாட முடியும். பற்றரியினை (Battery) பொருத்த வரையில், இது பாரிய 5000mAh battery இனை கொண்டுள்ளமையால் Y53s நீண்ட நேரம் இயங்குவது உறுதியாகும். இதன் 33W FlashCharge உடனடியாக மின்னல் வேக சார்ஜிங்கினை வழங்குகின்றது.

சந்தேகத்திற்கு இடமின்றி, Y53s என்பது கண்களுக்கு ஒரு விருந்து மட்டுமல்ல, நேர்த்தியான வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Y53s நேர்த்தியான முப்பரிமாண தோற்றத்தில் வருகின்றது. கண்ணைக் கவரும் பென்டாஸ்டிக் ரெயின் போ (Rainbow) மற்றும் டீப் ஸீ புளூ (Deep Sea Blue) ஆகிய இரண்டு வண்ண வகைகளில் கிடைக்கின்றது. இதன் soft-touch finish கையில் வைத்திருக்க குறிப்பாக கேமிங் விளையாடுவதற்கு சிறப்பாக உள்ளது. உயர்-தெளிவுத்திறன் கொண்ட திரை மற்றும் திரையில் இருந்து காட்சி விகிதம் ஒரு செழுமையான தோற்றத்தை அளிக்கிறது. அத்தோடு அதன் பரந்த திரை உங்கள் காட்சி அனுபவத்தை கணிசமாக அதிகரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனை Abans, Dialog, SLT-Mobitel, Singhagiri மற்றும் vivo இனால் அதிகாரமளிக்கப்பட்ட நாடு பூராகவும் உள்ள முகவர்கள், இணையமூடாக BuyAbans.com, Daraz.lk மற்றும் Takas.lk ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். இதன் விலை ரூபா 62,990/- என்பதுடன், Y53s வாடிக்கையாளர்கள் SLT Mobitel இடமிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் 60GB Anytime Data bundle இனை ஒக்டோபர் 31 வரையில் பெற்றுக் கொள்ள முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *