உங்கள் இரவினை வெளிச்சமாக்கும் 44MP OIS NIGHT SELFIE SYSTEM உடன் கூடிய VIVO V21 5G

செல்பி குயின், செல்பி டைம், செல்பி லவ், செல்பி டிவின்ஸ், வேலைக்குப் பின்னரான செல்பி என இந்தப் பட்டியல் நீள்வதுடன், இன்றைய வேகமாக மாறிவரும் உலகில் அனைத்து வயதுப் பிரிவுக்கும் உட்பட்ட மக்கள் படங்கள், வீலொக் மூலம் தமது வாழ்வை பதிவு செய்கின்றனர். ‘செல்பி கலாசாரம்’ நவீன மனநிலையின் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறுக்க முடியாது. உற்சாகமான நுகர்வோருக்கு உதவ, இந்த தொழிற்துறையானது அதி சிறந்த கெமரா அம்சங்களுடன் புதுமையான ஸ்மார்ட்போன்களை உருவாக்கியுள்ளது, ஆனால் குறைந்த ஒளி சூழலில் மங்கலான மற்றும் படங்கள் மிகப்பெரிய சவாலாக உள்ளன.

இரவு புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராபி ஆகியவற்றின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு vivo நுகர்வோரை மையமாகக் கொண்ட வர்த்தகநாமமாக புகைப்பட ஆர்வலர்களையும் உள்ளடக்க படைப்பாளர்களையும் திருப்திப்படுத்த Optical Image Stabilization (OIS) இனை தனது V21 5G இல் பயன்படுத்தியுள்ளது. படமெடுக்கும் போது போனை சீராக வைத்திருப்பது களைப்பை ஏற்படுத்துமென்பதால், தொழிற்துறையின் முன்னணி OIS தொழில்நுட்பம் பாவனையாளர்கள் நிலையான மற்றும் மிகத் தெளிவான புகைப்படங்களைக் கிளிக் செய்ய அனுமதிக்கிறது. இதில் உள்ளடக்கப்பட்டுள்ள gyroscope, பொருளின் இயக்கத்தைக் கண்டறிந்து, Micro-Electro-Mechanical System (MEMS) கெமரா லென்ஸை அதற்கேற்ப சரிசெய்கிறது.

vivo V21 5G ஒப்பிடமுடியாத செல்பி அனுபவத்திற்காக 44MP OIS நைட் செல்பி முறையை வழங்குகிறது. அதன் 44MP OIS சூப்பர் நைட் செல்பி சூப்பர் லைட் உணர்திறன் மற்றும் இருண்ட சூழலில் சிறந்ததை படமெடுக்க அதிக தாங்குதிறனுடன் வருகிறது. இதன் மூலம் வெளிப்பாட்டு நேரத்தை நீட்டிக்கவும், ஒளி உள்வாங்கும் அளவை அதிகரிக்கவும் முடியும். இது அமைப்பை பிரகாசமாக்கவும் தெளிவான செல்பிக்களைப் பெறவும் உதவும். சரியான தருணங்களை அவற்றின் உண்மையான வடிவத்தில் பிடிக்க உங்களை அனுமதிக்கும் V21 5G இன் சிறந்த கெமரா சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் பயணங்களை மிகவும் மறக்கமுடியாததாக மாற்றும்.

V21 5G’s 44MP OIS சூப்பர் நைட் செல்பி அம்சம் சமூக ஊடக பாவனையாளர்களுக்கும், உள்ளடக்க படைப்பாளர்களுக்கும் மிகவும் பயனளிக்கும். செல்பிகள் மற்றும் வீலொக்கள் என V21 5G இன் புதுமையான கெமரா மூலம், பாவனையாளர்கள் தங்கள் படைப்பாற்றலை சிரமமின்றி வெளிப்படுத்தலாம். இந்த கெமரா தானாகவே புகைப்படங்களை உறுதிப்படுத்துவதுடன், இரைச்சலைக் கூட குறைப்பதுடன், செல்பி பிரியர்களுக்கான புதிய திறன்களை அதன் உயர்தர அம்சங்களுடன் நடுத்தர விலையில் வழங்குகின்றது. vivo புதிதாக இரண்டு OLED  ஸ்பொட்லைட்களை செல்பி கெமராவின் முன்பக்க பெனலின் கீழ் சேர்த்துள்ளதுடன், இது படம் மற்றும் வீடியோ எடுக்கும் போது படங்களை ஸ்டுடியோ விளக்குகளில் எடுப்பது போன்றே எடுக்க முடியும்.

மேலும், முன் கெமராவில் உள்ள OIS ஆதரவானது கெமரா இயக்கத்தின் காரணமாக ஏற்படும் நடுக்கத்தினையும் ஈடுசெய்கிறது. நடுக்கம் காரணமாக கெமரா கீழ்நோக்கி நகரும் போது, இதனை ஈடு செய்யும் முகமாக ​​OIS கெமராவை மேல்நோக்கி நகர்த்த உதவுகின்றது. இதனால் படங்கள் மற்றும் வீடியோக்கள் நிலையானதாக இருக்கும்.  V21 5G’s 44MP OIS Super Night Selfie,  Eye Autofocus  அம்சத்துடன் இணங்குவதால், AF lens தொகுதியனது தானாகவே human eye focus algorithm மூலம் கவனத்தை சரிசெய்கின்றது. பாவனையாளர்கள் இயங்கிக்கொண்டிருக்கும் போது கண்களில் தொடர்ச்சியாக, வேகமாக மற்றும் தெளிவாக கவனம் செலுத்துவதன் மூலம் இது நிகழ் நேரத்தில் மனித கண்களைப் பிடிக்கக் கூடியதாக உள்ளது.

V21 5G என்பது மொபைல் புகைப்பட அனுபவத்தை மேம்படுத்த அறியப்பட்ட ஸ்டைல் மற்றும் புத்தாக்கத்தின் உச்சமாகும். இதன் Dual-mode 5G வலையமைப்பு பாவனையாளர்களுக்கு சீரான 5G இணைப்பு அனுபவத்தை தருகிறது. இதன் 7.29mm  Ultra Slim AG வடிவமைப்பானது நேர்த்தியான தோற்றத்தை வழங்குவதுடன், இயற்கையின் வண்ணங்களால் தூண்டப்பட்ட நிறங்கள் என கவரும் வகையில் அமைந்துள்ளது. உண்மையில், உயர் செயல்திறன் கொண்ட கெமரா மற்றும் வன்பொருள் தீர்வுடன் முதற்தர சாதனத்தை வாங்க விரும்பும் ஒவ்வொரு பாவனையாளரையும் மகிழ்விக்க V21 5G சந்தைக்கு வந்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *